27. கொம்பனை யார்
Learn the Song
Raga Kharaharapriya (22nd mela)
Arohanam: S R2 G2 M1 P D2 N2 S Avarohanam: S N2 D2 P M1 G2 R2 SParaphrase
கொம்பு அனையார் காது மோது இரு கண்களில் (kombu anaiyAr kAdhu mOdhu iru kaNgaLil ) : (instead of getting perturbed by) the long eyes of creeper-like slender women that reach up to the ears, காதுகளுடன் போர் புரிய வருவது போல நீண்டு இருக்கும் இளங்கொடிபோல் அசையும் பெண்களின் கண்கள்,
ஆமோத சீதள குங்கும பாடீர பூஷண நகம் மேவு கொங்கையில் (AmOdha seethaLa kungkuma pAdeera bUshaNa nagamEvu kongaiyil ) : the happiness-giving, fragrant bosoms smeared with cool vermilion and sandalwood paste, decked with ornaments, and carrying nail marks; மகிழ்ச்சியை தருவதும், குளிர்ந்துள்ள குங்குமக் கலவைகளையும், சந்தனக் குழம்பையும், ஆபரணங்களையும் அணிந்துள்ளதும், மலை போன்றதுமாகிய தனபாரங்களின் அழகிலும்,
நீராவி மேல் வளர் செம் கழு நீர் மாலை சூடிய கொண்டையில் ஆதார சோபையில் மருளாதே (neerAvi mEl vaLar sengazhu neer mAlai sUdiya kondaiyil AdhAra sObaiyil maruLAdhE) : the braided hair ('kondai') embellished with garlands of red lilies ('sem kazhu neer') that grow in ponds; the beauty of the body; instead of getting perturbed by all these, நீர் நிலைகளில் பூத்த செங்கழுநீர் மலர்களை முடித்துள்ள கூந்தலின் அழகிலும், உடம்பின் அழகிலும் மனமயக்கம் அடையாமல்; நீராவி மேல் வளர் = நீர்த் தடாகத்தின் மேல் வளர்ந்துள்ள;
உம்பர்கள் ஸ்வாமி நமோநம எம்பெருமானே நமோநம ஒண் தொடி மோகா நமோநம என (umbargaL swAmi namO nama em perumAnE namOnama oNdodi mOgA namO nama ena ) : (instead I would like to sing)' I bow to thee, oh Chief of the Celestials', 'I bow to thee, my supreme Lord' and 'lover god enamored by the wearer of shining bracelets (Valli)', ஒண்டொடி= ஒண் தொடி = ஒளிவீசும் வளையல்; shining bracelets;
நாளும் உன் புகழே பாடி நான் இனி அன்புடன் ஆசார பூசை செய்து உய்ந்திட வீழ் நாள் படாது அருள் புரிவாயே (nALum un pugazhE pAdi nAnini anbudan AchAra pUjai seydhu uyndhida veeNAL padAthu aruL purivAyE) : singing thus every day without wasting time and worshipping you with traditional rituals offered with love and devotion so that I obtain salvation.
பம்பரமே போல ஆடிய சங்கரி (pambaramE pOla Adiya sankari) : Shankari, dancing like a spinning top (in tandem with Siva's Ananda Tandavam at Chidambaram); (சிவபெருமான் சிற்றம்பலத்தில் ஆடிய அந்நடனத்திற்கிசைய) பம்பரத்தைப்போல் திருநடனம் புரிந்த சங்கரியும்,
வேதாள நாயகி பங்கய சீ பாத நூபுரி கர சூலி (pambaramE pOla Adiya sankari vEdhALa nAyaki pangaya see pAdha nUpuri karasUli) : head of ghosts, one who wears anklets on her lotus-like feet and holds trident in the hands; பூத வேதாள கணங்களுக்குத் தலைவியும், தாமரை மலரையொத்த சிறப்பு வாய்ந்த திருவடிகளில் சிலம்புகளை அணிந்து கொண்டிருப்பவரும், திரிசூலத்தைக் கரங்களில் தரித்துக்கொண்டிருப்பவரும்;
பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு (bangam ilA neeli mOdi bayankari mAkALi yOgini paNdu surA pAna sUranodu edhirpOr kaNdu) : she is of spotless blue complexion; She is Durga, the protector of forests; She induces fear ( and also destroys fear); She is the Great KALi; She is the ultimate manifestation of yOgA; once she combated with the drunken demon SUra
எம் புதல்வா வாழி வாழியே எனும்படி வீறு ஆன வேல் தர என்றும் உளானே மநோகர வயலூரா (em pudhalvA vAzhi vAzhi enum padi veeRAna vElthara endrum uLAnE manOhara vayalUrA) : and gave you the powerful spear blessing 'Long live, my son'; You are immortal! You cheer the minds of all people! You belong to VayalUr!
இன் சொல் விசாகா க்ருபாகர செந்திலில் வாழ்வாகியே (in sol visAgA kripAkara sendhilil vAzhvAgiyE) : You speak sweet words; you are compassionate; You live in Tiruchendur
அடியேன் தனை ஈடேற வாழ்வு அருள் பெருமாளே.(adiEn thanai yeedERa vAzhvaruL perumALE. ) : Bless my life so that I attain salvation, oh supreme God!
Comments
Post a Comment