51. வஞ்சத்துடனொரு
Learn the Song
Manolayam (Janyam of 15th Mela MayamalavaGowlai) By Chitra Nagaraj
Arohanam: S R₁ M₁ P D₁ Ṡ Avarohanam: Ṡ N₃ D₁ P M₁ R₁ SParaphrase
வஞ்சத்துடன் ஒரு நெஞ்சில் பல நினை வஞ்சி கொடி இடை மடவாரும் (vanjaththudan oru nenjil pala ninai vanjik kodi idai madavArum ) : Women with deceitful minds who harbor evil designs and who have waists slender as the vanji creeper, and
வந்தி புதல்வரும் அந்தி கிளைஞரும் மண்டி கதறிடு வகை கூர (vandhip pudhalvarum andhik kiLainyarum maNdik kadhaRidu vagai kUra) : obedient children and close relatives assemble and wail; அந்தி கிளைஞர் (andhik kiLainyar) : நெருங்கிய சுற்றத்தார்
அ(ம்)ச(ம்) கலைபடு பஞ்சு இப் புழு உடல் அங்கிக்கு இரை என உடன் மேவ (anjak kalaipadu panjip puzhu udal angik kiraiyena udan mEva) : around my body, which is filled with worms, disintegrates into its elements and becomes prey to fire; உடலின் அம்சங்கள் கலைபட்டு, புழுக்களால் நிறைந்த, பஞ்சு போலான இந்த உடம்பு, நெருப்புக்கு இரையாக்கப் படுவதற்கென உடனே எடுத்துச் செல்லப்பட, அ(ம்)ச(ம்) (amsam) : (உடல்)உறுப்புகள்;
அண்டி பயம் உற வென்றி சமன் வரும் அன்றைக்கு அடி இணை தரவேணும் (aNdi bayamuRa vendRi chaman varum andRaik kadiyiNai thara vENum ) : and Yama comes threateningly and induces fear, on that day please grant me your twin feet.
கஞ்ச பிரமனை அஞ்ச துயர் செய்து கன்ற சிறை இடும் அயில் வீரா (kanja biRamanai anjath thuyar seydhu kandRa siRaiyidum ayilveerA ) : My brave Lord wielding the holy spear, you frightened and imprisoned Brahma seated on the lotus,
கண்டு ஒத்தன மொழி அண்ட திரு மயில் கண் தத்து அழகிய திரு மார்பா (kaNdOth thanamozhi aNdath thirumayil kaN thanthu azhagiya thirumArbA) : Your beautiful chest entices and draws the eyes of the celestial damsel Devasena, who has candy-like sweet voice, கண்டு = கற்கண்டு; கண் தத்து = பார்வை பாய்கின்ற;
செம் சொல் புலவர்கள் சங்க தமிழ் தெரி செந்தில் பதி நகர் உறைவோனே (senchol pulavargaL sangath thamizh theri sendhil padhi nagar uRaivOnE) : You reside at Tiruchendur that has been praised and sung by poets with beautiful words
செம் பொன் குல வட குன்றை கடல் இடை சிந்த பொர வல பெருமாளே. (sempoR kulavada kundrai kadalidai sindhap poravala perumALE.) : You blasted the northern Hills of Krouncha with golden crests into pieces and threw into the sea! செம்பொன் நிறத்துடன் வடக்கே நின்ற கிரெளஞ்சமலையை கடலினிடையே சிதறி விழுமாறு போர் புரியவல்ல பெருமாளே.
Comments
Post a Comment