29. தண்டே னுண்டே


ராகம்: பீம்பளாஸ்ஆதி திச்ர நடை
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக்குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற்றடிநாயேன்
மண்டோ யந்தீ மென்கால் விண்டோய்
வண்கா யம்பொய்க்குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற்கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய் வென்றிக்குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற் கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப்புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா செந்திற் பெருமாளே.

Learn the Song



Raga Abheri/Bhimplaas (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S G2 M1 P N2 S    Avarohanam: S N2 D2 P M1 G2 R2 S


Paraphrase

தண் தேன் உண்டே வண்டு ஆர்வம் சேர் (thaNdEn uNdE vaNdu Arvam sEr) : The beetles are humming with pleasure, sucking cool honey குளிர்ந்த தேனைப் பருகி வண்டுகள் ஆர்வத்துடன் மொய்க்கின்ற

தண் தார் மஞ்சுக் குழல் மானார் (thaN thAr manjuk kuzhal mAnAr) : from the flowers donning the black cloud-like hair of women தண்மையான மாலைகளைச் சூடிய மேகம் போன்ற கூந்தலையுடைய பெண்களிடத்தில்; தண் தார் = குளிர்ந்த மலையை அணிந்த; மஞ்சு ஆர் = மேகம் போன்ற; மானார்= பெண்டிர்; குழல் மானார் = கூந்தலை உடைய மாதர்கள்;

தம்பால் அன்பார் நெஞ்சே கொண்டே ( thm pAl anbAr nenjE koNdE) : I am flirting with those women openly அன்பு நிறைந்த மனத்தைக் கொண்டு சல்லாபித்து

சம்பாவஞ் சொற்று அடிநாயேன் (sambAvan sottru adinAyEn) : chatting with them; Am I not baser than a dog? சம்பாஷணைகளைச் செய்கின்ற நாயினும் கீழான அடியேன்; சம்பவம் என்பது சம்பாவம் என வந்தது. சம்பவம் = நிகழ்ச்சி.

மண் தோயம் தீ மென்கால் விண்தோய் வண்காயம் (maN thOyam thee menkAl viNdOy vaN kAyam) : This so-called strong body of mine is made of five elements, namely, earth, water, fire, air and sky; மண், நீர், தீ, மென்மையான காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கையாலான வளமிக்க இந்த சரீரம்

பொய்க்குடில் வேறாய் (poyk kudil vERAy) : and before my life departs this mythical hut of my body பொய்க் குடிசையிலிருந்து உயிர் நீங்கி,

வன்கானம் போய் அண்டா முன்பே (van kAnam pOy aNdA munbE) : for its final journey to the cremation ground, கொடும் சுடுகாட்டுக்கு அருகில் நெருங்குவதற்கு முன்பாக

வந்தே நின்பொற் கழல் தாராய் (vandhE nin poR kazhal thArAy) : please come to me and grant Your lotus feet! என் முன் தோன்றி உன் அழகிய திருவடிகளைத் தந்தருள்வாயாக.

கொண்டாடும் பேர் கொண்டாடும் சூர் கொன்றாய் (koNdAdum pEr koNdAdum sUr kondrAy ) : You killed SUran, who enjoyed the company of those flattering him, தன்னைக் கொண்டாடிப் புகழ்பவர்களுடன் கூடி மகிழும் சூரனை கொன்றவரே!

வென்றிக் குமரேசா (vendrik kumarEsA) : Oh Victorious KumaresA! கொன்றவனே, வெற்றியை உடைய குமரேசனே,

கொங்கார் வண்டு ஆர் பண்பாடும் (kongAr vaNdAr paNpAdum) : At this hill, the beetles make great music around the flowers, பூக்களின் மகரந்தங்களில் நிறைந்த வண்டுகள் அருமையாய் இசைக்கும்; கொங்கு ஆர் = பூந்தாதுக்களில் நிறைந்த;

சீர் குன்றா மன்றற் கிரியோனே (seer kundrA mandraR giriyOnE) : and it is a very famous mount called 'Mandral giri' - VaLLimalai, where You belong! சிறப்பு குறையாத வள்ளிமலையில் வாழ்பவனே, மன்றல் கிரியோனே = நறுமணம் கொண்ட மலைகளுக்கு உரியவனே; அல்லது, திருமணஞ்செய்து கொண்ட மலையாகிய வள்ளிமலையில் வாழ்பவரே!

கண்டாகும் பாலுண்டாய் (kaNdAgum pAluNdAy) : You imbibed the sacred milk of PArvathi, which was sweet as jaggery. கற்கண்டு போன்று இனிக்கும் உமையின் திருமுலைப்பால் உண்டவனே,

அண்டார் கண்டா கந்தப் புயவேளே (aNdAr kaNdA kandhap buyavELE) : You punish all Your enemies, Oh KandhA, the strong shouldered! பகைவர்களைக் கண்டித்தவனே, மணம் கமழும் புயத்தை உடையவனே! அண்டார் = பகைவர்கள்;

கந்து ஆம் மைந்து ஆர் அம் தோள் மைந்தா (kandhu Am maindhu Ar amthOL maindhA ) : Oh KumarA, Your shoulders are solid as a pillar and are also terrific! Maindan means son, young man, disciple, strong, warrior, hero, husband.
கம்பம் போன்ற வலிமையுள்ள அழகிய தோள்களை உடைய குமரா, கந்து ஆம் = கம்பத்துக்கு இணையான; மைந்து ஆர் அம் = வலிமை பொருந்திய அழகிய, தோள் மைந்தா = தோள்களை உடைய வீரனே; மைந்தன் என்பது ஆண்மகனைக் குறிக்கும். மைந்தன் என்றால் தன் பெற்றோர் மட்டுமன்றி உறவினர், ஆசான், சுற்றத்தார் குடும்பங்களையும் பெற்றோருக்கு நிகராக நடத்துபவன் என்று பொருள்.

கந்தா செந்திற் பெருமாளே (kandhA sendhiR perumALE.) : Oh, KandhA, Your abode is ThiruchchendhUr, Oh Great One! கந்தனே, திருச்செந்தூர்ப் பதியில் வாழும் பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே