400. புத்தகத்து ஏட்டில்


ராகம்: ஆபோகிஅங்கதாளம் (2½ + 2 + 1½ + 3)
புத்தகத் தேட்டிற் றீட்டி முடியாது
பொற்புறக் கூட்டிக் காட்டியருள்ஞான
வித்தகப் பேற்றைத் தேற்றியருளாலே
மெத்தெனக் கூட்டிக் காக்க நினைவாயே
தத்தைபுக் கோட்டிக் காட்டிலுறைவாளைச்
சற்கரித் தேத்திக் கீர்த்தி பெறுவோனே
கைத்தலத் தீக்குப் பார்த்துநுழையாத
கற்பகத் தோப்புக் காத்த பெருமாளே.

Learn The Song


Know Ragam Abhogi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 G2 M1 D2 S    Avarohanam: S D2 M1 G2 R2 S

Paraphrase

புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது (puththakaththu Ettil theetti mudiyAthu) : That something which cannot be written down in books or palm leaves; புத்தகங்களிலும் ஏட்டிலும் எழுத முடியாத பொருளை,

பொற்புறக் கூட்டிக் காட்டி (poRpuRak kUttik kAtti) : I want You to reveal Its elegant beauty to me; அழகு பொருந்தக் கூட்டுவித்துக் காட்டியும், பொற்பு (poRpu) : beauty, elegance, பொற்பு, அழகு, பொலிவு;

அருள் ஞான வித்தகப் பேற்றைத் தேற்றி (aruL njAna viththakap pEtRaith thEtRi) : and make me realise the fortune of gracious Knowledge; அருள்மயமான ஞான நன்மைப் பாக்கியத்தை எனக்குத் தெளிய வைத்தும்,

அருளாலே மெத்தெனக் கூட்டிக் காக்க நினைவாயே (aruLAlE meththenak kUttik kAkka ninaivAyE) : and kindly consider protecting me by bestowing gracefully that knowledge on me! உன் திருவருளால் பக்குவமாக எனக்கு அதைக் கூட்டி வைத்தும் என்னைப் பாதுகாக்க நீ நினைத்தருள வேண்டுகிறேன்.,

தத்தை புக்கு ஓட்டிக் காட்டில் உறைவாளை ( thaththai pukku Ottik kAttil uRaivALai) : She is the forest-dweller who sought and chased away the parrots from the millet-field; கிளிகளை அவை தினைப்புனத்தில் இருக்கும் இடம் தேடிச் சென்று விரட்டி அந்தக் காட்டில் வசித்தவளாம் வள்ளியை,

சற்கரித்து ஏத்திக் கீர்த்தி பெறுவோனே (saRkariththu Eththik keerththi peRuvOnE) : You wooed that VaLLi, praised her and attained great fame! உபசரித்து, பாராட்டி, பேரும் புகழும் பெற்றவனே, சற்க(கா)ரம்/सत्कार(saRk(A)ram) : hospitality; விருந்தோம்பல், உபசாரம், அங்கீகாரம்;

கைத்தலத்து ஈக் குப்பு ஆர்த்து நுழையாத (kaiththalaththu eek kuppu Arththu nuzhaiyAtha) : Herds of humming flies and beetles can never penetrate the thick groves of ஈக்கள், வண்டுகளின் கும்பல் ஆரவாரத்துடன் ஒலி செய்து உள்ளே புக முடியாதபடி நெருக்கமான,

கற்பகத் தோப்புக் காத்த பெருமாளே. (kaRpakath thOppuk kAththa perumALE.) : KaRpaga trees in the celestial land which was rescued by You, Oh Great One! கற்பகத் தோட்டங்கள் நிறைந்த தேவலோகத்தைக் காத்த பெருமாளே.

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே