பருத்த பல் — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link paruththa pal

பருத்தபெரிய (சிரத்தில் மூளை இருப்பதால் பெருமைக்குரிய - எண் சாண் உடம்புக்கு பிரதானம் என்று கூறப்படும்- என்றும் கொள்ளலாம். )
பல்பல் (முதலிய அவயங்கள் கொண்ட)
சிரத்தினைதலையையும்
குருகனத்த, பெரிய
திறல் கரத்தினைவலிமை உடைய கைகளையும்
பரித்த அப் பதத்தினைஇவற்றோடு கூடிய உடலைத் தாங்குகின்ற அந்தக் கால்களையும்
பரிவோடே படைத்த பொய்க்குடத்தினை அன்போடு பெற்றிருக்கின்ற ஓட்டைக்குடம் போன்ற (கணத்துக்குக்கணம் மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும்)
பழிப்பு அவத்து இடத்தினைபழிக்கும் (இகழ்ச்சிக்கும்) பாபங்களுக்கும் உறைவிடமான
பசிக்குடல் கடத்தினை பசி நோய்க்குக்காரணமான குடலும் உணவை விழுங்கிச் சேர்க்கும் பானையுமான
பய(ம்) மேவும்எப்போது மரணம் நேருமோ அல்லது வேறு துன்பம் தாக்குமோ என்ற அச்சத்திற்கு இடமானதும்
பெருத்த பித்து உரு(த்) தனைகவலையால் பித்தம் அதிகம் சுரக்கின்ற இந்த உடலை
கிருத்திம தோலால் ஆன (கிருத்தி தோலைக்குறிக்கும் வடமொழிச்சொல் எனவேதான் கிருத்திவாசன் என்று சிவபெருமான் பெயர்; ஆனைத்தோலை உடுத்தி இருப்பதால். தீய செயல்களுக்குக்காரணமான எனலும் ஆகும்.)
துருத்தியைகாற்றை ஊதி நெருப்பை வளர்க்கும் கருவி போல மூச்சுக்காற்றால் ஜடராக்னியைக் காப்பாற்றும் இவ்வுடலை,
பிணித்த முக்கு(ற்)றத்து ஒடு சேர்த்து வைத்த ஆசை கோபம் அல்லது விருப்பு, வெறுப்பு, பொய்யை மெய் எனக்கருதும் மயக்கம் இம்மூன்று குற்றங்களும் (அல்லது ஆணவம் கர்மம் மாயை ஆகிற மூன்று)
ஐ(ம்)புலன் ஆலும்காணுதல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடு உணர்ச்சி ஆகியவற்றுக்குக் காரணமான ஐந்து தன்மாத்திரைகளையும்
பிணித்த இப் பிணிப் பையைசேர்த்துக்கட்டிய இந்த நோய்களுக்கு இருப்பிடமானதொரு பை போன்ற உடலை (ஆணவ கர்ம மாயையும் ஐம்புலன் விஷயங்களின் சேர்க்கையுமே மனிதனைக் கர்மங்களைச்செய்யத்தூண்டுகின்றன, பெரும்பாலும் மீண்டும் பிறக்க ஏதுவான)
பொறுத்துசுமந்து
அமிழ் பிறப்பு அற பின் மரணத்தில் மூழ்கடித்து தொடர்ந்து நடைபெறுகின்ற இந்தப் பிறப்பு இறப்புச் சுழற்சி இனி இல்லாமல் செய்வதையே
குறிக்கருத்துபிறப்பின் நோக்கமாகக்கொள்ளும் எண்ணத்தை
எனக்கு அளித்து அருள்வாயோஇச்சிறியேனுக்கு கொடுத்து அருளல் ஆகாதோ
கருத்தில் உற்று உரைத்த தம் சிந்தையில் உன்னை நிறுத்தி உன் திருப்பெயர், திருக்குணங்கள், திருப்புகழ் இவற்றைக் கூறும்
பத்தரைஅடியவர்களை/ அன்பர்களை
தொறுத் திருக்கரைக் கழித்த மிகுந்த வஞ்சனை உள்ளவர்களை அழித்துவிடும் (அல்லது தவிர்த்து விடும்)
மெய்ப்பதத்தில்உன்னுடைய நிலையான பாதங்களில்
வைத்திடு வீரா சேர்த்துக்கொள்ளும் வீரனே
கதித்த நல் தினைப்புனநன்கு விளைந்த தினைப்புனத்தில்
கதித்த நல் குறத்தியைவிளங்கும் நற்குணங்கள் கொண்ட குறப்பெண்ணாம் வள்ளியை
கதித்த நல் திருப்புயத்தில் அணைவோனே உயர்ந்த வீர லக்ஷ்மி பொருந்திய உன் தோள்களால் தழுவிக் கொள்பவனே
செருத்தெறுத்து எதிர்த்த போரில் சாகசத்துடன் நெருங்கி வந்து எதிர்த்து நின்ற
முப்புரத்து மூன்று புரங்களை உடைய (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களாகிய தங்கம் வெள்ளி இரும்பாலான கோட்டைகள்/மதில்கள் கொண்ட மூன்று அசுரர்கள்)
உரத்து அரக்கரைவலிமை உடைய அசுரர்களை
சிரித்து எரித்த நித்தர் தன் புன் சிரிப்பாலேயே எரித்து அழித்த சாவா மூவாப் பெரியோன் ஆன சிவபெருமானின்
பொன் குமரேசாபொன்போன்ற மேன்மை பெற்ற திருக்குமாரா
சிறப்பு உறப் பிரித்து இது அறம் இது அறம் அன்று என்று மிக அழகாகப் பிரித்து
அறத் திறத்துநீதி நெறிகளை விரிவாகச் சொல்லும் திறம் படைத்த; (தமிழில் பக்தி இலக்கியம் அல்லாமல் வெறும் நீதி நெறிகளை மட்டும் சொல்லும் நூல்கள் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தனில் தொடங்கித் திருக்குறள் முடிய எண்ணில் அடங்கா.)
தமிழ்க்கு உயர்த்திசை தமிழ் மொழி வழங்கும் தேசத்திற்கு வடக்குப்புறத்தில்
சிறப்புடை திருத்தணிப் பெருமாளேசிறப்பாக விளங்கும் திருத்தணிப் பதியில் இருக்கும் எம் தலைவனே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே