307. குடல் நிணம் என்பு
Learn The Song
Raga Hamsanandi (Janyam of 53rd mela Gamanashrama)
Arohanam: S R1 G3 M2 D2 N3 S Avarohanam: S N3 D2 M2 G3 R1 SParaphrase
குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு (kudal niNam enbu pulAl kamazh kurudhi narambu) : The intestines, the fat, the bones, flesh, fully-spread blood and nerves...
இவை தோலிடை குளுகுளெ னும்படி மூடிய (ivai thOlidai kuLukuLu enumpadi mUdiya) : all these are enclosed under the cover of the skin in a cool and temperate manner;
மல மாசு குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பையை (mala mAsu kudhi koLum onbadhu vAsalai udaiya kurambaiyai) : faeces and other dirts fill up this little cottage of a body containing nine portals; கண்கள், நாசித்துவாரங்கள், காதுகள், வாய், மலத்துவாரம், சலத்துவாரம் என்னும் ஒன்பது உடல்வாயில்கள்;
நீரெழு குமிழியினும் கடிதாகியெ அழி ( neeRezhu kumizhiyinum kadi dhAgiye azhi) : it is destroyed faster than the bubble formed on the surface of water.
மாய அடலை உடம்பை அவாவியெ (mAya adalai udambai avAviye) : Being attached to this mystical body which finally ends up as ashes, அழியும் தன்மை உடையது உடல். 'அல்லின் நேரும் மின் அதுதானும் அல்லதாகிய உடல்'. (193. அல்லில் நேர்) அடலை (adalai) : ashes, சாம்பல்;
அநவரதம் சில சாரமில் அவுடதமும் ( anavaratham sila sAramil avudadhamum) : I have been always pursuing some useless medicines and
பல யோகமு(ம்) முயலா நின்று (pala yOgamu muyalA nindru) : attempting to practise many yogic exercises;
அலமரு சிந்தையின் ஆகுலம் அலம் அலம் (alamaru chinthaiyin Akulam alamalam) : and my mind has been tossing about in distress; enough is enough! அலமருதல் (alamaruthal) : to become agitated, to be in a whirl;
என்றினி யானு நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ (endrini yAnunin azhagiya thaNdai vidAmalar adaivEnO) : I do not know when I shall attain Your lotus feet that are adorned with anklets.
இடமற மண்டு நிசாசரர் அடைய மடிந்து (idamaRa maNdu nisAcharar adaiya madindhu) : The demons, stampeding and advancing in the war, were all killed together;
எழு பூதரம் இடிபட (ezhu bUdharam idipada) : the seven famous mountains (headed by Mount Krouncha) were all shattered to pieces;
இன்ப மகோததி வறிதாக (inba mahOdhadhi vaRidhAga) : the large ocean, which is always pleasant to view, became dry and parched;
இமையவரும் சிறை போய் அவர் பதியுள் இலங்க விடு ஆதர (imaiyavarum siRai pOy avar padhiyuL ilanga vidAdhara) : Oh Compassionate One! You freed the celestials from SUran's prisons and restored them safely to their home town (AmarAvathi).
எழில் படம் ஒன்றும் ஒராயிர முகமான விடதர கஞ்சுகி (ezhil padam ondrum or Ayira mugam Ana vidadhara kanjuki ) : the poisonous serpent, (AdhisEshan) which has thousand faces with beautiful hoods; விடதர கஞ்சுகி (vidadhara kanjuki) : the poisonous serpent, (AdhisEshan);
மேரு வில் வளைவதன் முன் புர நீறெழ (mEru vil vaLaivadhan mun pura neeR ezha ) : once, before the string on the bow of Mount MEru (during the war of SivA with Thiripura asuras) was even bent, Thiripuram was completely burnt down to ashes,
மாயையால் உருவான பொறி-புலன்களான இந்திரியங்களுடன் கூடிய உடலை நிர்வாகம் செய்யும் உயிரே ‘இந்திரன்’ என்னும் தத்துவம். மும்மலங்களே ‘முப்புரங்கள்’. முப்புரங்களின் (இந்திரியங்களின்) பிடியில் சிக்கிய இந்திரன் என்னும் உயிர் தன்னைக் காக்க இறைவனிடம் சரணடைகிறது; கருணை என்னும் அழகிய புன்னகையுடன் இறைவன் உயிரை நெருங்கி, அறியாமை உள்ளிட்ட மும்மலங்களையும் நீக்குகிறான்; இதுவே முப்புரங்கள் எரித்து அழிக்கப்படும் தத்துவம். போர் செய்யத் தேவர்கள் செய்து கொடுத்த தேரைப் பயன்படுத்தாமல், தன்னுடைய எழில் நகைப்பினால் முப்புரங்களை சிவபெருமான் எரித்தான் என்பது, மும்மலங்களிலிருந்து விடுதலை பெற, தன் முனைப்பினால் உயிர்கள் செய்யும் புலனடக்கத் தவங்கள் பயன்படாது. இறைவனின் அருளால் மட்டுமே உயிர்கள் மும்மலநீக்கம் பெற முடியும். 'ஆட்டி வடவரை வாட்டி யரவொடு பூட்டி திரிபுரம் மூட்டி' (187. பாட்டிலுருகிலை) 'அன்றெயில் தீப்பட அதிபார வாடை நெடுங்கிரி கோட்டிய வீரன்' ( வேடர் செழுந்தினை)
வெயில் நகை தந்த புராரி மதன கோபர் (veyil nagai thandha purAri madhana kObar) : Lord SivA, the enemy of Thiripuram, merely with His smile. He also angrily burnt down Manmathan by His fiery eye on His forehead. வெயில் நகை (veyil nagai) : bright smile;
விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா (vizhiyinil vandhu bageerathi misai vaLarun chiRuvA) : You came from the flames from His eyes and were reared by the River Ganga, Oh young one, (சிவபிரானது) கண்களில் பொறியாகப் பிறந்து கங்கையின் மீது வளர்ந்த சிறுவனே!
வட விஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே (vada vijaya purandhanil mEviya perumALE.) : You are seated at this place, North Vijayapuram, Oh Great One! விஜயபுரம் இன்றைய திருவாரூரின் ஒரு பகுதி.
Comments
Post a Comment