14. அவனி பெறும் தோடு


ராகம்: கமாஸ் தாளம்: சதுஸ்ர ரூபகம் (6)
அவனிபெ றுந்தோட் டம்பொற்
குழையட ரம்பாற் புண்பட்
டரிவையர் தம்பாற் கொங்கைக்கிடையேசென்
றணைதரு பண்டாட் டங்கற்
றுருகிய கொண்டாட் டம்பொற்
றழிதரு திண்டாட் டஞ்சற்றொழியாதே
பவமற நெஞ்சாற் சிந்தித்
திலகுக டம்பார்த் தண்டைப்
பதயுக ளம்போற் றுங்கொற்றமுநாளும்
பதறிய அங்காப் பும்பத்
தியுமறி வும்போய்ச் சங்கைப்
படுதுயர் கண்பார்த் தன்புற்றருளாயோ
தவநெறி குன்றாப் பண்பிற்
றுறவின ருந்தோற் றஞ்சத்
தனிமல ரஞ்சார்ப் புங்கத்தமராடி
தமிழினி தென்காற் கன்றிற்
றிரிதரு கஞ்சாக் கன்றைத்
தழலெழ வென்றார்க் கன்றற்புதமாகச்
சிவவடி வங்காட் டுஞ்சற்
குருபர தென்பாற் சங்கத்
திரள்மணி சிந்தாச் சிந்துக்கரைமோதும்
தினகர திண்டேர்ச் சண்டப்
பரியிட றுங்கோட் டிஞ்சித்
திருவளர் செந்தூர்க் கந்தப்பெருமாளே.

Learn the Song

1

Know the Ragam Khamas/Kamas

Janyam of 28th mela Hari Kambhoji
Arohanam: S M1 G3 M1 P D2 N2 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S

Paraphrase

அவனி பெறும் தோடு அம் பொற் குழை அடர் அம்பால் புண்பட்டு அரிவையர் தம்பால் கொங்கைக்கு இடையே சென்று (avani peRum thOttam poR kuzhaiyadar ambAl puNpattu arivaiyar thampAl kongaikku idaiyEsendRu) : Assailed by the dart-like large eyes that reach up to the ears with studs as precious as the earth, I seek the bosoms of these women; இந்த பூமியின் விலைக்கு சமமான மதிப்புள்ள தோடு விளங்கும் மிக அழகிய காதை நெருங்கி வரும் கண் என்ற அம்பினால் மனம் புண்பட்டு, மாதர்களின் மார்பகங்களுக்கு இடையே சென்று; குழை (kuzhai) : ear;

அணை தரு பண்டு ஆட்டம் கற்று உருகிய கொண்டாட்டம் பெற்று அழிதரு திண்டாட்டம் சற்று ஒழியாதே (aNaitharu paNdu Attam katRu urugiya koNdAttam petRu azhitharu thiNdAttam satRu ozhiyAdhE) : and play and become tender in the old games of embrace, but subsequently get mired in destruction. பண்டு ஆட்டம் = பண்டைய ஆட்டமான காம லீலைகள்;

பவம் அற நெஞ்சாற் சிந்தித்து இலகு கடம்பு ஆர் தண்டை பத யுகளம் போற்றும் கொற்றமும் நாளும் பதறிய அங்காப்பும் பத்தியும் அறிவும் போய் (bavamaRa nenjAR chindhiththu ilagu kadambu Ar thaNdai padha yugaLam pOtRum kotRamum nALum padhaRiya angAppum baththiyum aRivum pOy) : I do not have firm determination to contemplate with my whole heart to get rid of this birth by meditating with staunch devotion and relentless yearning for Your feet that are covered with Kadamba flowers and adorned by anklets; பிறவி நீங்க வேண்டி நெஞ்சால் சிந்தித்து, விளங்குகின்ற கடப்பமலர் நிறைந்த, தண்டை சூழ்ந்த உன் பாதங்கள் இரண்டையும் போற்றுகின்ற வீரமும், தினமும் உன்னை நாடிப் பதறுகின்ற ஆசைப்பாடும், பக்தியும், அறிவும் இல்லாது போய்; பவம் (bavam) : birth; கொற்றம் (kotRam) : Bravery/determination, வலிமை; பதறிய அங்காப்பு – முருகன் திருவருளை நாடி, அது கிடைக்கும் நாள் என்றோ என்று ஏங்கி வாய் பிளந்து நிற்றல்.

சங்கை படு துயர் கண் பார்த்து அன்புற்று அருளாயோ ( changai padu thuyar kaN pArththu anbutRu aruLAyO) : Seeing my misery, will you not be compassionate and give me your blessings? அச்சமுறும் துயரில் நான் விழுவதை நீ கண்பார்த்து அன்பு கொண்டு அருள மாட்டாயோ?

The next lines describe Shiva's burning Manmatha with his third eye.

