32. தரிக் குங்கலை

ராகம்: ஆபோகி சதுஸ்ர ஏகம் மிஸ்ர நடை (14)
தரிக் குங்கலை நெகிழ்க் கும்பர
தவிக் குங்கொடி மதனேவிற்
றகைக் குந்தனி திகைக் குஞ்சிறு
தமிழ்த் தென்றலினுடனேநின்
றெரிக் கும்பிறை யெனப் புண்படு
மெனப் புன்கவிசிலபாடி
இருக் குஞ்சிலர் திருச் செந்திலை
யுரைத் துய்ந்திடஅறியாரே
அரிக் குஞ்சதுர் மறைக் கும்பிர
மனுக் குந்தெரிவரிதான
அடிச் செஞ்சடை முடிக் கொண்டிடு
மரற் கும்புரிதவபாரக்
கிரிக் கும்பநன் முநிக் குங்க்ருபை
வரிக் குங்குருபரவாழ்வே
கிளைக் குந்திற லரக் கன்கிளை
கெடக் கன்றியபெருமாளே.

Learn the Song


Know Ragam Abhogi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 G2 M1 D2 S    Avarohanam: S D2 M1 G2 R2 S

Paraphrase

அணிந்துள்ள ஆடை நெகிழ்ந்து, மனம் வேதனைப் படும் இந்தப் பெண் மன்மதனின் பாணங்களால் தாக்கப்பட்டுத் தனிமையில் திகைத்து நிற்க, தென்றற் காற்றும், பிறை நிலவும் அவளை எரித்து மனதைப் புண்படுத்தும் என்று புன் கவிகளை அகப் பொருள் துறையில் பொய்ம்மையான மக்களிடம் பாடி நிற்பர். இவர்கள் திருச்செந்தூரைப் புகழ்ந்து பாடிப் பிழைக்க மாட்டார்களோ, என்று பரிதவிக்கிறார் அருணகிரிநாதர்.

தரிக்கும் கலை நெகிழ்க்கும் பரதவிக்கும் கொடி (tharikkum kalai negizhkkum parathavikkum kodi) : the dress that this woman wears has become loose; தரிக்கும் கலை = அணிந்துள்ள ஆடை;

மதன் ஏ வில் தகைக்கும் தனி திகைக்கும் (madhan E vil thgaikkum thani thigaikkum) : "this woman is languishing in love, being tormented by the arrows shot by Kama or Manmatha, and her dress has become loose; she is lonely and perplexed; "விரக வேதனையால் தவிக்கும் கொடி போன்ற இவள் மன்மதனது பாணத்தால் தடைபடுகின்றாள், தனிமையில் நின்று திகைக்கின்றாள்;

சிறு தமிழ் தென்றலினுடனே நின்று எரிக்கும் பிறை எனப்புண்படும் (chiRu thamizh thendralinudanE ninRu erikkum piRai ena puNpadum ) : "travelling through the gentle and sweet southerly breeze, the crescent moon burns her heart" ; "மெல்லிய இனிய தென்றல் காற்றினுடன் வந்து சந்திரன் நின்று கொளுத்துகிறான் என்று மனம் புண்படுகின்றாள்,

எனப் புன்கவி சில பாடி இருக்கும் சிலர் (ena punkavi sila pAdi irukkum chilar) : thus some poets sing false praises (before patrons)

திருச்செந்திலை உரைத்து உய்ந்திட அறியாரே (irukkum chilar thirucchendhilai uraiththu uyndhida aRiyArE) : Why do they not sing instead about Tiruchendur and seek redemption?

அரிக்கும் சதுர் மறைக்கும் பிரமனுக்கும் தெரி அரிதான அடி ( arikkum chathur maRaikkum piramanukkum theri aridhAna adi ) : Vishnu, the four VEdAs, and BrahmA could never fathom the feet (of SivA);

செம் சடை முடி கொண்டிடும் அரற்கும் ( chem chadai mudi koNdidum araRkum ) : to that Lord Hara, with red tresses,

புரி தவ பார(ம்) கிரி கும்ப நல் முநிக்கும் க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே (puri thava bAra(m) giri kumba nal munikkum krupai varikkum guru para vAzhvE) : and to the holy sage Agasthya born of the earthen pot, who lives in Pothigai Hill and who has accumulated merit through penance, you preached to them, the supreme teacher!; புரி தவ பாரம் = செய்துள்ள தவ வலிமை (நிறைந்த); கிரி (giri) : mountain: here, Podhigai; கும்ப நல் முநி (kumba nal muni) : the good sage born in the 'kumbha' or pot: Agastya; க்ருபை வரிக்கும் குருபர வாழ்வே = அருள் பாலித்த குருபர மூர்த்தியே;

கிளைக்கும் திறல் அரக்கன் கிளை கெட கன்றிய பெருமாளே. (kiLaikkum thiRal arakkan kiLai keda kandRiya perumALE.) : With Your fierce rage, You annihilated the strong demon (SUran) and his entire kin; Oh Great One! கன்றிய பெருமாளே = கோபித்த பெருமாளே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே