புவிக்கு உன் பாதம்— பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link buvikkun patham

புவிக்குஇந்த பூமிக்கு உள்ளே இருந்தாலும் (மானுடராக)
உன் பாதம் அதை நினைபவர்க்கும்உன் திருப்பாதங்களை இடையறாது தியானம் செய்பவர்களுக்கும் கூட (தேவர்களை, ரிஷிகளைப்போல)
கால தரிசனை இறந்த நிகழ் வரும் என மூன்று கால நிகழ்வுகளும்
புலக்கண்கூடும் கண்கூடாகப் புலப்படும் ( தெரியும்)
அது தனை அறியாதேஎன்பது தெரியாமல் (அவர்கள் காட்டிய நல் வழிகளை விட்டு விட்டு)
புரட்டும் பாத சமயிகள் பொய்யை மெய் போல நாவன்மையால் காட்டும் பாவத்தில் சேர்க்கும் மார்கங்களைக் கடைப்பிடிப்பவர்
நெறிக்கண் பூது படிறரை கூறும் வழிகளில் சேரும் வஞ்சகர்களை
புழுக்கண் பாவம்புழுக்கள் நிறைந்த நரகம் சேர்வதற்கான பாபம்
அது கொளல் பிழையாதேவந்து சேர்வது தவிர்க்க முடியாதது
கவிக்கொண்டாடு புகழினை பெரும் ஞானிகள் உன்னைக்கொண்டாடிப் பாடின உன் குணங்களை
படிக்கும் பாடு திறம் இலி படிக்கவோ இசையால் பாடவோ திறமை, சாமர்த்யம் இல்லாதவன்
களைக்கும் பாவச் சுழல் படும்சோர்வை உண்டாக்கும் பாபச்செயல் எனும் சுழியில் வீழ்ந்த (பாபத்தின் காரணம் பிறவி, பின்னும் நல்லோர் இணக்கம் இல்லாமையால் பாபம் என்று தொடர்வதனால் வெளி ஏற வழி இல்லாத சுழி என்றார்.)
அடி நாயேன் நாயினும் கீழான நான்
கலக்கு உண்டாகு புவிதனில்மனக்கலக்கத்தை உண்டு பண்ணும் கவர்ச்சிகள் நிறைந்த இவ்வுலகில்
எனக்கு உண்டாகு பணிவிடை எனக்கு ஏற்பட்டு இருக்கும் நல்ல செயல்கள், இறைத்தொண்டு இவை என் புண்ணியத்தின் அளவே ஆம்
கணக்கு உண்டாதல் திரு உ(ள்)ளம் அறியாதோ என்ற கணக்கு இருப்பதை உன் திருவுள்ளம் அறிந்ததுதானே (என் கணக்கில் அதிக புண்ணியம் இல்லை என்பதை நீ அறிவாய் அல்லையோ)
சிவத்தின் சாமி எல்லா நன்மை (மங்களங்களுக்கும்) சொந்தக்காரனே (சிவன் மகனே என்றும் பொருள் கூறுவர்)
மயில் மிசை நடிக்கும் சாமி மயில் வாகனம் ஏறும் ஆனந்தமாய் நடனம் ஆடும் தலைவனே
எமது உ(ள்)ளே (ஏகாரம் குறுகி வந்தது) சிறக்கும் சாமிஎன் இதயத்தின் உள்ளே சிறப்பாக விளங்கும் ஸ்வாமி
சொருபம் இது ஒளி காண செழிக்கும் சாமிஉள்ளத்தில் உன் ஒளி பொருந்திய சொரூபத்தைக்காணும் தோறும் மேலும் விகசித்து தழைக்கும் தலைவா (ஞானிகள் உள்ளத்தில் இது என் வடிவம் என தெளிவாகத் தெரியும் ஸ்வாமி என்றும் பொருளாம்)
பிறவியை ஒழிக்கும் ஸ்வாமி தன்னைத்தஞ்சம் என்று அடைந்தவர்க்கு முக்தி அளித்து இனிப்பிறவி இல்லாமல் செய்து விடும் ஸ்வாமி
பவம் அதைத் தெறிக்கும் சாமி வினைகள் என்னும் சங்கிலித் தொடரை உடைத்து எறியும் ஸ்வாமி
முனிவர்கள் இடம் மேவும்முனிவர்கள் தவம் புரியும் இடங்களில் இருக்கும் (அல்லது முனிவர்கள் புரியும்)
தவத்தின் சாமிஅவர்கள் தவம் செய்து அடைய விரும்பும் பொருளான (முக்தி/ஆத்ம ஆனந்தமான) ஸ்வாமி
புரி பிழை பொறுக்கும் சாமிநான் (அல்லது அடியவர்) செய்யும் தவறுகளைப் பொறுத்து மன்னிக்கும் ஸ்வாமி (கோடி பிழை கருதினாலும் முனிய அறியாத பெருமாள்)
குடி நிலை தரிக்கும் சாமிதேவ லோகத்தில் தேவர்களைக் குடி ஏற்றி அங்கு நிலை பெறச்செய்த ஸ்வாமி
அசுரர்கள் பொடியாக சதைக்கும் சாமிஅந்த தேவர்களைத்துன்புறுத்திய சூர பத்மன் தாரகாசுரன் போன்ற பல கோடி அசுரர்கள் மண்ணாகும்படி சிதைத்த/ அழித்த ஸ்வாமி
எமைப்பணி விதிக்கும் ஸ்வாமி எம்மை அடிமை கொண்டு எம்மிடம் ஏவல்கள் செய்து கொள்ளும் தலைவர்
சரவண தகப்பன் சாமிசரவணத்தில் தோன்றிய தந்தைக்கு உபதேசம் செய்த ஸ்வாமிநாத ஸ்வாமி
என வரு பெருமாளேஎன்றெல்லாம் புகழ் பெற்ற எம் ஐயனே. (போற்றி)

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே