404. பேரவா அறா


ராகம்: ஹிந்தோளம்அங்கதாளம் (10½)
1½ + 1½ + 2½ + 2 + 3
பேர வாவ றாவாய்மை பேசற்கறியாமே
பேதை மாத ராரோடு கூடிப்பிணிமேவா
ஆர வார மாறாத நூல்கற் றடிநாயேன்
ஆவி சாவி யாகாமல் நீசற்றருள்வாயே
சூர சூர சூராதி சூரர்க்கெளிவாயா
தோகை யாகு மாரா கிராதக்கொடிகேள்வா
தீர தீர தீராதி தீரப்பெரியோனே
தேவ தேவ தேவாதி தேவப்பெருமாளே.

Learn The Song



Raga Hindolam (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 M1 D1 N2 S    Avarohanam: S N2 D1 M1 G2 S

Paraphrase

பேரவா அறா வாய்மை பேசற்கு அறியாமே (pEravA aRAvAymai pEsaRkku aRiyAmE ) : I am consumed by mammoth/enormous greed, and unable to speak the truth; To be able to speak the truth, one must be fearless and should not be fettered by greed. பேராசை நீங்காத நிலையில் இருந்து, உண்மை பேசுதற்குத் தெரியாமல் இருக்கும் நான்,

பேதை மாதராரோடு கூடிப் பிணிமேவா (pEthai mAtharArOdu kUdip piNi mEvA) : I indulge in the company of stupid women and contracted many diseases. அறிவீனர்களாகிய பெண்களுடன் நான் சேர்ந்து, நோய்களை அடைந்து,

ஆர வார மாறாத நூல் கற்று அடிநாயேன் (AravAra mARAtha nUl kaRRu adi nAyEn) : Reading many pompous and vain books that deal with religious bickerings, I, the lowly dog, ஆடம்பரம் நீங்காத சமயக் கூச்சலுக்கு இடம் தரும் நூல்களைப் படித்து அடிமை நாயான எனது

ஆவி சாவி ஆகாமல் நீ சற்று அருள்வாயே ( Avi sAvi yAkAmal nee saRRu aruLvAyE) : do not wish to waste my precious life. For that, You have to shower some blessings on me. உயிர் வீண் படாமல் நீ சிறிது அருள் புரிவாயாக. சாவியாகமல் = வீண் ஆகாமல்

சூர சூர சூராதி சூரர்க்கு எளிவு ஆயா ( sUra sUra sUrAthi sUrarkkeLivAyA ) : You gave darshan to the lord of all demons, SUrapadman, and his kin! சூரர்களுக்குச் சூரனான சூரபத்மன் முதலியோருக்கு எளிதாகக் காட்சி கொடுத்தவனே,

தோகையா குமாரா கிராதக் கொடி கேள்வா (thOgaiyA kumArA kirAthak kodi kELvA) : You are the mounter of peacock! You are Lord KumArA! You are the consort of creeper-like VaLLi, the damsel of the hunter-tribe! மயில் வாகனனே, குமாரமூர்த்தியே, வேடர் குலக்கொடியாம் வள்ளியின் கணவனே,

தீர தீர தீராதி தீரப் பெரியோனே (theera theera theerAthi theerap periyOnE ) : You possess extraordinary valour! You show great resolve in displaying Your courage! மகா தீரம் உடையோய், தைரியமாதி மேம்பட்ட குணங்களில் உறுதி வாய்ந்த பெரியோனே,

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே. ( thEva thEva thEvAthi thEvap perumALE.) : You are the Lord of all Lords! You are the Greatest One among all the Celestials! தேவதேவனே, தேவாதி தேவர்களுக்கெல்லாம் பெருமாளாய் விளங்குபவனே.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே