ஸ்ரீஐயப்பன் நாமாவளி - நினைவிலும் ஐயப்பா

Guruji Shri A.S.Raghavan is well known for singing melodious namavalis on gods other than Murugan too. He has set them to musical tunes that build a scintillating crescendo, being based on raagas that at once melt the heart. Here's one of the Ayyappa namavalis that he would sing in special bhajans.

ராகம்: சுப பந்துவராளி தாளம் ஆதி

நினைவிலும் ஐயப்பா! கனவிலும் ஐயப்பா!
நீல வண்ண கட்டழகா நீ வருவாய் ஐயப்பா

சபரிமலை தெய்வமே! என் சாஸ்தாவே ஐயப்பா
அஞ்சேல் எனக் காத்திடுவாய் ஐயப்பாவே ஐயப்பா

நித்ய வஸ்துவாய் எங்கும் நிறைந்தவனே ஐயப்பா - உன்
தத்வ ரூப காட்சி காண தனித்து வந்தேன் ஐயப்பா

வண்ண வண்ண களஞ்சியமே வடிவழகா ஐயப்பா - என்
எண்ணமதில் கலந்திருப்பாய் என் துரையே ஐயப்பா

ஆடுகின்ற அன்பருள்ளே ஆடுகின்றாய்ஐயப்ப - உன்னை
பாடுகின்ற பண்களிலே பரவி நிற்பாய் ஐயப்பா

கோழை எந்தன் குணமறிந்து குறை தீர்ப்பாய் ஐயப்பா - நான்
ஏழை என்றே அறியாயோ ஏகனே என் ஐயப்பா

தாய் தந்தையும் நீயல்லவே தாரகனே ஐயப்ப - அதை
ஆராய்ந்தே அண்டி வந்தேன் ஆதரிப்பாய் ஐயப்பா

வறுமை நீக்கி வரந்தருவாய் வரதனே என் ஐயப்பா - என்
சிறுமை கண்டு இரங்காயோ சீலனே என் ஐயப்பா

வாழி சொல்லி வாழ்த்தி வந்தேன் வரமளிப்பாய் ஐயப்பா - என்
ஊழ்வினையை தீர்த்தருள்வாய் உத்தமனே ஐயப்பா.

நீ வருவாய் ஐயப்பா - சாஸ்தாவே ஐயப்பா
ஐயாவே ஐயப்பா - காண வந்தேன் ஐயப்பா
காத்தருள்வாய் ஐயப்பா - பாலகனே ஐயப்பா
வேதியனே ஐயப்பா - வடிவழகா ஐயப்பா
என் துரையே ஐயப்பா - பூரணனே ஐயப்பா
நிர்மலனே ஐயப்பா - குறை தீர்ப்பாய் ஐயப்பா
ஏகனே ஐயப்பா- தாரகனே ஐயப்பா
வரதனே ஐயப்பா - சீலனே என் ஐயப்பா
வாழ்த்தி வந்தேன் ஐயப்பா - வரமளிப்பாய் ஐயப்பா
ஐயப்பா சரணம் சரணம் பொன்னய்யா
சாமியே சரணம் சரணம் பொன்னய்யா

Listen to Two Renditions of 'Ninaivilum' By Guruji





Here's one more namavali on Ayyappa.

ஐயப்பா சரணமென்றே - ஐயப்பா சரணமென்றே
ஐயப்பா சரணமென்றே - அன்பாக கூப்பிடுவோம்

சபரிமலை மீதினிலே சாஸ்தாவை காணவென்றே
ஜபமாலை தானணிந்து சங்கல்பம் செய்திடுவோம்

மகரத்தில் ஜோதியிலே மகபதியை காணவென்றே
அகத்தினில் பூஜை செய்தே அன்பாக பணிந்திடுவோம்

ஆறுமுகன் சோதரனை அன்பான சாஸ்தாவை
வீறு கொண்டு மலைமேலே வளம் வந்து வணங்கிடுவோம்

சங்கரர்க்கு பாலகனை சாஸ்தாவாய் வளர்ந்தவனை
மங்களமாய் புகழ் பாடி மலர்மாலை சூட்டிடுவோம்

விபூதி பூச்சழகன் வினை தீர்க்கும் ஆணழகன்
பூபதி நாதனென்றே புகழ் மாலை பாடிடுவோம்

புலிக்கூட்டம் சூழ்ந்துவரும் உத்தமனை பூரணனை
கலி தீர்க்கும் கடவுளென்றே காலமெல்லாம் பாடிடுவோம்

ஜோதிமயமானவனை சுடரொளியாம் மணிவிளக்கை
ஆதிகுருநாதன் என்றே புகழ் மாலை பாடிடுவோம்

பக்தர்கள் பாடிடுவார் பரவசமாய் ஆடிடுவார்
சித்தத்தில் நிலை நின்று சீராடும் சீலனவன்

எல்லையிலே காத்து நிற்கும் ஏகாந்த தெய்வமவன்
தொல்லையில்லை இனி என்றே துயர் தீர்க்கும் தோழனவன்

வாழ வைத்து வரம் தருவான் வடிவேலன் சோதரனாம்
ஏழைக்கிரங்கும் அன்பன் இன்பந்தரும் வள்ளலவன்

அன்னதானம் செய்து வரும் அன்பருள்ளம் தாங்கிடுவான்
என்ன குறையிருந்தாலும் எதிர் வந்துகாத்திடுவான்

ஆவேச கடவுள் என்றும் ஆனந்தரூபன் என்றும்
ஆர்வமுடன் அடி பணிந்தால் அல்லல்களை நீக்கிடுவான்

ஐயப்பா சரணமென்றே - ஐயப்பா சரணமென்றே
ஐயப்பா சரணமென்றே - அன்பாக கூப்பிடுவோம்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே