398. பிறவியலை
Learn The Song
Raga Kalyani (65th Mela)
Arohanam: S R2 G3 M2 P D2 N3 S Avarohanam: S N3 D2 P M2 G3 R2 SParaphrase
பிறவிக் கடலிலிருந்து விடுவிப்பாய் என்று இறைவனிடம் இறைஞ்சுகிறார் அருணகிரிநாதர். குரு உபதேசத்தால் மட்டுமே மாயையின் ஆதிக்கத்தில் சிக்கி இருக்கும் உயிர்கள் ஆத்ம ஞானம் பெற்று பிறவி கடலிலிருந்து விடுபட முடியும். மாயை என்றால் என்ன? பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாய், நித்தமாய்ச் இருக்கும் முதல்வனுக்குப் பரிக்கிரக சத்தியாய் உள்ளது மாயை எனப்படும். மா என்பது ஒடுங்குதல், யா என்பது வருதல். ஆகலின் எல்லாக் காரியங்களுந் தன்பால் வந்து ஒடுங்குதற்கும் தன்னினின்றுந் தோன்றுதற்குங் காரணமாய் நின்றது மாயை எனப்படும். ஒளி வந்தவுடன் இருள் நீங்குவது போல ஞானம் வந்தவுடன் மாயை அழிகிறது. பசுவான உயிரும் பதி ஞானம் பெற்று பிறப்பு சுழலிலிருந்து விடுபட்டு பேரானந்தம் அடைகிறது.
பிறவியலை ஆற்றினிற் புகுதாதே ( piRavi alai AtriniR pugudhAdhE) : In order that I do not fall again into the turbulent river of birth, பிறவி என்ற அலைகள் வீசும் ஆற்று வெள்ளத்தில் மீண்டும் புகாமல் இருக்க,
பிரகிருதி மார்க்கமுற்று அலையாதே (pirakiruthi mArggamutr alaiyAdhE) : and in order that I do not roam about aimlessly tossed about by the paths of Maya, இயற்கை (மாயை) செலுத்தும் வழியில் சென்று இஷ்டப்படி திரியாமல் இருக்க;
இந்த மாயை பக்தி, ஞான, கர்மயோகங்களால் விலகும்.
உறுதி குரு வாக்கியப் பொருளாலே (uRudhi guru vAkkiyap poruLAlE) : with Your firm and masterly interpretation of the Truth, நீயே குருவாய் வந்து உறுதியான ஆத்ம ஞான உபதேசம் மூலம், ஸ்வானுபூதியாய் அபரோக்ஷமாய் உண்மைப் பொருளைத் உணரப் பெற்று,
உனது பத காட்சியைத் தருவாயே (unadhu padha kAtchiyaith tharuvAyE) : grant me vision of Your hallowed feet. உனது திருவடிகளின் தரிசனத்தை அருள்வாயாக.
அறு சமய சாத்திரப் பொருளோனே (aRusamaya sAththirap poruLOnE) : You are the essence of the scriptures of the six sects of religion. ஆறு சமயங்களின் சாத்திரங்களுடைய சாரமாய் நிற்பவனே,
அறிவுள் அறிவார்க் குணக் கடலோனே (aRivuL aRivAr guNak kadalOnE) : For those who discern You in their intellect, You are the ocean of all virtues! தம் அறிவிலே உன்னை அகக் கண்ணால் உணர்ந்து அறிந்தவர்களுக்கு நற்குண சமுத்திரமானவனே,
குறு முனிவன் ஏத்து முத்தமிழோனே ( kuRu munivan Eththu muth thamizhOnE) : You are the Lord of the three branches of Tamil, worshipped by the diminutive sage, Agasthya! குறுமுனி அகத்தியர் புகழும் முத்தமிழ் வித்தகனே,
குமர குரு கார்த்திகைப் பெருமாளே.(kumara guru kArththikaip perumALE.) : Oh KumarA, the Master! You are adored by the KArththigai maids, Oh Great One! குமர குருவே, கார்த்திகைப் பெண்களின் பெருமாளே.
Very nice
ReplyDelete