கரிமுகக் கடக் களிறு — J.R. விளக்கவுரை
By Smt.Janaki Ramanan, Pune
For an explanation of the song in English, click the underlined hyperlink karimugak kada
அருணையின் கருணை மழையே சரணம். "கரிமுகக் கடக் களிறு" என்று தொடங்கும் திருவருணைப் பாடல்.
முன்னுரை
முருகன் அருட் பார்வை பட்டுவிட்டால் வறண்டு கிடக்கும் நிலம், மக்கள் மனம் எல்லாம் வளம் கொழிக்கும் இடமாக மாறிவிடும் அல்லவா! அவன் நிலையாகக் கோயில் கொண்டிருக்கும் அருணை பற்றிக் கேட்கவா வேண்டும்! 'கரிமுகக் கடக் களிறு' என்ற இன்ப மயமான திருவருணைப் பாடல். அருணையின் வளத்தைப் படம் பிடிக்கும் பைந்தமிழின் சுவை. கஜானனன் புகழ் பாடும் கனிச்சுவை. நான்மாடக் கூடலில், நடன சுந்தரனின் திருவிளையாடல் சொல்லும் சொற்சுவை. வேலனின் வீரமும், கருணையும் வழி வழி வந்தவை என உணர்த்துகிறாரோ அருணகிரிநாதர்! இதோ பாடலை சுவைப்போம்.துரி பெறச் சரிபொழிற் கன வயற்கு
அழகுளத் துரிய மெய்த் தரள மொய்த்திட
சுரர் துதித்திட மிகுத்தியல் தழைத்து
அருணையில் சுடர் அயிற் சரவணப் பெருமாளே
கரிமுகக் கடக்களிற்று அதிக கற்பக மதக்
கஜமுகத்து அவுணனைக் கடி யானை
கடலை எள் பயிறு நற் கதலியின் கனி
பலக்கனி வயிற்றினில் அடக்கிய வேழம்
அரி முகத்தினன் எதிர்த்திடு களத்தினில் மிகுத்து
அமர் புரிக் கணபதிக்கு இளையோனே
அயிலெடுத்து அசுரர் வெற்பு அலைவுறப் பொருது
வெற்றியை மிகுத்து அறுமுகக் குமரேசா
நரி மிகுக் கிளைகளைப் பரியெனக் கடி வளர்
கையில் பிடித்து எதிர் நLத்திடும் ஈசன்
நடனம் இப்படி இடத்தினும் இசைத் தரையினில்
கரி உரித்து அணிபவற்கு ஒரு சேயே
Comments
Post a Comment