405. பொதுவதாய்


ராகம் : ஹம்சத்வனிதாளம்: மிஸ்ரசாபு (3½)
பொதுவ தாய்த்தனி முதல தாய்ப்பகல்
இரவு போய்ப்புகல்கின்றவேதப்
பொருள தாய்ப்பொருள் முடிவ தாய்ப்பெரு
வெளிய தாய்ப்புதைவின்றியீறில்
கதிய தாய்க்கரு தரிய தாய்ப்பரு
கமுத மாய்ப்புலனைந்துமாயக்
கரண மாய்த்தெனை மரண மாற்றிய
கருணை வார்த்தையிருந்தவாறென்
உததி கூப்பிட நிருத ரார்ப்பெழ
உலகு போற்றிடவெங்கலாப
ஒருப ராக்ரம துரக மோட்டிய
வுரவ கோக்கிரிநண்பவானோர்
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
முலைகள் தேக்கிடவுண்டவாழ்வே
முளரி பாற்கடல் சயில மேற்பயில்
முதிய மூர்த்திகள்தம்பிரானே.

Learn The Song



Know The Raga Hamsadhwani (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S R2 G3 P N3 S    Avarohanam: S N3 P G3 R2 S

Paraphrase

பொதுவதாய் தனி முதல் அதாய் (podhuvadhAy thani mudhaladhAy) : You are the common factor of all lives. You are the unique primordial substance. எவ்வுயிர்க்கும் பொதுவானதாகி, தனிப்பட்ட மூல முதற் பொருளாகி,

பகல் இரவு போய்ப் புகல்கின்ற வேதப்பொருள் அதாய் (pagal iravu pOyp pugalgindra vEdhap poruL adhAy) : You are the essence of all vedic scriptures that are recited, and You lie beyond days and nights. பகல், இரவு இவைகளைக் கடந்த சொல்லப்படுகின்ற வேதப் பொருளாகி,

பொருள் முடிவு அதாய் பெரு வெளியதாய் (poruL mudivadhAyp peru veLiyadhAy) : You are the ultimate culmination of that essence. You are the widest cosmos. அப்பொருளின் முடிவானதாகி, பெரிய வெட்ட வெளியாய் ஆகி,

புதைவு இன்றி ஈறு இல் கதி அதாய் (pudhai vindri yeeRil gathiyathAy) : You are not concealed. You are endless. You are the refuge of all. மறைவு யாதொன்றுமன்றி, முடிவு இல்லாததான, யாவற்றுக்கும் அடைக்கலமாகி,ஈறு (eeRu) : limit, end, boundary;

கருத அரியதாய் பருக அமுதமாய் (karudha ariyathAy paruga amuthamAy) : You are beyond comprehension. You are sweet like the divine nectar being imbibed. எண்ணுவதற்கும் முடியாததாகி, உண்ணும் அமுதம்போல் இனிமையானதாகி,

புலன் ஐந்தும் மாய (pulan aindhu mAya) : Destroying the five perceptory senses (namely, taste, light, feeling, sound and smell), சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களும் ஒடுங்கி அழிய,

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (திருக்குறள்)

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளின் வழிப் பிறக்கும் தீய ஆசைகளை அழித்து கடவுளின் பொய்யற்ற ஒழுக்க வழியிலே நின்றவர் நெடுங்காலம் வாழ்வார்.
ஜீவன்(ஆன்மா) உடலாகிய தேரில், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து குதிரைகளாகிய ஐம்புலன்கள் பூட்டப்பட்டிருக்கின்றன . இந்த குதிரைகளைக் கட்டியிருக்கின்ற கடிவாளம் மனம். இந்தத் தேரை ஓட்டவேண்டிய புத்தி ஒழுங்காகச் செயல்பட்டால் மட்டும் ரதம் சரியாகப் பயணப்படும்.
,

கரணம் மாய்த்து எனை (karaNam mAyththu enai:) : and annihilating the five sensory organs (namely, mouth, eyes, skin, ears and nostrils), மெய், வாய், கண், மூக்கு, செவி எனப்படும் ஐம்பொறிகளின் சேட்டைகளை அழித்து, கரணம் என்றால் புலன் என்றும் மனம் என்றும் பொருள்; இங்கே (அந்தக்)கரணம் = மனம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். செறியும் இரு வினை கரணம் மருவு புலன் ஒழிய உயர் திருவடியில் அணுக வரம் அருள்வாயே (அறிவழிய)

மரணம் மாற்றிய கருணை வார்த்தையில் இருந்தவாறு என் (maraNa mAtriya karuNai vArththai irundhavARu en:) : You have removed my fear of death; how wonderful is Your gracious teaching! எனது மரண பயத்தை நீக்கிய உனது அருள் மொழி உபதேசம் எத்தனை உயர்ந்த நிலையான அற்புதம்?

உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பு எழ (udhadhi kUppida nirudharArp pezha) : The seas bellowed; the demons made a loud noise; கடல் ஓலமிடவும், அசுரர்கள் பேரொலி செய்யவும்,

உலகு போற்றிட வெம் கலாப ஒரு பராக்ரம துரகம் ஓட்டிய உரவ (ulagu pOtrida venkalAba oru parAkrama thuragam Ottiya urava) : and the entire world praised You in awe when You mounted the attractive peacock with pretty feathers, driving it like a matchless brave horse, Oh valorous One! உலகத்தோர் போற்றிப் புகழவும், வசீகரம் வாய்ந்த தோகை மயிலாகிய, ஒப்பற்ற வீரமான குதிரையை, ஓட்டிச் செலுத்திய வலிமை வாய்ந்தவனே, உரவன் (uravan) : strong man, வலியோன்;

கோக் கிரி நண்ப (kOk giri naNba) : You are an adoring friend of all mountains in this world! பூமியிலுள்ள மலைகளிடத்தே விருப்பம் உள்ளவனே,

வானோர் முதல்வ ( vAnOr mudhalva ) : You are the leader of the celestials. தேவர்களின் தலைவனே,

பார்ப்பதி புதல்வ (pArppathi pudhalva) : You are the beloved child of Mother PArvathi! பார்வதியின் மகனே,

கார்த்திகை முலைகள் தேக்கிட உண்ட வாழ்வே (kArthigai mulaigaL thEkkida uNda vAzhvE) : You are the dear child of all the KArththigai damsels who nursed You with abundant milk from their bosoms! கார்த்திகைப் பெண்களின் மார்பகங்களில் பால் நிரம்பி வர அதைப் பருகிய செல்வமே,

முளரி பாற்கடல் சயிலம் மேல் பயில் (muLari pAR kadal sayila mER payil ) : They have their seats on the lotus, the milky ocean and the mount KailAsh; தாமரை மீதும், திருப்பாற்கடலிலும், கயிலை மலையின் மீதும் முறையே வீற்றிருக்கும் சயிலம் (sayilam) : mountain; முளரி (muLari) : lotus;

முதிய மூர்த்திகள் தம்பிரானே. (muthiya mUrtthikaL thambirAnE.) : They are respectively the elder Gods, namely BrahmA, Vishnu and SivA. You are the Leader above all of them, Oh Great One! மூத்தவர்களாகிய அயன், அரி, அரன் எனப்படும் கடவுளருக்கும் தனிப்பெரும் தலைவனே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே