சேவல் விருத்தங்கள் : பதவுரை

By Devaki Iyer, Pune

பதவுரை
கொந்தார் குழல்பூங்கொத்துக்கள் சூடிய கூந்தலில்
வண்டு ஓடும்வட்டமிடுகின்ற வண்டுகளின்
இயல் கொண்டேரீங்காரத்தையே சுருதியாகக்கொண்டு
ஏழ் இசை மருளஇசைக்கு அடிப்படையான ஏழு ஸ்வரங்களும் அதன் இனிமையில் மயங்கும்படியாக
குதலை மொழிந்து அருள்மழலை போல் பேசுகின்ற
கவுரி வெண்மை நிறம் கொண்ட பார்வதி
சுதந்தரிஇன்னொருவருக்குக் கட்டுப்படாதவள்
குமாரன்பெற்ற மகன்
இதம் பெறு மனம்மகிழ்கின்ற
பொன் செந்தாமரை கடம்பொன்போன்ற அழகும் மேன்மையும் பொருந்திய சிவந்த தாமரை மலர்ந்துள்ள குளங்களையும்
நந்தாவனம் உளமலர்ச்சோலைகளையும் உடைய
செந்தூர் திருச்செந்தூர் (முதலிய)
எங்கும் உளான் தலங்களில் உறைபவன்
திலக மயிலில்பறவைகளிலே முதன்மையான மயிலை வாகனமாக உடைய
குமரன் என்றும் இளையோனாகிற முருகனின்
வரிசை பெறு/td>கொடியில் இடம்பெற்ற பெருமையை உடைய
சேவல் தனைப்பாடஅந்தச்சேவலின் புகழைப் பாடுவதற்கு
வந்தே சமர் பொரு எதிர்த்துப் போராட வந்த
மிண்டாகிய கய மா முக னைக் கோறிகஜ முகாசுரனைக் வஞ்சகனான கஜ முக அசுரனைக்கொன்று
வன் கோடு ஒன்றை ஒடித்துவலிமையான இரண்டு தந்தங்களில் ஒன்றை ஒடித்து (எழுத்தாணியாகக்கொண்டு)
பாரதம் மகாபாரதம் ( வியாசர் சொல்ல)
மாமேருவில் எழுதிமஹாமேருமலையே ஏடாக அதில் எழுதி
பைந்தார் கொடுபுதிய மலர்களால் தொடுத்தமாலைகள் இட்டு
ராவணன்சிவபக்தனான ராவணாசுரன்
பணி சிவ லிங்கமதைவணங்குகின்ற ( கைலாசத்திலிருந்து பெற்ற) ஆத்ம லிங்கத்தை
பார் மிசை பூமியின் மீது
வைத்த(திரும்ப எடுக்க முடியாத படி) வைத்து விட்ட
விநாயகன்தனக்குமேல் ஒரு தலைவன் இல்லாத
முக்கண்மூன்று கண் உடைய
பரமன்கணேச பகவான்
துணையாமேஎனக்குத் துணை புரியட்டும்.
பதவுரை
உலகில்இப்பூவுலகில்
அநுதினமும்நித்தம் நித்தம்
வரும்(அடியவர்களுக்கு) வரக்கூடிய
இடர் துன்பம்
அகலவிலகிப்போகும்படி
உரிய பர கதிஇம்மானுடப்பிறவியிலே அடையக்கூடியதான மோட்ச நிலை
தெரியவேபெறும்படி
உரக மணி என உழலும்பாம்பின் தலை அசையும் போது அதன் தலையிலுள்ள இரத்தினம் இங்கும் அங்கும் அலைவது போல் அலையும்
இருவினையும்பாபம் புண்ணியமாகிற இரண்டும்
முறைபடவும்விட்டுப் போகவும்
இருள்கள்அஞ்ஞானமும்
மிடி கெடவறுமை (பொருள், குணம் இரண்டினுடைய குறை) இல்லாமல் போகும்படி
அருளியேஅருள் புரிந்து
கலகம் இடும் அலகைகள் குறளைமன நிம்மதியைக்குலைக்கும் பலவித பேய்கள் குட்டிச்சாத்தான்
மிகு பணிகள்விஷப்பாம்புகள்
வலிமையோடுமிகுந்த பலத்தோடு
கடினம் உற வரின்(பக்தர்களைத்) தாக்க வரும் போது
அவைகளைக் கண்ணைப்பிடுங்கி அவற்றின் கண்களை அகழ்ந்து
உடல்தன்னைப்பிளந்துஉடலைத் துண்டாக்கி
சிறகைக் கொட்டி நின்று ஆடுமாம்வெற்றிக்களிப்புடன் சிறை விரித்து ஆடும்.
மலைகள் நெறு நெறு நெறு எனக்ரவுஞ்சம், சக்ரவாளம் முதலிய மலைகள் நொறுங்கிப் போகும்படியும்
அலைகள்ஏழு கடல்களும் வற்றிப்போகும்படியும்
அசுரர் மடியசூரன் முதலிய அசுரர்கள் இறந்துவிடவும்
அயில் கடவு முருகன்வேலாயுதத்தை ஏவிவிட்ட முருகன்
மகுட வட கிரியனைய மலைமுலை வநிதைசிகரத்தை உடைய மேருமலை போன்ற தனபாரங்களைக் கொண்ட பெண்
குறவர் இசை இன மகள் அவளுடன்வேடுவர் என்ற பெயர் பெற்ற இனத்தைச் சேர்ந்த வள்ளியையும்
சிலை குலிசன் மகள்கோபத்தோடு தாக்கும் வச்சிராயுதமுடைய இந்திரன் மகள் தேவயானியையும்
மருவு புயன்அணத்த தோள்களை உடைய
இலகு சரவணச்சிறுவன்புகழோடு விளங்கும் சரவணப் பொய்கையில் பிறந்தவன்
அயன்பிரமன்
வெருவபயந்து போகும்படி
விரகில்திறமையாக
சிரமிசையில் அடி உதவும்தலையில் குட்டு வைத்த
அறுமுகவன்ஆறுமுகனான முருகனுடைய
சேவல் திரு துவசமேசேவல் இலங்குகின்ற உயர்ந்த கொடியே
பதவுரை
எரி அனையநெருப்பைப்போன்ற
வியன்பரந்த (பரட்டையான)
நவிரம் உ(ள்)ளதலைமுடி உடைய
கழுதுபேய்
பல பிரம ராட்சதர்கள்ப்ராம்மணர்களாயிருந்து பல தவறுகள் செய்தவர் இந்தப் பெயருடைய பேயாய்த் திரிவர் அவர்களும்
மிண்டுகள் செ(ய்)யும்பல குறும்புகள் செய்து பயமுறுத்தும்
ஏவல் பசாசு(பக்தர்) மீது ஏவி விடப்பட்ட
நனி பேயில் பசாசுதனித்தன்மையுள்ள பிற பிசாசு
கொலை ஈனப்பசாசுகொலைகள் புரியும் துஷ்ட பிசாசுகளையும்
கரி பெரிய மலை கரிய நிறமுடைய பெரிய மலை போலவும்
பணை எனவும் மூங்கில் போலவும், (பருமையில் மலை, உயரத்தில் மூங்கில்)
முனையின்முயன்று
உயர் ககனம் உற நிமிரும்மேலுள்ள ஆகாசத்தைத்தொடும் படி வளர்ந்து நிற்கும்
வெங்கண்கொடிய பார்வையுடைய
கடிகளையும்பூதங்களையும்
மடமடென மருகி அலறிட(சேவலின் சிறகுகள்) மட மட என்ற சப்தத்துடன் மேற்சொன்ன பேய் பிசாசுகள் பயந்து அலறிக்கொண்டு ஓடும்படி
உகிர்க்கரத்துநகங்களையுடைய தன் கரத்தால் (காலால்)
அடர்ந்துதாக்கி
கொத்துமாம்அலகாலும் கொத்தும்
தரணி பல இடம் எனபல மலைப்ரதேசங்களில் வசித்து வந்த
வன மத கரிகள்மதம் பிடித்த காட்டு யானைகளைப் போலவும்
தறிகள்தூண்கள் போலவும்
பணி சமணர்வாழ்க்கை நடத்திவந்த சமணர்களின் கூட்டம்
கிடு கிடு எனநடுங்கும் படியாக
தண்டைகள் சிலம்புகள்பாத அணிகள்
சிறிய சரண அழகொடுஅந்தச்சின்னஞ்சிறிய பாதங்களை அழகு செய்ய
நடனம் புரி வேள்திருநடனம் செய்கின்ற மன்மதனைப்போல் அழகுள்ள ஞானசம்பந்தனான முருகன்
திரிபுரம் எரிய நகை புரியும்சிரித்து எரிகொளுத்தும் என்றது போல் தன் புன்சிரிப்பாலேயே மூன்று புரங்களையும் (மதில்களை) கொளுத்திப்போட்ட
இறையவன் உதவு குமரன்சிவ பெருமான் பெற்ற மகன்
திமிர தினகர முருகஅஞ்ஞான இருளுக்குச் சூர்யனைப் போன்ற அழகன்
சரவண பவன்நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன்
குகன்அடியவர் இதய குகையில் வசிப்பவன் (ஏந்தி இருக்கும்)
சேவல் திரு துவசமேசேவல் திகழும் திருக்கொடியே
மேற்சொன்ன பேய் பிசாசு முதலியவை ஆபிசாரம் எனப்படுகின்ற முறையில் எதிரிகளால் ஏவி விடப்படுபவை. இந்தக் காலத்தில் அவை இருப்பதாகத் தெரியவில்லை. பொதுவாக எதிரித்தொல்லை என்று கொள்ளலாம்.
பதவுரை
கரி முரட்டு அடி வலைகருமை நிறத்துடன், உறுதியான பாசவலையான
கயிறு எடுத்து கயிற்றைக் கொண்டு
எயிறு பல்களை இறுக்கி தெற்றுப்பற்களைக் கடித்துக்கொண்டு
முறைத்து கலகம் இட்டு கோபப்பார்வையோடு, மனதைக்கலங்கச் செய்து கொண்டு
இயமன் முன் கரம் உறத் துடரும்கூற்றுவனாகிய எமன் கையை(வேலை வீச) முன் வீசிக்கொண்டு (என் உயிரைப்பறிக்க) துரத்தும்
அக்காலத்தில்அந்த இக்கட்டான சமயத்தில்
வேலும் மயிலும்ஞான சக்தியான வேலாயுதமும், ஓம்கார ரூபமான மயில் வாகனத்தில்
குரு பரக்குகனும் மனக்குகையில் வீற்றிருக்கும் யாவருக்கும் மேலான குருவாம் குமரன்
அப்போது நட்புடன் வரஅவ்வேளையில் அன்பு (கருணையு)டன் வரவும்
குரல் ஒலித்து (கூடவே வரும் சேவலும்) ஓங்காரமாகிய தன் குரல் எழுப்பி
அடியர் இடரைக் குலைத்துஅந்த முருகன் அடியாருடைய பயத்தையும் துன்பத்தையும் சிதறிஓடச்செய
அரிய கொற்கையன்அருமையுடைய கொற்கை என்னும் துறைமுகத்தையுடைய பாண்டிய தேசத்து மன்னன் ( கூன் பாண்டியன்)
உடல் கருகதேகம் கருகிப்போகும் போல உண்டான
வெப்பகையைசுரநோயை
உற்பனம் உரைத்துஅந்நோய் வந்ததன் காரணத்தை அவனுக்குக்கூறி (மதுரைக்கு அரசி மங்கையர்க்கரியார், மந்திரி குலச்சிறையார் அழைப்பின் பேரில் வந்து ஞான சம்பந்தனார் தங்கியிருந்த மடத்துக்கு ச்சமணர்கள் தீ வைக்கவும் சம்பந்தர் "செய்யனே திரு ஆலவாய் மேவிய/ ஐயனே அஞ்சல் என்று அருள் செய் எனைப்/ பொய் ஆர் அமணர் கொளுவும் சுடர்/ பையவே சென்று பாண்டியன்கு ஆகவே" என்று தொடங்கும் பதிகம் பாடித்தான் அத்தீயைப் பாண்டியனிடம் திருப்பி விட்டார் என்பதை)
அதம் மிகவும் ஏவும் அமணரைஇம்மாதிரிக் கொலைச் செயல்களைச் செய்து வந்த சமணர்களை
கழுவில் வைத்துபாண்டியன் நோய் தீர்க்கிற போட்டி மற்றும் அனல் புனல் வாதங்களில் அவர்களை வென்று அவர் தாமே கழுவில் ஏறுமாறு செய்து
மெய்ப்பொடி தரித்தவர்சிவமே மெய்ப்பொருள் என்று உணர்த்தும் திருநீறு பூசுபவர்கள்
அவனி மெய்த்திடபூமியில் மிகுதியாகும்படி, (சைவ மதத்தைப் பெரும்பாலோர் தழுவச்செய்து)
அருள் அது ஆர்அருள் மிகுந்த
சிவ புரத்து அவதரித்துசிவபுரம் என்றும் அழைக்கப்படும் சீர்காழியில் பிறந்து
அமுதத்தின மணிஅமுதம்போல் குளிர்ந்து இதம் தருவதாகவும்
சிவிகை பெற்றுசூர்யனைப்போல் ஒளியுடையதாயும் உள்ள முத்துப்பல்லக்கு சிவபெருமானால் தரப்பெற்று
இனிய தமிழைஇனிமையான தமிழ்ப்பாசுரங்களால்
சிவன் நயப்புற விரித்து உரை செய்சிவபெருமான் மிக விரும்பும்படி சைவத்தை விளக்கிக்கூறிய
விற்பனன்அறிவு மிகுந்தவரான (ஞான பண்டித ஸ்வாமி) முருகனுடைய
இகல் சேவல் திருத்துவசமேவீர மிகுந்த சேவல் விளங்குகின்ற திருக்கொடியாம்
பதவுரை
அச்சப்பட குரல் முழக்கிபயம் ஏற்படும்படியும், சப்தமிட்டுக்கொண்டும்,
பகட்டிதுரத்திக்கொண்டு,
அலறி கொட்டம் இட்டுகூக்குரல் இட்டு, ஆர்ப்பாட்டம் செய்து,
அமர் இடும்போர் செய்யும்
அற்பக்குறப்பலிகள்(அடியார் மீது ஏவப்படும்) அற்பமான சிறு தேவதைகளுக்குப் படைத்த உணவு வரிசைகளில் (சில சிறு துர்தேவதைகளை மந்திரம், பலி முதலியவற்றால் வசப்படுத்திக்கொண்டு ஏவி விடும் மந்திரவாதிகள் உண்டு)
வெட்டுக்கள் பட்டுபிளவுபட்டு
கடி அறு குழைகளைஅவைகள் கடித்துப்போட்டுருக்கும் இலை தழைகளை
கொத்தியேதன் அலகால் கொத்தி
பிச்சு சினத்து உதறிபிய்த்து, கோபத்தோடு உதறி
வீசி எட்டுத்திசைப்பலிகள் இட்டுசுற்றிலும் சிதறவிட்டுத் தானே எட்டுத் திசைகளிலும் பலியை இட்டதுபோல, (சில பூத கணங்களுக்கு பலியை எல்லா திசைகளிலும் சுற்றி வீசுவது வழக்கம்),
கொதித்து விறலே பெற்றுஆவேசத்துடன் இன்னும் வலிமை அடைந்து
இயல் பெறவீரம் விளங்கும்படி
கொக்கரித்து வருமாம்கூவிக்கொண்டு வருமாம்
அந்தச்சேவல் எங்குளது என்றால்
பொய்ச் சித்திரப்பலவும்பொய்யும் கற்பனையும் நிறைந்த (வேதத்துக்குப் புறம்பான) சமயங்கள்,
உட்கதோற்று வெட்கிப்போகும்படியும்
அந்தச் சின்ன துர்தேவதைகள் சேவலுக்கு முன் நிற்க முடியாததுபோல ஞான சம்பந்தமாக வந்த முருகன் முன் பிற புறச்சமயங்கள் சின்னாபின்னமாயின என்பது உள் கருத்து.
திரைச்சலதி பொற்றைஅலைவீசுகின்ற கடல் மீதும்
பொற்றை(சிறிய மலை) க்ரௌஞ்ச கிரி மீதும்
கறுத்து அயில் விடும்கோபித்து வேலாயுதத்தைச்செலுத்தியவன்
புத்திப்ரியத்தன்மிகுந்த அறிவும் அன்பும்( கருணையும்) உடையவன் என்றும்
புகழ் செட்டி சுப்ரமண்யன் புகழ் பெற்ற வளை வியாபாரி வேடத்தில் வள்ளிமலை சென்றதாலும், மதுரையில் தளபதி செட்டியாருக்கு ருத்ர சன்மா என்ற ஊமை மகனாய்ப்பிறந்து இறையனார் அகப்பொருளுக்கு நக்கீரர் உறையே சிறந்தது என்பதை தன் உடல் வெளிப்பாடுகளால் உணர்த்தியதாலும், பக்தியை வாங்கிக்கொண்டு முக்தி அளிப்பதான வாணிபம் செய்வதாலும் செட்டியாகிய சுப்ரமணியன்
செச்சைப்புயத்தன்வெட்சிமாலை அணிந்த தோளன்
நவரத்ன க்ரிடத்தன்நவமணிகள் இழைத்த மகுடம் தரித்தவன்
மொழி தித்திக்கும்சொல்லச் சொல்ல இனிக்கும்
முத்தமிழினைஇயல் இசை நாடகம் என மூன்றான தமிழை,
தெரிய வரு கற்க விரும்பி வந்த
பொதிய முனிவர்க்குஅகத்திய முனிவருக்கு,
உரைத்தவன்அத்தமிழை உபதேசித்தவனான முருகனின்,
சேவல் திருத்துவசமேதிருக்கொடியில் விளங்கும் சேவலாம்.
பதவுரை
தானாய்பிறர் ஏவுதல் இல்லாமலே
இடும்பு செ(ய்)யும் மோகினிதுன்பம் தரும் மோஹினிப்பிசாசு
இடாகினி(இ)டாக்கினி என்கிற பெண்பேய்களுடன்
தரித்த வேதாளம், பூதம் வேதாளம், பூதம் போன்றவற்றையும்
சருவ சூனியமும்எல்லா சூனியம் போன்ற ஏவல்களையும்
அங்கிரியினால் உதறிதன் பாதத்தில் பிடித்து உதறி
தடிந்துதண்டித்து
சந்தோடம் உறவேமகிழ்ச்சி அடையும் படி
கோனாகி மகவானும் நாடாள(மீண்டும்) அரசனாகி இந்திரனும் தேவலோகத்தை அரசாளவும்
வான் நாடர் குலவு சிறை மீளதேவர்கள் (சூரனால்) அடைக்கப்பட்ட சிறையிலிருந்து விடுபடவும்
அட்ட குல கிரிகள்(அண்டத்தைச்சுற்றியுள்ள) எட்டு (திசை) மலைகளும்
அசுரர் கிளைசூரனின் குலத்தைச்சேர்ந்த அரக்கர்களும்
பொடியாகசிதறித்தூள் தூளாகும்படியும்
வெஞ்சிறைகள் கொட்டி எட்டிக் கூவுமாம்தன் வலிமை மிகுந்த சிறகுகளை அடித்துக்கொண்டு பெருங்குரலிட்டுக்கூவுமாம்
மா நாகம்பெரிய (வாசுகி எனிகிற) பாம்பும்
அக்குஅக்ஷம் என்கிற உருத்தராட்சம் (எலும்பு என்றும் கூறுவர்)
அறுகு மான் உடையன்அருகம்புல், மானையும் உடையவன்(அணிந்தவன்)
நிர்த்தமிடும்திருநடம் புரியும்
மாதேவன் நல் குருபரன்மகாதேவனின் நல்ல மேன்மையான குருவானவன்
வான் நீரம் அவனி அழல் கால் ஆய்ஆகாயம், நீர், நிலம், தீ, காற்று என ஐம்பூதங்களும் ஆகி
நவ கிரகம்ஒன்பது கோள்களும்
வாழ்நாள் அனைத்தும் அவனாம்உயிர்கள் (காலம் என்றும் கொள்ளலாம்) அனைத்தும் தானே ஆனவன்
சேனாபதித் தலைவன்தேவர்கள் சேனைக்குத்தலைவன், எல்லா சேனாபதிகளிலும் உயர்ந்தவன்
வேதாவினைச்சிறை செய்பிரமனைச்சிறையில் அடைத்தவன்
தேவாதிகட்கு அரசுதேவர் முதலியோருக்கு (யக்ஷ, சாரண, கந்தர்வ, கின்னர, கிம்புருடர்) சக்ரவர்த்தி
கள் தேன் ஆன மைக்கடலில் மீன் ஆனவன்கு இனியன்இருண்ட கடலில் (பெரிய) மீனாக உருவெடுத்த நந்திதேவருக்கு கள்ளையும் தேனையும் போல் இனிமையானவரான முருகனின் (சிவபெருமான் செம்படவ வேடத்தில் வந்து, அக்குலத்தில் பிறந்திருந்த உமையன்னையை யாருக்கும் அகப்படாத பெரிய சுறா மீனாய் அவதரித்த நந்தியைப்பிடித்து போட்டியில் வென்று மணந்த வரலாறு குறிக்கப்பட்டது)
கள் தேனான மைக்கடலில் மீன் ஆனவன்கு இனியான் என்பது மீனாக மத்ஸ்ய அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கு இனிய மருமகன் என்று கொள்வதும் பொருத்தமே.
சேவல் திருத்துவசமேசேவல் விளங்குகின்ற கொடியே
பங்கமாகிய விடகொடுமைகளைச்செய்யும் விஷத்தை உடைய
புயங்க மா படம் அது (பல தலை) பாம்பின் பெரிய படத்தை
பறித்துச்சிவத்து அருந்தி கொத்தி சினத்துடன் புசித்து
பகிரண்ட முழுதும் பறந்துவெளி அண்டங்களில் எங்கும் பறந்து
நிர்த்தங்கள் புரி பச்சைக்கலாப மயிலை(அம்மகிழ்ச்சியில்) நடனம் புரியும் பசிய நிறத் தோகையுடைய மயிலிடம்
அன்புற்று மிகுந்த ப்ரியம் கொண்டு
வன்புற்று அடர்ந்து வரு மிகுந்த வலிமையுடன் நெருங்கியும்
துடரும் பிரேத பூதத் தொகுதிகள்பின் தொடர்ந்து வரும் பிசாசு, பேய்க்கூட்டங்களையும்,
பிசாசுகள் நிசாசரர் அடங்கலும் மற்றுமுள்ள பிசாசுகள் அரக்கர் கூட்டங்கள் அனைத்தையும்
துண்டப்படக் கொத்துமாம் துண்டு துண்டாகும்படித்தன் அலகால் தாக்கி விடும்.
மங்கை யாமளைபெண்களில் சிறந்தவள், கரும் பச்சை நிறத்தவள்,
குமரிஎன்றும் இளமையாக இருப்பவள்,
கங்கை கங்கை ரூபமாகவும் உள்ளவள், (கங்கை போல் புனிதமானவள், கங்கை, உமை இருவரும் இமாசலத்தின் புதல்விகள்),
மாலினி கழுத்தில் மாலை அணிந்தவள்
கவுரி வெண்ணிற ரூபமும் கொண்டவள்
வஞ்சி கொடி போன்று மெலிந்தவள்
நான்முகி நான்முக பிரமனின் மனைவியான வாணியாகவும் திகழ்பவள்
வராகி பன்றி முகமுடைய அம்பிகையின் படைத்தலைவி
மலை அரையன்மலைகளின் அரசன் என்று போற்றப்படும் இமயமலை
உதவு அமலைபெற்றவளாகிய குற்றமற்றவளாகிய பார்வதியின்
திருமுலையில் ஒழுகு பால் திருத்தனங்கள் சுரந்த ஞானமாகிய பாலை
மகிழ அமுது உண்ட பாலன்அவள் மனம் மகிழும்படி அன்று ஞான சம்பந்தனாக வந்து அருந்திய குழந்தை
செங்கணன்சிவந்த கண்களை உடைய திருமால் (ஏற்கெனவே சிவந்த அவன் கண்கள் கோபத்தில் இன்னும் சிவந்த விட),
மதலையிடம் தூணில்
இங்குளான் என்னும் இங்கே இருக்கிறான் என்று (ப்ரஹ்லாதன் தன் தந்தை இரண்ய கசிபுவிடம்) காட்டிய
நரசிங்கமாய்சிங்கத்தலையும் மனித உடலுமாய்த் தோன்றி
இரணியன் உடல் சிந்தஇரண்யன் உடல் உயிரற்று விழும்படி
உகிரில் கொடு பிளந்த தன் கை நகங்களால் கீறிப் பிளந்த
மால் மருகன் திருமாலின் மருமகனாகிய முருகனின்
சேவல் திருத்துவசமேசேவல் விளங்குகின்ற திருக்கொடியே. பின் குறிப்பு: பல தலை புயங்கம் என்றது மாந்தர்தம் பாபங்கள், பாப சிந்தனை, வாசனா எனப்படும் இந்திரியப்பற்றுகள், பேய் பிசாசு என்பன பழ வினைத்தொடர். மயில் மந்திர ரூபம். மயிலை அதாவது முருகன் நாமங்களை நினைக்க நினைக்க அது மேற்சொன்னவற்றை அழித்து விடும் என்பது முன் பாதியில் கூறப்பட்டது. வாதினை அடர்த்த என்ற சோலைமலைச் சந்தத்தில் ஆனதனி மந்த்ர ரூப நிலை கொண்டது ஆடுமயில் என வந்தது காண்க. சேவலும் அம்மயிலுக்குத் துணை புரிகிறது.)
வீறானவலிமை மிகுந்த
காரி கதிபயிரவர் செல்லும் வழியில்
முன் ஓடி, பின் ஓடிஅவருக்கு முன்னும் பின்னுமாக ஓடி,
வெங்கண் சிவந்த வெப்பமான கண்களை உடைய
குறும்புகள் தரும் பல சேஷ்டைகள் செய்யும்
விடுபேய்களேதனித் தனிப் பேய்களையும்
கழு கழுகுகளையும்
வன் கொலை சாவு கொள்ளிவாய் வெம்பேய்களைத் துரத்திகொடுமையான கொலைக்கும் வேறு வித சாவுக்குக் காரணமாகும் கொள்ளி வாய்ப் பிசாசுகளையும் ஓடச் செய்து
பேறான சரவண பவா என்னுமந்திரம்பெறுவதற்கு அரிதான பாக்கியமாகிய முருகனுடைய மேலான மந்திரமாகிய "சரவண பவா" என்ற நாமத்தை
பேசி உச்சாடனத்தால்உபதேசம் பெற்றுக் கூறி, பல (ஆயிரம், லட்சம் என்று) முறை உருவேற்றி,
பிடர் பிடித்துக்கொத்திஅப்பேய்களை ஓட ஓட விரட்டிப் பிடரியைக் கொத்தியும்,
நக நுதியினால்கூரிய தன்கால் நகத்தின் நுனி கொண்டு
உறப்பிய்ச்சு-(அவை திரும்பி வந்து விடாமல்) நன்றாகப் பிய்த்துத்துண்டாக்கி விட்டு
களித்து ஆடுமாம்அந்த (வெற்றி) மகிழ்ச்சியில் கூத்தாடும்
சென்ற 6வது விருத்த விளக்கத்தில் அடியேன் மயில் என்பது மந்திரம், அதைச்சொல்லச்சொல்ல ஆன்மாவில் ஒட்டியுள்ள இந்திரிய வாசனைகளும், பழ வினைத்தொடர்களும் அற்றுப்போகும் என்றது தான் இங்கு கூறப்படுகிறது.
மாறாத முயலகன் தீராத வலிப்பு
வயிற்று வலி பல வேதனை தரும் வயிற்று நோய்கள்
குன்மம் சூலை
மகோதரம்பெருவயிறு எனும் வயிறு உப்புதல்
பெருவியாதிக்ஷயம் போன்ற தீர்வில்லாத நோய்கள்
வாத பித்த சிலேற்பனம் வாதம் பித்தம் சிலேஷ்மம் இவை சமநிலையில் இல்லாததால் உண்டாகும் பல துன்பங்கள்
குட்டம் முதலான குஷ்டம் போன்ற பல
வல்ல பிணிகளை மாற்றியே-ி துன்பந்தரும் தீராத நோய்களைத்தீர்த்து குணப்படுத்தி
(வியாதிகள் முன்வினை காரணமாக வருகின்றன, நாம ஜபம் மற்றும் உபாசனைகளால் அதன் தீவிரம் குறையக்குறைய நோயும் தீரும். உடலின் நோயே உபாசனைக்கு இடையூறு. அதைப்பொருள் படுத்தாமல் நாமங்கள் சொல்லச் சொல்ல நோயின் கடுமை குறையும். உபாசனை கூடும்)
சீறாத (அடியார்களிடத்து) கோபம் அறியாத
ஓர் ஆறு திரு முகம் மலர்ந்துமலர்ந்து விளங்குகின்ற ஆறு திருமுகங்களோடு,
அடியர் சித்தத்து இருக்கும் முருகன் பக்தர்களுடைய மனத்தில், சிந்தனையில் குடி கொண்டிருக்கும் முருகப்பெருமான்,
சிலைகள் உருவிட க்ரௌஞ்ச கிரியையும், திசைகளைச்சுற்றியுள்ள சக்ரவாள கிரியையும் துளைத்து ஊடுருவிச் செல்லும்படி
அயிலை விடு வேலாயுதத்தைச் செலுத்திய
குமர குருபரன்குருவுக்கெல்லாம் மேலான குருவாம் குமரக்கடவுள் தரித்திருக்கும்
சேவல் திருத்துவசமே அக்குக்குடக்கொடியே
வந்து ஆர்ப்பரிக்கும்எதிரில் வந்து நின்று பெரும் ஆரவாரம் செய்யும்
அம்மிண்டு வகைஅந்த மதத்துடன் (திமிருடன்) நெருங்கித் தொடர்வதான
தண்டதரன்கையில் தண்டம் ஏந்துகின்ற இயமனின்
வலிய தூதுவர்பலம் மிகுந்த (எம) தூதர்களையும்
பில்லி பேய்மற்றும் பிறரால் ஏவி விடப்பட்ட பிசாசு முதலியவைகளையும் (செய்வினைகளை)
வஞ்சினால்மிகுந்த கோபமுடன்
பேதுறஅவற்றின் புத்தி தடுமாறும்படி செய்து
மகாபூதம் அஞ்சிடபெரிய பூதங்களும் (ஐம்பெரும் பூதங்கள் என்றும் கொள்ளலாம் அத்தனை பலத்தோடு என்பதாக) பயப்படும்படி
வாயினாலும் காலினாலும்தன்னுடைய அலகைக்கொண்டும், நகங்களையுடைய கால்களாலும்
பந்தாடியே மிதித்துகால் பந்து போல உதைத்தும் மிதித்தும்
கொட்டிஅடித்தும்
வடவை செம்பவளமாவடவாக்கினி எனும் நெருப்போ, பவளமோ எனும்படி ரத்தத்தால் சிவக்கடித்து
அதிகாசமாய்அட்டகாசம் செய்து (பெரிதாகச் சிரித்து)
பசும் சிறைத்தல மிசை(நீலம் கலந்த) பச்சைத் தோகையுடைய மயிலின் முதுகில் ஆரோகணித்துள்ள
தனி அயில் குமரனைதன்னிகரில்லாத, கூரிய வேலாயுதம் தாங்கிய குமரக் கடவுளை
பார்த்து அன்பு உறக் கூவுமாம்பார்த்து உன் அடியவருக்கு வந்த இடைஞ்சலைப் போக்கி விட்டேன் என்று சொல்வதுபோல அன்போடு கூவும்(சேவல்)
முந்துபழமையான அல்லது முதன்மையான
ஆகமப்பலகைதமிழ் காவியங்களின் தரம் அறியும் பொருட்டு சிவ பெருமானால் வழங்கப்பட்ட சங்கப்பலகையின் மேல்
சங்க ஆகமத்தர் தொழமுதல் தமிழ்ச்சங்க உறுப்பினராகத்தோன்றிய (ஓ, ம் என்ற இரண்டு எழுத்தைத் தவிர மீதியுள்ள 49 எழுத்துக்களும் மனித வடிவெடுத்த) 49 கற்றறிந்த தமிழ் புலவர்களும் தன்னை வணங்கும்படியாக
முன்பு ஏறு முத்தி முருகன்அன்று ஏறி அமர்ந்த (முருகன் சுந்தரபாண்டியரான சொக்கநாதருக்கும், தடாதகையான மீனாட்சியம்மைக்கும் புதல்வராக உக்கிர பாண்டியனாக அத்தமிழ் சங்கத்துக்குத் தலைவராக விளங்கினார்) முக்திக்கு வழிகாட்டும் முருகப்பெருமான்
முது கானத்து எயினர்காட்டில் வசிக்கும் பழங்குடியினரான வேடர்கள்
பண்டு ஓட (வள்ளியைத்தூக்கிச்செல்கையில், முருகனை எதிர்த்து வந்த அவள் தன் உறவினர்கள்) பின்வாங்கி ஓடும்படி
அயில் கணை முனிந்தே தொடுத்த சிறுவன்கூரிய வேலை அம்பு போல எறிந்த இளைஞனான முருகனை
சிந்தை ஆகுலத்தை அடர் கந்தாமனக்கவலைகளை நீக்கும் கந்தக்கடவுளே
எனப்பரவு சித்தர்க்குஎன்று துதிக்கின்ற மனத்தையுடைய பக்தருக்கு
இரங்கு அறுமுகன்கருணை புரியும் ஆறுமுகன்
செய வெற்றி வேள்என்றும் எதிலும் வெற்றியே காணும் தலைசிறந்த ஆண்மகன்
புனிதன்பரிசுத்தமானவன்
நளினத்தன் முடி குற்றிதாமரையில் பிறந்து அம்மலரிலேயே வீற்றிருக்கும் பிரமனைக்குட்டித் தண்டித்த பிரானான முருகன்
சேவல் திருத்துவசமேகையில் இலங்கும் சேவல் பொறித்த கொடியே
வள்ளி என்பது ஜீவ ஆத்மா என்பது அறிந்ததே. வேடர் குலம் என்பது பொதுவாக பாவச்செயல்களையே செய்யும் மானுட இயல்பையும், வள்ளியின் ஐந்து சகோதரர்கள் ஐந்து (கள்ளப்) புலன்களையும், உறவினர் என்பது மற்ற 'வாசனை' எனப்படும் பழவினைப்பதிவுகளான விருப்பு வெறுப்புக்களாகும். முருகன் காந்தர்வ விவாகம் செய்வது அவன் அருளுக்குப்பாத்திரம் ஆவது, அதன் பின் அவனே அந்த ஆத்மாவின் பழவினைகளின் பதிவுகளை அழித்து விடுவதே வேடர்களை வேலெறிந்து ஓடவிட்டதாகச்சொல்லப்படுகிறது.
உருவாய் அடியார்தம் பக்தியில் மகிழ்ந்து அவர்க்கு அருள் புரியும்பொருட்டும் திருவிளையாடல் புரிந்து பக்தர் பெருமையை உலகறியச்செய்யும் பொருட்டும் திரு உருவம் தரிப்பவரும்
எவர்க்கும் நினைவரிதாய் தான் தன் சுய வடிவில் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் கடந்து அறிவும் ஆனந்தமுமான நித்திய வஸ்துவாக உள்ள நிலையில் யாருக்கும் எட்டாமலும்
அனைத்து உலகும் உளதாய்எல்லா உலகங்களிலும் ஜட சேதனங்கள் எல்லாவற்றிலும் வியாபித்தும்
உயிருக்கு உயிர் அதாய்எல்லா ப்ராணிகளிலும் அதன் இயங்கும் திறனாகவும்
உணர்வாய்சேதனா (அறியும் தன்மை) சக்தியாகவும் விளங்கி
விரிப்பரிய உரை தேர்வேதங்களாலும் கூட சொற்களைத் தேடித்தேடியும் விளக்கிச் சொல்ல இயலாத
பரப்ரம்ம ஒளியாய்மேலான உண்மைப் பொருளான அறிவு ஜோதியாக
அருள் பொருள் அதாய்கருணை வடிவாக அல்லது கருணை என்ற சொல்லின் பொருளாக (இலக்கணமாக, விளக்கமாக)
வரும் ஈசனைதிகழும் சிவ பெருமானை
களப முகன்யானை முகம் கொண்ட கணபதி
ஆதரித்து(இவரே முழு முதல் என்று) மனதில் தரித்து
திசையை வலமாய் மதிக்க வருமுன்அன்று ஒரு நாள் நாற்புறமும் சுற்றி வலமாக வந்து யாவரும் போற்றிப்பாராட்ட முடிக்கும் அத்தருணத்தில்
வளர் முருகனைக்கொண்டுஎன்றும் ஆற்றலிலும் புகழிலும் வளர்ந்து கொண்டிருக்கும் முருகப்பெருமானைத் தன் முதுகில் ஏற்று
தரணி வலம் வந்தான்இந்த உலகத்தையே சுற்றி வலமாக வந்து சேர்ந்த அந்த முருகனின்
முன் வைகும்சந்நிதி முன் என்றும் வாழும்
மயிலைப் புகழுமாம் மயில் வாஹனத்தைப் போற்றித் துதிக்குமாம்(சேவல்)
குரு மா மணித்திரள்ஒளிசிந்தும் விலைமதிப்பற்ற (வடிவில் பெரிய என்றும் கொள்ளலாம்) ரத்தினங்களின் குவியல்களை
கொழிக்கும்தன்னுடன் அடித்துக்கொண்டு வரும்
புனல்அருவி, காட்டாறுகளையும்
கடம்காடுகளையும் கொண்ட
குன்று தோறாடல்திருத்தணி மலை (பல குன்றுகள் என்றும் சொல்வர். மற்ற முருகன் தலங்களும் வரிசைப்படுத்தி மேலே சொல்லியுள்ளதால் திருத்தணி என்று கொள்வது பொருத்தம் என்று படுகிறது)
பழனம்பழனாபுரி எனும் திருப்பழநி
குலவு பழமுதிர்ச்சோலை(பிரகாசமான) புகழ் பெற்ற சோலைமலை
பரங்குன்றிலும்திருப்பரங்குன்றத்திலும்
திருவேரகம்சுவாமி மலையிலும்
திரை ஆழிஅலைகளை வீசும் கடல்
முத்தைமுத்துக்களை
தரங்கக்கை சிந்தித் தெறித்திடும்தன் அலைகளாகிற கையால் வீசிக்கரையில் இடும்
செந்தில் நகர் வாழ்திருச்செந்தாரிலும் குடி கொண்டிருக்கும்
திடமுடைய அடியர் தொழுபக்தியில் உறுதியான அடியவர் (இன்பத்திலும் துன்பம் வந்த போதும் மனம் சற்றும் அசையாமல்) வழிபடுகின்ற
பழையவன்ஆதிப்பழம் பொருளான திருமுருகன்
குலவுற்றஅணைத்துப் பிடித்திருக்கும்
சேவல் திருத்துவசமேசேவல் விளங்கும் பெருமை பொருந்திய கொடியாம்
மகர சலநிதி சுவறபெரிய மீன்கள் வசிக்கும் கடல் வற்றிப்போகும்படி
உரகபதி முடி பதறஉலகங்களைத்தன் ஆயிரம் தலைகளில் தாங்குகிற ஆதிசேஷனின் தலைகள் பாரம் தாங்காது கலங்க
மலைகள் கிடுகிடு எனமேரு முதலான பெரும் மலைகளும், அண்டத்தைச்சுற்றியுள்ள சக்ரவாளம் என்கிற மலைத்தொடரும் கிடுகிடு என்று ஆடும்படியும்
மகுட குடகுடம் போன்ற மேல்பகுதி உடைய
வடசிகிரிவடக்கே உள்ள மேருமலையின்
முகடு பட பட எனஉச்சியும் அதிரும்படியும்
மதகரிகள் உயிர் சிதறஅம்மலைகளில் வசிக்கும் யானைகள் பயந்தும் உருண்டும் உயிரை விட்டுவிடும்படியும்
ககனம் முதல்தேவ லோகம் முதலான
அண்டங்கள் கண்ட துண்டப்படஎல்லா உலகங்களும் துண்டு துண்டாகச் சிதறிப் போகும்படியும்
கர்ச்சித்து இரைத்து அலறியே பெரிதாக ஆரவாரம் செய்து (இந்த மூன்று சொற்களும் பேர் ஒலியைக்குறிப்பன. மூன்றையும் ஒரே சமயம் உபயோகித்து அந்த சப்தத்தின் பரிமாணம், அளவு எத்தனை என்று உணர்த்துகிறார் அருணகிரி நாதர்)
காரையாழி நகரர்சமுத்திரக்கரையில் அமைந்த காரையாழி என்னும் நகரில் வாழ்ந்த அரக்கர்களின்
மாரைப்பிளந்து சிறகைக்கொட்டி நின்று ஆடுமாம்மார்பைப்பிளந்து மகிழச்சியில் தன் சிறகைக்கொட்டி நடனம் புரியமாம் (சேவல்)
சுக விமலைஆனந்த வடிவமான அழுக்கே அணுகாதவள்
அமலைபழுதற்றவள்
பரையாவர்க்கும் மேலானவள்
இமய வரை தரு குமரிஇமவானாகிய மலை பெற்ற பெண்
துடி இடைஉடுக்கை போன்ற சிறுத்த இடை கொண்டவள்
அனகைபாபத்திற்கு அப்பாற்பட்டவள்
அசலையாள்அசைவற்றவள்
சுதன்பெற்ற மகனாகிய முருகன்
மதுரமொழி உழை வநிதைஇனிமையாகப்பேசும் மானின் மகளான வள்ளி
இபவநிதைஐராவத யானையின் பெண்ணான தெய்வானை
துணைவன்இவர்களின் கணவன்
எனது இதய நிலையோன்என்னுடைய இதயத்தைத்தன் நிலையான இருப்பிடமாகக்கொண்டவன் அதாவது என்னால் மறவாமல் எப்போதும் சிந்திக்கப்படுபவன்
திகுடதிகுடதிதிகுட தகுடதிககுடதிகுட செக்கண செகக்கண எனஇந்த மாதிரி ஜதியோடு
நடனம் இடு மயிலில்நிருத்தம் செய்யும் மயிலின் மீது அமர்ந்து
சருநடமாடும் (சர என்கிற வடமொழிச்சொல்லைத்தமிழ்ப்படுத்தி உபயோகித்துள்ளார்)
குமர குருபரன்மேலான குருவாகிய குமரக்கடவுள் தன்
சேவல் திருத்துவசமேசேவலைத்தாங்கிய திருக்கொடியே
பூவில் அயன்தாமரைப்பூவைத் தனது வசிப்பிடமாகக் கொண்ட பிரம்மன்
வாசவன்தேவேந்திரன்
முராரிமுர அசுரனை முடித்த திருமால்
முனிவோர் அமரர்தவசீலர்களான முனிவர்கள், தேவ கணங்கள் (பல வகை தேவர்கள் மரணம் இல்லாதவர்கள்),
பூசனை செய்வோர்மற்றும் தன்னை வந்தனை செய்யும் மாந்தர் போன்றோர்
மகிழவேசந்தோஷம் அடையும்படியாகவும்,
பூதரமும் எழுகடலும் ஆடமலைகளும் பூமியைச் சுற்றியுள்ள ஏழு கடல்களும் ஆனந்த நடனம் ஆடும்படியாகவும்
அமுதூற அநுபோகஅமுதம் போன்ற ஆனந்தத்தை அனுபவிக்கும்
பதினாலு உலகமும் தாவு புகழ் மீறிடபூமிக்கு மேல் கீழ் ஏழு என்றுள்ள பதினான்கு உலகங்களிலும் தன் புகழ் விரைவாகப்பரவி மிகும்படி
நிசாசரர்கள் மாளஅஞ்ஞானமாகிற இருளில் நடமாடுகிற அரக்கர்கள் மடிந்து போகும்படியும்
வரு தான தவ நூல்கள் தழையவே தானம் தவம் இவற்றைப் போதிக்கிற, ஊக்குவிக்கிற வேதம் சாஸ்திரம் போன்ற நூல்கள் நன்கு தழைக்கும்படியும்,
தாள் வலியதான பல பேய்கள் அஞ்சகீழான சில திறனை உடைய பேய்கள் பயப்படும்படியாக (இங்கு வேதத்துக்குப் புறம்பாகப்பரவி வந்த புறச்சமயங்களைக் குறிப்பாகக் கூறுகிறார்)
சிறகு கொட்டிக் குரல் பயிலுமாம்தன் சிறகுகளை பட படவென அடித்துக்கொண்டு பெருங்குரல் எழுப்புமாம் (சேவல்)
காவு கனி பழச் சோலைகளான
வாழை புளி மாவொடு வாழை புளி மாமரங்களோடு
உயர் தாழை கமுக அவிகள் உயரமாக வளரும் தென்னை பாக்கு மரங்களும் சேர்ந்த காடுகளில்
பரவு நடனபலவித நிர்த்தங்கள் புரியும்
காரண மெய்ஞ்ஞானஉண்மைப் பொருளை அறியக்காரணமாக விளங்கும் வேதமாகிய வாகனமாம் (பரி என்பது குதிரை என்றாலும் இங்கு வாகனத்துக்கு ஆகிவந்தது.)
சீரவணசிறப்பு மிகுந்த
அர அசனபாம்பைத் தனது உணவாகக் கொண்ட
கனக மயில் வாகனன்பொன்போல் பெருமை மிக்க மயிலைத்தனது ஊர்தியாக உடைய
அடல் சேவகன் போரில் வல்லவன்
இராசத இலக்கணகம்பீரத்துக்கே இலக்கணமாகத்திகழ்பவன்
உமைக்கு ஒரு சிகாமணி பார்வதி அன்னைக்குத்தலையில் அணியும் அணிகலன் போன்றவன் (அவளுக்குப்பெருமை சேர்ப்பவன்)
சரோருக முகதாமரைப்பூப்போன்ற முகமுடையவன்
சீதள குமாரன் மனதிற்குக் குளிர்ச்சி (இதம்) தருபவனான குமரக்கடவுள்
கிருபாகரகருணை மிகுந்தவன்
மனோகரன்மனதைக்கொள்ளை கொள்பவன் (தன் அழகாலும் பெருங்குணங்களாலும்)
சேவல் திருத்துவசமே(ஆன திரு முருகனின் கரம் இலகு) குக்குடக்கொடியே.
முடிவுரை: இந்த சேவல் விருத்தங்களைப்படிப்பதனால் பயம் விலகும். மனக்குழப்பங்கள், மனத்தளர்ச்சி, மனவுளைச்சல் மற்றும் இன்னதென்று பிடிபடாத துன்பங்கள் அச்சங்கள் விலகும்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே