82. பஞ்ச பாதகன்
ராகம் : ஹுசேநி அங்க தாளம் (8) 1½ + 2 + 1½ + 1 + 1½ + 1 பஞ்ச பாதகன் பாவிமுழு மூடன் வெகு வஞ்ச லோபியன் சூதுகொலை காரன்மதி பண்கொ ளாதவன் பாவகட லூடுநுழை பவுஷாசை பங்க ன் மோதியம் பாழ்நரகில் வீணின் விழ பெண்டிர் வீடுபொன் தேடிநொடி மீதில்மறை பஞ்ச மாமலம் பாசமொடு கூடிவெகு சதிகாரர் அஞ்சு பூதமுண் டாகடிய காரரிவர் தங்கள் வாணிபங் காரியம லாமலரு ளன்பர் பாலுடன் கூடியறி யாதபுக ழடியேனை அண்டர் மாலயன் தேடியறி யாதவொளி சந்த்ர சேகரன் பாவைவிளை யாடுபடி கந்த நாடுடன் கூடிவிளை யாடஅருள் புரிவாயே