418. வாரி மீதே


ராகம் : குறிஞ்சிஅங்கதாளம் (8½)
2½ + 2½ + 1½ + 2
வாரிமீ தேயெழுதிங்களாலே
மாரவே ளேவியஅம்பினாலே
பாரெலா மேசியபண்பினாலே
பாவியே னாவிமயங்கலாமோ
சூரனீள் மார்புதொளைந்தவேலா
சோதியே தோகையமர்ந்தகோவே
மூரிமால் யானைமணந்தமார்பா
மூவர்தே வாதிகள்தம்பிரானே.

Learn The Song



Paraphrase

This song has been written in the NAyaka-NAyaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan. The sea, the moon, Love God, the flowery arrows and the scandal-mongering women are some of the sources which aggravate the agony of separation from the Lord.

வாரி மீதே எழு திங்களாலே (vAri meedhE ezhu thingaLAlE) : The moon rising over the sea, கடலின் மீது உதிக்கின்ற சந்திரனாலே,

மார வேள் ஏவிய அம்பினாலே (mAra vEL Eviya ambinAlE): the flowery arrows shot by Manmathan (Love God), மன்மதக் கடவுள் ஏவிய மலர் அம்புகளினாலே,

பாரெலாம் ஏசிய பண்பினாலே (pAr elAm Esiya paNbinAlE): and the scandal mongering by the women of the worldpArelA mEsiya paNbinAlE: and the scandal mongering by the women of the world உலகிலுள்ள பெண்களெல்லாம் இகழ்ந்து ஏசிய செய்கையாலே,

பாவியேன் ஆவி மயங்கலாமோ (pAviyEn Avi mayangalAmO): make my sinful life (due to separation from You) very miserable. Is this fair? (உன்னைப் பிரிந்த) பாவம் செய்த தலைவியாகிய நான் உயிர் போகும் நிலைக்கு வந்து மயங்கலாமோ?

சூரன் நீள் மார்பு தொளைந்த வேலா (sUran neeL mArbu thoLaindha vElA) : You have the spear that pierced through the broad chest of SUran! சூரனுடைய பெரும் மார்பைத் தொளைத்த வேலனே,

சோதியே தோகை அமர்ந்த கோவே (jOthiyE thOgai amarndha kOvE) : You are the Eternal Light! You are the king who mounted the peacock! ஜோதியே, மயில் மீது வீற்றிருக்கும் அரசே,

மூரி மால் யானை மணந்த மார்பா (mUri mAl yAnai ma Nandha mArbA): You married DEvayAnai, who feels pride and passion for You! பெருமையும், உன் மீது ஆசையும் கொண்ட தேவயானையை மணந்த திருமார்பா, மூரி (moori): வலிமை, பெருமை, பழைமை;

மூவர் தேவாதிகள் தம்பிரானே. (mUvar dhEvAdhigaL thambirAnE.) : You are the Leader of the Trinity and all DEvAs, Oh Great One! மும்மூர்த்திகளுக்கும், தேவாதிகளுக்கும் தலைவனே.

A few other songs written in the nayaka-nayaki bhava

  1. Vetri Jeyavutra
  2. Pattup padaatha
  3. Kalai madavaar
  4. imarajan nila

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே