விடுங்கை பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link vidungai

விடும் கைக்கு ஒத்த உயிர்களைச் சற்றும் இரக்கம் இன்றி விட்டுப் பறிக்கின்ற (அல்லது தன்னைச் செலுத்துகின்ற) கையைப் போன்ற வலிமையானதும் கருத்ததும் ஆன)
கடா உடையோனிடம் அடங்கி  எருமைக் கடாவைத் தன் வாகனமாக உடைய எமனிடத்து அகப்பட்டு,
கைச்சிறையான அநேகமும்    கை வசப்பட்ட பலவித செல்வங்களும் 
விழுங்கப்பட்டு அறவேமுற்றிலுமாக உணவு முதலியவற்றில் செலவழிந்து/ அல்லது பொது மகளிரால் கவரப்பட்டு
அறல் ஓதியர் விழியாலேஆற்றுப் படுகையில் காணப்படும் கரிய நெளிந்த கோடுகள் போல உள்ள கூந்தலை உடைய பெண்களின் கண்களால் (ஈர்க்கப்பட்டு)
விரும்பத்தக்கன போகமும் மோகமும் விரும்பியவாறு அனுபவித்த இந்திரிய சுகங்களும்   
விளம்பத்தக்கனபெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடிய
ஞானமும் மானமும்கல்வி, கேள்வியினால் அடைந்த அறிவும் குடிப்பிறப்பு முதலான பல பெருமைகளும், தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய பெருமிதமும் எல்லாம்
வெறும் சுத்த சலமாய்விலையில்லாத வெறும் தண்ணீர் போல மதிப்பு இழந்து விடுமாறு
வெளியாய் உயிர் விடுநாளில் இந்த உயிர் உடலை விட்டு வெளியே போய்விடும் சமயத்தில்
இடும் கட்டைக்கு சிதை எனப்படும் அடுக்குக்கட்டைகளுக்கு
இரையாய் அடியேன் உடல் கிடந்திட்டு உணவாக இந்த என் உடம்பை அதில் படுக்க வைத்து
தமரானவர் கோ என என் உறவினர் ஓலமிட்டு அழுது
இடம் கட்டிச் சுடுகாடு புகா முனம்பாடை முதலியவற்றைக்கட்டி சுடுகாட்டுக்கு எடுத்துக்கொண்டு போவதற்கு முன்பாகவே (நான் உயிரோடு வாழும் போதே)
மனதாலே இறந்திட்டுவிருப்பு வெறுப்புக்களுக்கு இடமான மனம் இறந்து விட (விருப்பு வெறுப்பற்று) அதனால்
பெறவே கதியாயினும்இந்த உலக நடப்பில் இருந்து விலகிய ஜீவன் முக்தி நிலையோ அல்லது
இருந்திட்டுப் பெறவே மதியாயினும் அதனினும் உயர்ந்ததான இவ்வுலகத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் உனது செயலாக, விளையாட்டாகக் காணும் பக்குவமாகிய விஞ்ஞானத்தையோ
இரண்டில் தக்கது ஒர் ஊதியம்இவ்விரண்டில் எனக்குத் தகுந்த ஒரு சம்பளம்
நீ தர இசைவாயேஎனக்குத்தர சம்மதிப்பாயாக
கொடுங்கைப்பட்ட மிக உறுதியான
மரா மரம் ஏழுடன்ஏழு ஆச்சா மரங்களோடு
நடுங்க சுக்ரீவனோடு அமராடியபயந்த தன் தம்பி சுக்ரீவனோடு போர்புரிந்த
குரங்கை செற்றுவாலி என்னும் வானரத்தையும் வீழ்த்தி,
மகா உததி தூள் எழபெரும் கடல் வற்றி மணல் ஆகும்படிச் செய்த (இராமன் சமுத்திர ராஜன் வழிவிட இணங்காத போது, வில்லை வளைத்ததுமே கடல் வற்ற, பின் அவன் வெளிப்பட்டு நள நீலர்கள் வரத்தைக்கூறிப்  பாலம் கட்டும் வழி சொன்னதனால் சமுத்திரம் பழையபடி ஆனது)
நிருதேசன் குலம் கண் பட்டஅசுரேசனான ராவணனின் குலத்தைச் சேர்ந்தவர்கள்
நிசாசரர் கோ எனஇரவில் (அதிக பலம் பெற்று) நடமாடும் ராட்சசர்கள் கதறும்படியும்
இலங்கைக்குள் தழலோன் எழஅவன் தலைநகரான இலங்காபுரியில் அக்னி பகவான் ஓங்கி எழும்படியும்
நீடிய குமண்டைபெரும் கர்வம் கொண்ட
குத்திர ராவணனார்(கீழான) வஞ்சகம் உடைய ராவணன், அவனைச்சேர்ந்தவர்கள்
முடி அடியோடே பிடுங்க தலைகள் மீதி இல்லாமல் விழுந்துபடவும்
தொட்ட சர அதிபனார்தொடுக்கப்பட்ட அம்புகளுக்கு உரியவரான இராமபிரானான திருமால்
அதி ப்ரியங்கொள்மிகுந்த அபிமானம் கொள்ள
தக்க நன் மா மருகாதகுதியான (வீரத்தில் அவருக்குக் குறையாத, மேலான) நல்ல பெருமை பொருந்திய மருமகனே
இயல் ப்ரபஞ்சத்துக்குஇந்தப் பெரிய அண்டத்திலே
ஒரு பாவலனார் என விருது ஊதும்ஒப்பற்ற தனித்துவம் வாய்ந்த புலவர் என்று கட்டியம் கூறிப் போற்றப்படும்
ப்ரசண்ட சொல்தங்கு தடை இன்றி அருவியாய்ப்பாயும் நாவன்மை பெற்ற ஞான சம்பந்தராய் வந்த
சிவ வேத சிகாமணிசைவத்துறையின் தலை ஆபரணமாய் திகழும்
ப்ரபந்தத்துக்கு ஒரு நாதாசைவ நூல்களுக்கு ஒப்பற்ற தலைவனே
சதாசிவாஉண்மையில் நீ வேறு சிவன் வேறு அல்ல, நீயே அனுக்ரஹ மூர்த்தியான சதாசிவன் ஆவாய்
பெரும்பற்றப்புலியூர்தனில் மேவிய பெருமாளே சிதம்பரத்தில் பெருமையோடு உறையும் எம் தலைவா

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே