பிறவியலை — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link piraviyalai

பிறவி பிறவிகள் நடைபெறுகின்ற
அலைஅலைகள் நிரம்பிய, அலை எப்படி மேலும் கீழுமாக அசைகிறதோ அதுபோல் இன்பம் துன்பம் மாறி மாறி ஏற்படுகின்ற
ஆற்றினில்(நதிநீர் கடலில் கலந்தாலும் அதே நீர் ஆவியாகி மேகமாய் மழையாய்ப்பொழிந்து ஓய்வில்லாது ஓடிக்கொண்டே இருப்பது போல் திரும்பத் திரும்ப அதே சுழற்சியில் மறுபடி சேருகின்ற) நதியாகிய உலகத்தில்
புகுதாதேமறுபடியும் வந்து சேராத வண்ணம்
பிரகிருதிஆசைகளைத் துறந்து, நிவ்ருத்தி மார்கம் எனப்படும் ஞானமார்கத்தைக் கடைப்பிடிக்காமல்,  ஆசைவாய்ப்பட்டு மீண்டும் மீண்டும் பல செயல்கள் புரிந்து மேலும் கர்மாவைச் சேர்த்துக் கொள்வதைத் தவிர்ப்பதை விட்டு, மாந்தர் இயற்கையான ப்ரவ்ருத்தி
மார்கம் உற்றுஎனும் உலகாயத வழியைப் பின்பற்றி
அழியாதேமுக்திக்கு எதிரான திசையில் சென்று மனிதப்பிறவி வீணாகி விடாமல்
உறுதி குரு வாக்கியநிச்சயமான (முக்தி தரவல்ல) (நல்ல) குருவின் உபதேச வாக்கின் (மந்திரம் என்றும் கொள்ளலாம்)
பொருளாலேபொருளை த்யானித்து கடைப்பிடித்து
உனது பத காட்சியைஉன் மேலான நிலை (திருவடி)யின் தரிசனம்
தருவாயேநான் பெற அருள்வாய்
அறு சமயஆறாக (காணபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்னும் அல்லது ஞான,கர்ம பக்தி, யோக, சாங்க்கிய என்றெல்லாம்) வகுக்கப்பட்ட மார்கங்களிலும்
சாத்திர முடிந்த முடிவாக/இலக்காக
பொருளோனே கூறப்படும் (பரம்) பொருள் ஆனவனே
அறிவில்தம் உள் உணர்வால்
அறிவார் உன்னை உணர்ந்த அதாவது அனுபூதி அடைந்தவர்கள்
குணக்கடலோனே(அன்பு முதலிய)  நல்ல குணங்களில் எல்லை இல்லாதவனாக அறியப்படுபவனே
குறு முனிவன்குள்ள வடிவம் உள்ள அகஸ்த்ய ரிஷி
ஏத்தும்குருவாகப் பூஜிக்கும் (முருகன் அகஸ்த்யருக்கு தமிழ் இலக்கணம் முதலியன போதித்ததோடு யோகமும் உபதேசித்தார் என்பதை "சுப்ரமண்யம்" எனும் தன் நூலில் அகத்தியரே சொல்கிறார்.)
முத்தமிழோனே இயல், இசை, நாடக மூன்று வடிவில் விளங்கும் தமிழில் வல்லவனே
குமர குருஎன்றும் இளமையானவனே, குருவாக  விளங்குபவனே (ஆதி குருவாம்   சிவனுக்குக்  குமாரனாகவும் குருவாகவும் திகழும் ஸ்வாமி நாதனே)
கார்த்திகை பெருமாளேகார்த்திகை ஆறு கார்த்திகைப்  பெண்களால்  வளர்க்கப்பட்ட பெருமாளே

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே