வதன சரோருக — பதவுரை

By Mrs Devaki Iyer, Pune

For a translation of this song in English, click the link vathhana sarOruga

வதன சரோருக முகமாகிய தாமரை (யும்)
நயன சீலிமுகஅதில் உலவும் கண்களாகிய வண்டுகள் (உம்) உடைய
வள்ளி புனத்தில் நின்றுவள்ளிப் பிராட்டியின் தினைப்புனத்தில் இருந்து
வாராய் பதி என்னோடு (என்னுடைய) ஊர் (அதாவது திருத்தணி) வருவாய்
காதம் காது அரை ஒன்றரைக்காத தூரம்,
ஒன்றும் ஊரும் உன் ஊருக்கு அருகாமைதான்
வயலும் ஒரே இடைஇதே வயலுக்கு இடையில்தான் (உள்ளது)
என ஒரு கா இடை என்றெல்லாம் ஒரு சோலையின் நடுவில் இருந்து
வல்லபம் அற்றுதன்னுடைய வலிமை எல்லாம் இழந்து (மறந்து)
மாலாய் மிகுந்த காதல் வயப்பட்டு
மடல் ஏறும் காமுக(காதலி தன்னை ஏற்கவில்லை என்றால் அவள் உருவத்தை வரைந்து கையில் பிடித்துக்கொண்டு ஒரு தென்னை அல்லது பனைமட்டையில் ஏறித்தன் தோழர் இழுத்து வர அவள் ஊர் முழுதும் சென்று அவள் வீட்டு வாயிலிலேயே உண்ணா விரதம் இருந்து உயிர் விடுவது மடல் ஏறுவதாகும்; ஆனால் அதற்கு முன்பே அந்தத்தலைவியும்(காதலியும்) அவள் பெற்றோரும் சம்மதித்து விடுவர். ) (முருகன் வள்ளி மேல் அத்தனை மோகம் கொண்டிருந்தானாம்) மடல் ஏறும் அளவு அவள் மீது அன்பு கொண்ட காதலனே!
எம்பிரானே என் தலைவனே
இதவிய காண் இவைஇதோ பார் இவை மிக இதமானவை(சுவையானவை மிருதுவானவை)
ததை என (தாதை) அப்பனே என்று கூறி
வேடுவன் எய்திடும் எச்சில் தின்று கண்ணப்பனாகிய வேடன் தான் கடித்துச் சுவைத்த (பன்றி மாமிசமாகிய) மிச்சத்தை தான் உண்டு
லீலாசலம் ஆடும்விளையாட்டு நாடகம் ஆடிய
தூயவன் எந்த அழுக்கும் எப்போதும் அண்ட முடியாத பரிசுத்தமான சிவபெருமானின்
மைந்தாகுமாரனே (நீயும் அது போலவே வள்ளியிடம் தோற்றதுபோல் நாடகம் அல்லவோ ஆடுகிறாய்)
நாளும் இளையவ என்றைக்கும் இளமையோடு திகழும் குமரக்கடவுளே
மூதுரை முதன்முதல் நக்கீரனார் பாடிய திருமுகாற்றுப்படையில்
மலைகிழவோன் என குறிஞ்சி நிலத்துக்கு உரிய தலைவன் என்று (எல்லாம் உன் பெருமை சொல்லிப்) போற்ற
வெள்ளம் எனக்கலந்து வெள்ளம் போல் பெருகி வரும்
நூறாயிர பேதம்>லட்சக்கணக்கில் வரும் பலதரப்பட்ட
சாதம் பிறவிகள்
ஒழிந்தவா தான் இல்லாமல் போய்விட்டனவே, என்ன அதிசயம்!
கதைகௌமோதகி என்னும் கதாயுதம்
கன சாப பெருமை மிக்க சாரங்கம் எனும் வில்
திகிரி சுதர்சனச் சக்கரம்
வளை பாஞ்சஜன்யம் எனும் சங்கு
வாளொடுநந்தகம் என்ற வாள்
கைவசிவித்து தன் கையில் ஏந்திய
அ(ந்) நந்ந கோபால மகீபன் தேவி அந்த நந்த கோபால (யாதவர் தலைவன்)அரசனுடைய மனைவியாகிய யசோதை
மகிழ்ந்து வாழ (அவர் பால லீலைகளைக்கண்டு) மகிழ்ச்சியோடு வாழுமாறு
கயிறோடு (அம்மாது) கயிற்றைக்கொண்டு கட்ட
உலூகலம் உரலோடு
உருள உலாவியஅந்த உரலும் உருண்டு வரும்படித்தவழ்ந்த(இரு மருத மரங்களுக்கிடையில் தான் புகுந்து செல்ல, உரலால் இடிபட்டு அவ்விரு மரம் சாய, மர ரூபமாய் நின்ற நள குபேரன், மணிக்ரீவன் சாப விமோசனம் பெற்றனர் என்பது பாகவத கிருஷ்ண சரிதம்).
கள்வன் வெண்ணெய் திருடி உண்டவன், மாயா சரிதங்கள் உடையவன்
அறப்பயந்து ஒரேயடியாக பயந்து விடும்படி (அனைவரும்)
ஆகாய கபாலம் பீறிஆகாசத்தின் உச்சியைக் கிழித்துக் கொண்டு
நிமிர்ந்து நீள திடீரென வளர்ந்து நெடியோனாகி நிற்க
விதரண மாவலி கொடையாளியான மகாபலிச்சக்ரவர்த்தி
வெருவ பயந்து போகும்படி
மகாவ்ருத ஒரு ப்ரம்மச்சாரியாகத் தோன்றி
வெள்ள வெளுக்க= அனைவரும் காணும் படி வெட்டவெளியில் நின்ற
நாராயண மாமன் சேயை உன் மாமனாகிய நாராயணரின் மகனாகிய பிரம்மாவை
முனிந்த கோவே கோபித்த (பிரணவத்தின் பொருள் தெரியாததாலும், கர்வித்ததாலும் தண்டித்த) தலைவனே
விளை வயலூடுசெழிப்பான (விளை)நிலங்களுக்கு நடுவே
இடை இடை இடையில்
வளை சங்குகள்
விளையாடியஉள்ளே ஒரு உயிரினம் இருப்பதால் அசைகின்ற
வெள்ளி நகர்க்கு அமர்ந்த வெள்ளி(கர) நகரத்தில் குடி கொண்டு இருக்கும்
வேலாயுத வேலாயுதம் தரித்த
மேவும் தேவர்கள் தம்பிரானே தேவ லோகத்தில் வசிக்கும் தேவர்களுடைய விசேஷமான தலைவனே.

Comments

  1. Arumai
    Ohm Saravanabava
    Ohm Saravanabava
    Ohm Saravanabava

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே