22. கட்டழகு விட்டு


ராகம்: மனோலயம் சதுஸ்ர த்ருவம் கண்ட நடை (35)
கட்டழகு விட்டுத் தளர்ந்தங் கிருந்துமுனம்
இட்டபொறி தப்பிப் பிணங்கொண்ட தின்சிலர்கள்
கட்டணமெ டுத்துச் சுமந்தும் பெரும்பறைகள்முறையோடே
வெட்டவிட விட்டக் கிடஞ்சங் கிடஞ்சமென
மக்களொரு மிக்கத் தொடர்ந்தும் புரண்டும்வழி
விட்டுவரு மித்தைத் தவிர்ந்துன் பதங்களுறவுணர்வேனோ
பட்டுருவி நெட்டைக் க்ரவுஞ்சம் பிளந்துகடல்
முற்றுமலை வற்றிக் குழம்புங் குழம்பமுனை
பட்டஅயில் தொட்டுத் திடங்கொண் டெதிர்ந்தவுணர்முடிசாயத்
தட்டழிய வெட்டிக் கவந்தம் பெருங்கழுகு
நிர்த்தமிட ரத்தக் குளங்கண் டுமிழ்ந்துமணி
சற்சமய வித்தைப் பலன்கண்டு செந்திலுறைபெருமாளே.

Learn the Song



Manolayam (Janyam of 15th Mela MayamalavaGowlai) By Chitra Nagaraj

Arohanam: S R₁ M₁ P D₁ Ṡ    Avarohanam: Ṡ N₃ D₁ P M₁ R₁ S

Paraphrase

கட்டு அழகு விட்டு தளர்ந்து அங்கிருந்து முனம் இட்ட பொறி தப்பி (kattu azhagu vittu thaLarnthu angirunthu munam itta poRi thappi ) : The vigorous and taut body (of the youth) becomes limp and drooping, and the five sensory organs that once ruled the body degenerates திரண்ட அழகு நீங்கி அங்கே ஒடுங்கியிருந்து, முன்னே நன்கு உதவி செய்த ஐம்பொறிகளும் கலங்கி; இட்டபொறி தப்பிப் = இருந்த புலன்கள் நம்மை விட்டு தப்பிப் போய்;

பிணம் கொண்டதின் சிலர்கள் கட்டணம் எடுத்து சுமந்தும் (piNam koNdathin silargaL kattaNam eduththu chumanthum ) : and finally becomes a corpse and a few people carry it for a fee

பெரும் பறைகள் முறையோடே வெட்ட விட வெட்ட கிடஞ்சம் கிடஞ்சம் என (perum paRaigaL muRaiyOdE vetta vida vetta kidanjam kidanjam ena) : amidst the beating of traditional drums that boom the sound 'vetta vida vetta kidanjam kidanjam'

மக்கள் ஒருமிக்க தொடர்ந்தும் புரண்டும் வழி விட்டு வரும் (makkaL orumikka thodarnthum puraNdum vazhi vittuvarum ) : The mourners follow, with some of them wallowing and rolling on the ground, some help to make way;

இத்தை தவிர்ந்து உன் பதங்கள் உற உணர்வேனோ (iththai thavirnthu un pathangaL uRa uNarvEnO) : When will I avoid this kind of death and realize Your hallowed feet?

பட்டு உருவி நெட்டை க்ரவுஞ்சம் பிளந்து (pattu uruvi nettai kravunjam piLanthu ) : You hit the high Mount Krouncha and severed it

கடல் முற்றும் அலை வற்றி குழம்பும் குழம்ப (kadal mutRum alai vatRi kuzhampum kuzhamba) : and drained and depleted the entire sea of its waves, dwindling it into a muddy puddle.

முனை பட்ட அயில் தொட்டு திடம் கொண்டு எதிர்ந்த அவுணர் முடி சாய (munai patta ayil thottu thidam koNdu ethirntha avuNar mudi sAya) : The tip of Your sharp spear ripped off the heads of the strong and aggressive demons

தட்டு அழிய வெட்டி கவந்தம் பெரும் கழுகு நிர்த்தம் இட (thattu azhiya vetti kavantham perum kazhugu nirththam ida ) : and the headless bodies of the demons danced on the battle field along with large eagles. கவந்தம் (kavantham) : headless body;

ரத்த குளம் கண்டு உமிழ்ந்து மணி சற் சமய வித்தை பலன் கண்டு செந்தில் உறை பெருமாளே. (raththa kuLam kaNdu umizhnthu maNi saR samaya viththai palan kaNdu senthil uRai perumALE. ) : By causing pools of blood and by knocking down precious gems from the crowns of the demons, You have sowed the seeds of good times and ushered in prosperity for the celestials and the sages in Thiruchchendur, which is Your abode, Oh Great One! ரத்தம் குளமாகப் பெருக செய்தும், அசுரர் கிரீடங்களினின்று மணிகள் சிதறி விழ வைத்தும், தேவர்களுக்கு நல்ல காலம் வருவதற்கான விதையைப் பலன் கிடைக்குமாறு நீ நட்டுவைத்த திருச்செந்தூர் நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.


Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே