ta The Nectar of Thiruppugazh: 416. மோது மறலி

Monday, 28 November 2016

416. மோது மறலி

ராகம்: ஹம்சத்வனி தாளம்: அங்கதாளம் 1½ + 1½; + 1 + 1½ + 2 (7½)
மோது மறலியொரு கோடி வேற்படை
கூடி முடுகியெம தாவி பாழ்த்திட
மோக முடையவெகு மாதர் கூட்டமுமயலாரும்
மூளு மளவில்விசை மேல்வி ழாப்பரி
தாப முடனும்விழி நீர்கொ ளாக்கொடு
மோக வினையில்நெடு நாளின் மூத்தவரிளையோர்கள்
ஏது கருமமிவர் சாவெ னாச்சிலர்
கூடி நடவுமிடு காடெ னாக்கடி
தேழு நரகினிடை வீழ்மெ னாப்பொறி யறுபாவி
ஏழு புவனமிகு வான நாட்டவர்
சூழ முநிவர்கிளை தாமு மேத்திட
ஈச னருள்குமர வேத மார்த்தெழ வருவாயே
சூது பொருதரும னாடு தோற்றிரு
வாறு வருஷம்வன வாச மேற்றியல்
தோகை யுடனுமெவி ராட ராச்சிய முறைநாளிற்
சூறை நிரைகொடவ ரேக மீட்டெதி
ராளு முரிமைதரு மாறு கேட்டொரு
தூது செலஅடுவ லாண்மை தாக்குவ னெனமீள
வாது சமர்திருத ரான ராட்டிர
ராஜ குமரர்துரி யோத னாற்பிறர்
மாள நிருபரொடு சேனை தூட்படவரிசாப
வாகை விஜயனடல் வாசி பூட்டிய
தேரை முடுகுநெடு மால்ப ராக்ரம
மாயன் மருகஅமர் நாடர் பார்த்திப பெருமாளே.

Learn The Song

Listen Music Files - Embed Audio -

Paraphrase

மோது மறலி ஒரு கோடி வேல் படை கூடி முடுகி எமது ஆவி பாழ்த்திட(mOdhu maRali oru kOdi vER padai kUdi mudugi emadhAvi pAzhth thida): The aggressive God of Death (Yaman) came rushing in, armed with his unique and sharp spear, to snatch my life, தாக்குகின்ற யமன் தனது ஒப்பற்ற கூரிய வேற்படையுடன் வேகமாக வந்து எனது உயிரை (உடலினின்றும்) பிரிக்க,

மோகம் உடைய வெகு மாதர் கூட்டமும் அயலாரும் ( mOham udaiya vegu mAdhar kUttamum ayalArum): the entire women folk who loved me, coming along with my neighbours, (என் மேல்) ஆசை கொண்டிருந்த பல மாதர்களின் கூட்டமும், பிறரும்,

மூளும் அளவில் விசை மேல் விழா( mULum aLavil visai mEl vizhA): and overcome by grief, swiftly falling on my body; துக்கம் மூண்டு மிகவும் வேகமாக மேலே விழுந்து,

பரிதாபமுடனும் விழி நீர் கொளா கொடு (paridhApamudanum vizhi neer koLAk kodu): standing there saddened, with tears welling up in their eyes. இரக்கத்துடனே கண்களில் நீர் கொண்டு நிற்க,

மோக வினையில் நெடு நாளின் மூத்தவர் இளையோர்கள் ஏது கருமம் இவர் சாவு என(mOha vinaiyil nedu nALin mUththavar iLaiyOrgaL Edhu karumam ivar sA enA): Due to delusory attachment, some elders and also a few youngsters enquiring as to what had caused my death; கொடிய மோக மயக்கத்தில் நீண்ட நாட்கள் இருந்த மூத்தவர்களும், இளமையானவர்களும், இவர் இறந்ததற்கு என்ன காரணம் என்று விசாரிக்கவும்,

சிலர் கூடி நடவும் இடு காடு எனா (silar kUdi nadavum idu kAdu enA): some suggesting to others to walk up to the cremation ground; பிணத்துக்குப் பின் சிலர் கூடி சுடு காட்டுக்கு நடவுங்கள் என்று மற்றவர் கூறவும்,

கடிது ஏழு நரகின் இடை வீழும் எனா (kadidhu Ezhu naraginidai veezh menAp ): some saying that he must be rushed to the seven hells; (இவனை) விரைவாக ஏழு நரகினிடையே வீழ்த்துங்கள் என்று சிலர் கூறவும்,

பொறியறு பாவி (எனா)(poRi aRupAvi): as he was a big sinner who abused his sensory organs immorally – without letting me be subjected to these kinds of treatment, இவன் புலன்களை நல்ல வழியில் செலுத்தாத பாவி எனச் சிலர் கூறவும் (இடம் கொடுக்காமல்),

ஏழு புவனம் மிகு வான நாட்டவர் (Ezhu buvanam migu vAna nAttavar ): all those living in the seven worlds and the celestial land, ஏழு உலகங்களில் உள்ளவர்களும், சிறந்த தேவ நாட்டவரும்,

சூழும் முநிவர் கிளை தாமும் ஏத்திட (sUzhu munivarkiLai thAmum Eththida): and the host of sages and saints pay glorious tributes சூழ்ந்துள்ள முனிவர் கூட்டங்களும் போற்றி நிற்க,

ஈசன் அருள் குமர வேதம் ஆர்த்து எழ வருவாயே (eesan aruL kumara vEdham Arththezha varuvAyE): You must come to me, Oh Son of Lord SivA, with the loud chanting of the VEdAs in the background! சிவபெருமான் அருளிய குமரனே, வேதம் ஒலித்து எழ, நீ எழுந்தருள்வயாக.

சூது பொரு தருமன் நாடு தோற்று (sUdhu poru dharuma nAdu thOtru ): After Dharman lost his country in a gambling war, சூதுப்போர் செய்த தருமபுத்திரன் தன் நாட்டைச் சூதில் இழந்து,

இரு ஆறு வருஷம் வனவாசம் ஏற்று (iru ARu varusham vana vAsam Ettru): the PANdavAs accepted banishment for twelve years in the forest; பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழும் வாழ்க்கையை பாண்டவர்கள் ஏற்றுக் கொண்டு வசித்தபின்,

இயல் தோகை உடனுமெ விராட ராச்சியம் உறை நாளில் (iyal thOgai udanume virAta rAjjiyam uRai nALil): with their chaste spouse, Draupathi, they lived in VirAta kingdom (in disguise for a year); at that time, கற்பியல் உடைய மயில் போன்ற மனைவி திரெளபதியுடன் விராட நாட்டில் (ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசம் செய்து) காலம் கழித்து வந்த நாளில்,

சூறை நிரை கொடு அவர் ஏக மீட்டு எதிர் (sURai nirai kodu avar Ega meetu edhir): they (PANdaVAs) redeemed the herds of cows that had been abducted (by Duryodhana and others); பசுக்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு விராட நாட்டிலிருந்து துரியோதனாதியர் செல்ல, அப்பசுக்களை எதிர்ச் சென்று மீட்டுவந்து,

ஆளும் உரிமை தருமாறு கேட்டு (ALum urimai tharumARu kEttu): in order to claim their right to the kingdom, அரசாட்சி உரிமையைத் தரும்படி கேட்பதற்காக,

ஒரு தூது செல அடு வல் ஆண்மை தாக்குவன் என மீள (oru dhUthu sela adu val ANmai thAkkuvan ena meeLa): they sent a unique messenger, Krishna; however, DuryOdhanan turned Him back saying that he would rather confront them with all his might in the battlefield. ஒப்பற்ற தூதனாகக் கண்ணணை அனுப்ப, போருக்கு உரிய வலிய ஆண்மையோடு தாக்குவேன் என்று துரியோதனன் கூறி கண்ணனை திருப்பி அனுப்ப,

வாது சமர் திருதரானராட்டிர ராஜ குமரர் துரியோதனால் பிறர் மாள (vAdhu samar dhirudharAna rAttira rAja kumarar dhuriyOdhanAR piRar mALa): The sons of DhirudharAshtiran who came to the war after animated discussions and the others who joined the war for the sake of DhuryOdhanan - all of them died; வலிய வாது பேசிப் போருக்கு வந்த திருதராஷ்டிர ராஜனுடைய குமாரர்களும், துரியோதனன் காரணமாகப் போரிட்ட மற்றவர்களும் இறக்க,

நிருபரொடு சேனை தூட்பட ( niruparodu sEnai thUL pada): the other kings and all their armies were destroyed; பிற அரசர்களோடும் சேனைகள் எல்லாம் தூள்பட்டு அழிய,

வரி சாப வாகை விஜயன் அடல் வாசி பூட்டிய தேரை முடுகு(vari chApa vAgai vijayan adal vAsi pUttiya thErai mudugu): when He swiftly drove the strong horses tied to the chariot of Arjunan who held the triumphant bow, GANdeepam, with elegant stripes on it; வரிகள் பொருந்திய காண்டீபம் என்ற வில்லினால் வெற்றியைக் கொண்ட அர்ச்சுனனுடைய வலிய குதிரைகள் பூட்டிய ரதத்தை, சாபம்(chaapam): bow; வாசி(vaasi): horse

நெடு மால் பராக்ரம மாயன் மருக (nedumAl parAkrama mAyan maruga): He is Lord VishNu, the gallant and mystic one, and You are His nephew! வேகமாகச் செலுத்திய பெரிய திருமால், வல்லமை பொருந்திய மாயோனின் மருகனே,

அமர் நாடர் பார்த்திப பெருமாளே. (amar nAdar pArthiba perumALE.): You are the emperor of the land of the celestials, Oh Great One! விண்ணுலகத்தோருக்குச் சக்ரவர்த்தியாகிய பெருமாளே.

No comments:

Post a Comment


Transliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.