420. வேடர் செழுந்தினை
Learn The Song
Know Raga Simhendramadhyamam (57th mela)
Arohanam: S R2 G2 M2 P D1 N3 S Avarohanam: S N3 D1 P M2 G2 R2 SParaphrase
வேடர் செழும் தினை காத்து இதண் மீதில் இருந்த பிராட்டி (vEdar sezhum thinai kAththu ithaN meedhil irundha) : Standing on the high bamboo platform in the hunters' millet field, Valli guarded the full-grown millet; வேடர்களுடைய செழுமை வாய்ந்த தினைப் புனத்தைக் காவல் காத்து, (அங்கு) பரண் மீது இருந்த வள்ளி பிராட்டியாருடைய
விலோசன அம்புகளால் செயல் தடுமாறி (pirAtti vilOchana ambugaLAR seyal thadumARi) : You were struck by that VaLLi's arrow-like eyes, You reeled over and pretended to totter; கண்கள் ஆகிய அம்புகள் பாய்வதால் செயல் தடுமாற்றம் அடைந்ததுபோல நடித்து,
மேனி தளர்ந்து உருகாப் பரிதாபமுடன் (mEni thaLarndhu urugAp parithApam udan) : as if Your body had lost its vigour, with a melting heart, You pathetically (assuming the disguise of an old man) உடல் சோர்வு அடைந்து மனம் உருகி நின்று, பரிதபிக்கத் தக்க நிலையில் (கிழவேடம் பூண்டு)
புனம் மேல் திரு வேளை புகுந்த பராக்ரமம் அது பாடி (puna mEl tiru vELai pugundha parAkramam adhu pAdi) : and valiantly waited for the most opportune moment to enter the millet field; many (poets) have sung about gallantry தினைப் புனத்திற்கு சிறந்த சமயம் பார்த்து உள்ளே புகுந்த திறமையைக் கவிகளில் அமைத்துப் புகழ்ந்து பாடி,
நாடு அறியும்படி கூப்பிடு நாவலர் தங்களை ஆர் (nAdu aRiyum padi kUppidu nAvalar thangaLai Ar) : composing poems proclaiming loudly to the world, உலகத்தோர் (உனது கருணையை) அறிந்து உய்யும்படி ஓலமிட்டு உரைக்கின்ற நாவல்ல புலவர்களைக் கட்டி வசீகரிக்கும்; ஆர் = கட்டி வசீகரிக்கும்;
பதினாலு உலகங்களும் ஏத்திய இரு தாளில் (padhinAlu ulagangaLum Eththiya iruthALil) : the glory of Your feet have been praised by the inhabitants of fourteen worlds. பதினான்கு உலகில் உள்ளோரும் போற்றும் உனது இரண்டு திருவடிகளில்,
நாறு கடம்பு அணியாப் பரிவோடு புரந்த பராக்ரம (nARu kadamb aNiyAp parivOdu purandha parAkrama) : Those valiant feet wearing the fragrant kadappa garlands protect affectionately Your devotees; மணம் கமழும் கடப்பமாலையை அணிந்த உன் திருவடிகளில், அன்புடன் வைத்துக் காக்கின்ற உனது திறமையை,
நாட அரும் தவம் வாய்ப்பதும் ஒரு நாளே ( nAda arunthavam vAyppadhum oru nALE) : Will there be a day when I can do a rare penance to seek the protection of those much-sought-after feet? (சிறந்த பாக்களால் துதிக்கும் புலவர்களும் பதினான்கு உலகங்களும் உன் திருவடிகளை) நாடி நிற்க, அருமையான தவச் செயலால் அடியேனுக்கும் கூடும்படியான ஒரு நாள் கிட்டுமோ?
Both Lord Vishnu, who distilled nectar from the milky ocean for the benefit of the celestials, and Lord Shiva, who flexed the Meru mountain to burn away the Tripura forts of the asuras, expressed gratitude that Lord Murugan greatly reduced their burden when He restored Indra's kingdom after annihilating the asuras.
ஆடக மந்தர நீர்க்கு அசையாமல் உரம் பெற நாட்டி (Adaga manthara neerkku asaiyAmal uram peRa nAtti) : The golden mount, Manthara, was firmly fixed as the churning rod in the middle of the milky ocean; பொன் மயமான மந்தர மலையை பாற்கடல் நீரில் அசையாதபடி வலிமையுடன் மத்தாகப் பொருத்தி வைத்து, ஆடகம் (Adagam) : gold;
ஒரு ஆயிரம் வெம் பகுவாய்ப் பணி கயிறாக (or Ayira vem bahuvAyp paNi kayiRAga) : by winding as a rope the great serpent VAsuki having thousands of hot poisonous split tongues and fangs; ஒப்பற்ற ஆயிரக் கணக்கான வெப்பம் மிகுந்த பிளவான நாக்குகளை உடைய பாம்பாகிய வாசுகியை (மத்தின்) கயிறாகச் சுற்றி, பணி (paNi) : serpent;
ஆழி கடைந்து அமுது ஆக்கி (Azhi kadaindh amudhAkki ) : churned the ocean and produced nectar; பாற்கடலைக் கடைந்து அமுதத்தை வரவழைத்து,
அநேகர் பெரும் பசி தீர்த்து அருள் ஆயனும் (anEkar perumpasi theerth aruL Ayanum) : which was served by the cowherd Krishna to satiate the large hunger of the celestials; That Vishnu, இந்திராதி தேவர்களுடைய மிகுந்த பசியை நீக்கி (மோகினியாக) அருள்புரிந்தவனும், ஆயர் குலத்தில் அவதரித்தவனுமான திருமாலும்,
அன்று எயில் தீப்பட அதி பார வாடை நெடும் கிரி கோட்டிய வீரனும் (andru eyil theeppada athibAra vAdai nedungiri kOttiya veeranum) : Once, to burn away the three citadels in the three cities of Tripua, He arched the heavy Mount Meru in the north into a bow; that valiant Lord SivA; - both of them praised You saying, முன்பு, முப்புரங்களும் தீயில் அழிவதற்காக, அதிக கனமாக வடக்கே உள்ள பெரிய மேரு மலையை (வில்லாக) வளைத்த வீரனுமாகிய சிவபெருமானும், எயில் (eyil) : fort, fortress, a wall, city, மதில், நகரம்; வாடை (vAdai) : the north wind, வடகாற்று; கோட்டிய (kOttiya) : arching (the bow), (வில்லாக) வளைத்த;
எம் பரம் ஆற்றிய வாழ்வு என (em param Atriya vAzhvena) : "You have reduced our burden, Oh Lord"; எங்களது சுமையைக் குறைத்த செல்வமே என்று உன்னைத் துதிக்க,
வஞ்சக ராக்ஷதர் குலம் மாள (vanjaga rAkshadhar kulam mALa) : the clan of the treacherous demons was destroyed; வஞ்சக அரக்கர்களின் கூட்டம் அழித்து,
வாசவன் வன்சிறை மீட்டு அவன் ஊரும் அடங்கலும் மீட்டு (vAsavan van siRai meettu avan Urum adangalum meettu) : IndrA was rescued from his rigorous prison, and his entire kingdom and wealth were restored; இந்திரனின் கொடிய சிறையை நீக்கி அவனை விடுவித்து, அவன் ஊராகிய பொன்னுலகத்தையும் மற்றும் செல்வங்களையும் முழுவதுமாக மீட்டுத் தந்து,
அவன் வான் உலகும் குடி ஏற்றிய பெருமாளே.( avan vAn ulagun kudi Etriya perumALE.) : and resettled the DEvAs in his celestial land by You, Oh Great One! அவனுடைய விண்ணுலகத்தில் குடி ஏற்றி வைத்த பெருமாளே.
Comments
Post a Comment