103. குமர குருபர


ராகம் : பிலஹரி தாளம்: 2 + 1½ (3)
குமர குருபர முருக சரவண
குகசண் முககரி பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள்குருமணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதினமுனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுரலறியாயோ
திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபடவருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொருமயில்வீரா
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ்பெருமாளே.

Learn The Song


Raga Bilahari (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P D2 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

kumara gurupara muruga saravaNa
guha shaNmuga kari piRagaana
kuzhaga sivasutha sivaya namavena
kurava naruLguru maNiyE endru
amudha imaiyavar thimirdha midukadal
adhena anudhinam unaiyOdhum
amalai adiyavar kodiya vinaikodum
abhaya midukural aRiyaayO
thimira ezhukadal ulaga muRipada
dhisaigaL podipada varusoorar
sikara mudiyudal bhuviyil vizhavuyir
thiRaiko damarporu mayilveeraa
namanai uyirkoLu mazhalin iNaikazhal
nadhikoL sadaiyinar gurunaathaa
naLina gurumalai maruvi amar tharu
navilu maRai pugazh perumaaLE.

Paraphrase

குமர குருபர முருக சரவண குக சண்முக (kumara gurupara muruga saravaNa guha shaNmuga) : "KumarA, GuruparA, MurugA, SaravaNA, GuhA, ShanmugA,

கரி பிறகான குழக சிவசுத (kari piRagAna kuzhaga sivasutha) : the younger brother of GanEshA with an elephant-face, Son of SivA,

சிவய நம என குரவன் அருள் குருமணியே என்று (sivaya namavena kurava naruLguru maNiyE ) : the Master of masters who manifests as Supreme Master before those who recite 'sivayanama' the panchakshara mantra": சிவாயநம என்னும் பஞ்சாட்சரத்துக்குக் குருவான சிவன் அருளிய குருமணியே என்றெல்லாம்,

அமுத இமையவர் திமிர்தம் இடுகடல் அதென (endru amudha imaiyavar thimirdha midukadal adhena) : like the above chants that are loud like the sound made by the Milky Ocean churned by the Devas for Divine Nectar;

அநுதினம் உனையோதும் அமலை அடியவர் (anudhinam unaiyOdhum amalai adiyavar) : your blemishless devotees pray to you everyday (like the devas as described above),

கொடிய வினைகொடும் அபய மிடுகுரல் அறியாயோ (kodiya vinaikodum abhaya midukural aRiyAyO) : don't You hear their appeal made in complete surrender to You to do away with all their Karmas (bad deeds)?

திமிர எழுகடல் உலக முறிபட திசைகள் பொடிபட (thimira ezhukadal ulaga muRipada dhisaigaL podipada) : (In the war with asuras) the seven dark seas and the seven worlds were destroyed and all the eight directions were crushed;

வருசூரர் சிகர முடியுடல் புவியில் விழ (varusUrar sikara mudiyudal bhuviyil vizha) : the tufts and bodies of the confronting asuras were knocked down;

உயிர் திறைகொடு அமர்பொரும் அயில் வீரா (uyir thiRaikodu amar porum ayil veerA) : and You, with the Great Spear, snatched away their lives in the war.

நமனை உயிர்கொளும் அழலின் இணைகழல் நதிகொள் சடையினர் குருநாதா (namanai uyirkoLum azhalin iNai kazhal nadhikoL sadaiyinar gurunAthA) : You are the Guru of Lord Shiva whose tresses bear the river Ganga and whose fiery feet took the life of Yama, the god of death; அழல் (azhal) : fire;

நளின குருமலை மருவி அமர் தரு (naLina gurumalai maruvi amar tharu) : You have an abode at SwAmimalai, full of lotus-carrying water bodies;

நவிலு மறைபுகழ் பெருமாளே (navilu maRai pugazh perumALE) : and You are praised by VEdAs (scriptures) that are chanted, Oh Great One!

சிவன் முருகனிடம் உபதேசம் பெறுவதன் பொருள்

தன்னிடத்தில் இருந்த ஆதி நாதமாகிய பிரணவம் சலன நிலையில் விரிந்ததை சிவன் கேட்டான் என்பதுதான் சிவன் முருகனிடம் உபதேசம் பெற்றான் என்பதன் உட்பொருள். சிவத்தில் ஒடுங்கிக் கிடந்த நாதம் சக்தியின் இருத்தலால் முருகனாக விரிந்தது. அப்படி விரிந்த அந்த பிரணவ நாதத்தை சிவனே முதல் முதலில் கேட்டார் என்பதே தத்துவம்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே