தத்தனமும்

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link thathanamum

தத்தனமும்தன்னுடைய செல்வங்கள்
அடிமைவேலையாட்கள்
சுற்றமொடு புதல்வர் உறவினர்கள், பெற்ற பிள்ளைகள்
தக்க மனை இனமும்பொருத்தமான மனைவி, அவள் வழி உறவினர்களும் (அல்லது தன் சமூகத்தினரும்)
மனை வாழ்வும் குடும்ப வாழ்க்கை இவை எல்லாமும்
தப்பும் நிலைமைதன்னை விட்டுப்போகும் சூழ்நிலை (மரணம்)
அணுகைக்கு வர நெருங்க நெருங்க
விரகு உதைக்கு மறதி மிகுந்து
மயல் நினைவு மனக்குழப்பம்
குறுகா முன்வந்து அடைவதற்கு முன்பாகவே
பக்தியுடன் உருகி பக்தியோடு மனம் உருக
நித்தம் உனது அடிகள்எப்போதும் உன் திருவடிகளை
பற்றும் அருள் நினைவு தருவாயே பிடித்துக்கொள்ளும் உனது அருளால் கிடைக்கும் நிலை தந்து அருள்வாய்
பத்து முடி உருளுவித்த(இராவணனுடைய) பத்துத் தலைகளும் பூமியில் விழுந்து உருண்டு ஓடும்படிச்செய்த
பகழியினர்அம்பை உடையவர் (ராமர்)
பச்சை நிற முகிலின் பசும் நிறமும் மேக நிறமும் கொண்ட திருமாலின்
மருகோனேமருமகனே
அத்தி முகவன ஆனை முகத்தவன்
அழகுற்ற பெழை வயிறன் அழகான, பெட்டி போன்ற வயிறு உடையவன்
அப்பம் அவரை பொரி தேனும் இப்பொருள்களை
அப்பி அமுது செயும்வாய் நிறைய வைத்து ( விருப்பமுடன்) உண்ணும்
மொய்ப்பன் வலிமை மிகுந்தவன் (ஆன விநாயகப் பெருமான்),
உதவ (முருகன் நினைத்தவுடன் ஓடி வந்து) உதவி செய்ய
அடவிக்குள்(வள்ளி மலை) காட்டில்
மற மகளை அணைவோனே குறச்சிறுமியை (யானை துரத்த பயந்த வள்ளியை) தழுவிக்கொண்டவனே
முத்தி தரு முதல்வர் மோட்சத்தை அருள வல்ல மும்மூர்த்திகளில் முதல்வரானவர்
முக்கண் இறைவரொடுமூன்று ( சூர்ய சந்திர அக்னி ஆகிய) கண்களை உடைய ஸ்வாமிக்கு
முற்றும் மறை மொழியை வேதங்களின் பொருள் முழுவதும்
மொழிவோனே எடுத்து உரைத்தவனே
முட்ட அசுரர் கிளை அரக்கர் கூட்டம் முழுவதும்
கெட்டு முறிய சிதறிக்காணாமல் போகுமாறு
முதல் வெட்டிவேரை அறுத்து
அமர் பொருதயுத்தம் புரிந்த
பெருமாளே முருகப்பெருமானே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே