26. குடர்நிண
ராகம் : குந்தலவராளி அங்க தாளம் 2 + 1½ + 2 + 1½ + 2 + 1½ + 2 + 2 (14½) குடர்நிண மென்பு சலமல மண்டு குருதிந ரம்பு சீயூன்பொதிதோல் குலவுகு ரம்பை முருடுசு மந்து குனகிம கிழ்ந்து நாயேன்தளரா அடர்மத னம்பை யனையக ருங்க ணரிவையர் தங்கள் தோடோய்ந்தயரா அறிவழி கின்ற குணமற வுன்றன் அடியிணை தந்து நீயாண்டருள்வாய்