தவ நெறி குன்றா பண்பில் துறவினரும் தோற்று அஞ்ச (thavaneRi kundrA paNbil tuRavinarum thOtRu anja) : Even as the righteous ascetics, who never swerve from the path of penance, were defeated and frightened

தனி மலர் அஞ்சு ஆர் புங்கத்து அமர் ஆடி (thanimalar anju Ar pungaththu amarAdi) : when the (love) war is initiated by hurling arrows of five types of flowers; தனது ஒப்பற்ற ஐந்து மலர்கள் நிறைந்த குவியலைக் கொண்டு போர் புரிந்து, புங்கம் (pungam) : heap, குவியல்; அமர் (amar ) : war;

தமிழ் இனி தென் கால் கன்றில் திரிதரு கஞ்சா கன்றை தழல் எழ வென்றார்க்கு (thamizh ini then kAl kandRil tiRiri tharu kanjAk kandRai thazhal ezha vendRArkku ) : by the son of Lakshmi (Manmatha), riding through the southerly breeze pleasant as the Tamil language. Shiva won this Manmatha by emitting fire (and burning Manmatha); தமிழ்ப் போன்ற இனிமையுடைய இளமை பொருந்திய தென்றல் காற்றின்மீது ஏறி உலாவுகின்றவனும் திருமகள் புதல்வனும் ஆகிய மன்மதனை நெருப்பு எழ எரித்து வென்ற சிவபெருமானுக்கு தென் கால் கன்றில் திரி (kAl kandRil tiRiri) : one who rides on the Southerly breeze; இளந் தென்றல் காற்றில் உலாவும், கஞ்சா கன்றை (kanjA kandRai) : Lakshmi's son; கஞ்சம் (kanjam) : lotus; கஞ்சை (kanjai) : Lakshmi; தழல் (thazhal) : fire or spark;

அன்று அற்புதமாக சிவ வடிவும் காட்டும் சற்குருபர (andRu aRpudhamAga siva vadivam kAttum saRgurupara ) : To that Lord Shiva, Oh My pious great master, You showed wonderfully the significance of the blissful True Knowledge or the splendid Siva form; பேரின்ப உண்மையாம் மங்களப்பொருளைக் காட்டிய சற்குருபரனே

தென் பால் சங்க திரள் மணி சிந்தா சிந்து கரை மோதும் (thenpAR changath thiraLmaNi sindhA chindhu karai mOdhum ) : On the seashore in the southern direction, where conch shells and gems are strewn by the surging waves,

தினகர திண் தேர் சண்ட பரி இடறும் கோட்டு இஞ்சி (dhinakara thiNdEr sanda pari idaRum kOttu inji) : and where tall fortress walls obstruct the movement of the horses bound to powerful chariot of the sun, சூரியனுடைய வலிய தேரில் பூட்டியுள்ள வேகமிக்க குதிரைகள் இடறும் அளவுக்கு உயர்ந்த சிகரங்களுடன் கூடிய மதில்கள் சூழ்ந்து உள்ள; இஞ்சி = மதில்;

திரு வளர் செந்தூர் கந்த பெருமாளே (thiruvaLar sendhUr kandhap perumALE ) : is the prosperous and lush town of ThiruchchendhUr, which is Your abode, Oh KandhA, the Great One! திருமகளின் மேன்மை, பெருமை முதலிய யாவும் எப்பொழுதும் வளர்ந்து கொண்டேயிருக்கும் திருத்தலமாகிய திருச்செந்தூரில் எழுந்தருளியுள்ள கந்தக் கடவுளே!

Story of Manmatha and its Significance

The celestials were put to deep hardship by the demons lead by Surapadma, Simhamukha and Tharaka. Surapadma had the boon that none other than the son of shiva could kill him. As Lord Shiva and Parvati sat in deep meditation, the celestials, out of the desperation, sent kAma (cupid) forcibly to induce lust in God for Parvati. Kamadeva takes the form of the fragrant southern breeze, and creates an untimely spring. As he shoots an arrow, the Lord opens slightly the third-eye, and Kama is incinerated. Later, in response to the prayers of Rati, he is restored to life, but without a body.

Kamadeva has five arrows which are sometimes associated with five flowers (puṣpa-bāṇa), but are also associated with five effects that desire has on one afflicted by it. Kamadeva's five arrows are said to be fascination, disturbance, burning, desication and destruction. His bow is made of sugarcane with a string of honeybees, and his arrows are decorated with five kinds of fragrant flowers. The five flowers are Ashoka tree flowers, white and blue lotus flowers, jasmine and mango flowers.

Manmatha ('Churner of hearts') or Kamadeva is the god of desire. The dualistic world emerges from non-dualism as a result of Kama or desire. Lord Siva is supposed to have three eyes. Unlike the two material eyes through which we experience the material world, the third eye represents atma gnana (knowledge of the atma or self) through which we burn all our desires and 'see' the higher reality.


Comments

  1. Excellent meaning and splitting of words, thank you , very useful for me .

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே