நினது திருவடி : J R விளக்கவுரை
To read the meaning of the song ninathu thiruvadi (நினது திருவடி) in English, click the underlined hyperlink.
முன்னுரை
அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்தின் மீது ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்ள கீழே விழுந்த பொழுது காப்பாற்றி, 'முத்தைத்தரு' என்று அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமான், அவரை 'வயலூருக்கு வா!' என்று பணித்தார். மகிழ்ச்சி அடைந்த அருணகிரியார் இத்தலத்திற்கு வருகை புரிந்தார். அங்கு முருகன் காட்சி தராததால் அசரீரி பொய்யோ? என்று உரக்கக் கூறினார். அவர் முன் முருகபெருமானின் அண்ணன் விநாயகர், பொய்யா கணபதி தோன்றி, சுப்ரமணியசுவாமியை திருக்கல்யாணக் கோலத்தில் காட்சி தரும்படி அருளினார். அருணகிரிநாதருக்காக முருகன் தன் வேல் கொண்டு குத்தி ஒரு தீர்த்தக் குளம் ஏற்படுத்தினார். அதில் தீர்த்தமாடிய அருணகிரி நாதருடைய நாவில் முருகன் வேல் கொண்டு ஓம் என்ற பிரணவ மந்திரம் எழுதிய பின்னர் அவர் கவிபாடும் ஆற்றலும் அறிவும் பெற்றார். இன்ப மயமான இளங்குமரனைப் பாடும் சந்தமயமான "நினது திருவடி" என்னும் திருப்புகழின் ஊற்றுக் கண் திறக்கிறது.
நினது திருவடி சத்தி மயிற் கொடி
நினைவு கருதிடு புத்தி கொடுத்திட
நிறைய அமுது செய் முப்பழம் அப்பமும்
நிகழ் பால் தேன் நெடிய வளை முறி இக்கொடு லட்டு கம்
நிறவில் அரிசி பருப்பு அவல் எள் பொரி
நிகரில் இனி கதலிக் கனி வர்க்கமும் இளநீரும்
மனது மகிழ்வொடு தொட்ட கரத்து
மகர சல நிதி வைத்த துதிக் கர
வளரு கரிமுக ஒற்றை மருப்பனை
வலமாக மருவு மலர் புனை தொத்திர சொற்கொடு
வளர் கை குழை பிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை மறவேனே
போர்க்களக் காட்சி காட்டுகிறார அருணகிரியார். தோற்றுத் தோற்று விழும் சூரர் படை .அதிலிருந்து கொட்டும் ரத்தப் புனல், தெனன எனச் சத்தம் எழுப்பிக் கொண்டு வரும் ஈக்கள், சிதறும் கொழுத்த தசைகள். சதைகள், மூளையின் திசுக்கள், வீழ்ந்து படும் ஈரல்கள், குடல்கள், பகைவரின் வேதனை ஓலங்கள். மறுபுறம் வெற்றி முழக்கங்கள். திமித திமிதிமி என்று மத்தளம், இடக்கை இவற்றின் ஒலிகள், துகு துகு துத்தென ஊதும் குழல்கள், இடிபோல் முழங்கும் பறைகள். டிமுட, டிமு டிமு டிட்டிம் என ஓசை எழுப்பும் தவில்கள். பூத, பைசாச, பேய்க் கணங்கள் கைகொட்டி நகைக்கும் ஒலிகள். ரண பைரவிகள் என்ற போர்க்கள தேவதைகளின் ஆட்டங்கள், இப்படிப் போர் முடித்து அசுரரை வென்ற வேலாயுதா! சரணம்.
Comments
Post a Comment