ta The Nectar of Thiruppugazh: 408. மதனேவிய

Friday, 18 November 2016

408. மதனேவிய

ராகம்: தோடி தாளம்: திச்ர ஏகம் (3)
மதனேவிய கணையாலிரு வினையால்புவி கடல்சாரமும்
வடிவாயுடல் நடமாடுகமுடியாதேன்
மனமாயையொ டிருகாழ்வினை யறமூதுடை மலம்வேரற
மகிழ்ஞானக அநுபூதியினருள்மேவிப்
பதமேவுமு னடியாருடன் விளையாடுக அடியேன்முனெ
பரிபூரண கிருபாகரமுடன்ஞான
பரிமேலழ குடனேறிவி ணவர்பூமழை யடிமேல்விட
பலகோடிவெண் மதிபோலவெவருவாயே
சதகோடிவெண் மடவார்கட லெனசாமரை யசையாமுழு
சசிசூரியர் சுடராமென வொருகோடிச்
சடைமாமுடி முநிவோர்சர ணெனவேதியர் மறையோதுக
சதிநாடக மருள்வேணிய னருள்பாலா
விதியானவ னிளையாளென துளமேவிய வளிநாயகி
வெகுமாலுற தனமேலணை முருகோனே
வெளியாசையொ டடைபூவணர் மருகாமணி முதிராடக
வெயில்வீசிய அழகாதமிழ் பெருமாளே.

Learn The Song

Upload Music Files - Play Audio -

Paraphrase

மதன் ஏவிய கணையால் இரு வினையால் (madhan Eviya kaNaiyAl iru vinaiyAl): Because of the flowery arrows shot by Manmathan (God of Love) and the influence of my good and bad deeds, மன்மதன் செலுத்திய மலர் அம்புகளால் பட்டும், நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளால் பட்டும்,

புவி கடல் சாரமும் வடிவாய் உடல் (buvi kadal sAramum vadivAy udal): and because of the interaction of the five elements such as the earth and water, this body of mine took shape. மண், நீர் முதலிய பஞ்ச பூதங்களின் இயக்கங்களில் பட்டும் வடிவமான இந்த உடலுடன்,

நடமாடுக முடியாதேன்(natamAduga mudiyAdhEn): With this body I am unable to move about in this world. இந்த உலகில் நடமாட முடியாதவனாகிய நான்

மன மாயையோடு இரு காழ் வினை அற (mana mAyaiyodu iru kAzh vinai aRa): For the destruction of delusions in my mind and to do away with the effects of the deeds, both good and bad, மனத்திலுள்ள மாயையும், நல்வினை தீவினை என்ற இரு முற்றிய வினைகளும் ஒழிய, காழ்(kazh): seed, hardness;

மூதுடை மலம் வேர் அற (mUdhudai malam vEraRa): and to uproot the slag of arrogance, பழமையாக வரும் ஆணவம் என்ற மலம் வேரோடு அற்று வீழ,

மகிழ் ஞானக அநுபூதியின் அருள் மேவி ( magizh nyAnaga anubUthiyin aruL mEvi): I must obtain the grace of experiencing True Knowledge to be cherished and perceived in my heart; மகிழத்தக்க, உள்ளத்தில் விளங்கும், அனுபவ ஞானம் ஆகிய அருளை அடைந்து,

பதம் மேவும் உன் அடியாருடன் விளையாடுக (padhamEvum un adiyArudan viLaiyAduga): to enable me to mingle and play with the group of Your devotees who have already obtained the blessings of Your feet, உன் திருவடியை அடைந்த அடியார்களுடன் நானும் சேர்ந்து விளையாட,

அடியேன் மு(ன்)னெ பரிபூரண கிருபாகரம் உடன் (adiyEn mune paripUraNa kirupAkaram udan): You must appear before me with total compassion, அடியேன் எதிரில் நிறைந்த கருணையுடன்

ஞானப்பரி மேல் அழகுடன் ஏறி (nyAna parimEl azhagudan ERi): elegantly mounting Your hore-like Peacock, which symbolises true knowledge, ஞானம் என்னும் குதிரையாகிய மயில் மீது அழகுடன் ஏறி,

வி(ண்)ணவர் பூ மழை அடி மேல் விட ( viNavar pU mazhai adi mEl vida): with the celestials showering flowers on Your hallowed feet, தேவர்கள் பூமாரியை உன் திருவடிகளின் மேல் பொழிய

பல கோடி வெண் மதி போலவெ வருவாயே (pala kOdi veN madhi pOlave varuvAyE): to bless me with Your vision, radiating the glow of a million moons! பல கோடிக்கணக்கான வெண்ணிலவின் ஒளி வீச நீ வருவாயாக.

சத கோடி வெண் மடவார் கடல் என சாமரை அசையா (satha kOdi veN madavAr kadal ena sAmarai asaiyA): A billion young women, with dazzling white complexion, were waving the sAmarams (hand fans) like sea waves; நூறு கோடி வெண்ணிற மாதர்கள் கடல் அலைகளைப் போல் சாமரங்கள் வீச,

முழு சசி சூரியர் சுடராம் என (muzhu sasi sUriyar sudarAmena): the full moon and the sun were providing brilliant illumination; பூரண சந்திரனும், சூரியனும் தீப ஒளியாய்ச் சுடர் வீச,

ஒரு கோடி சடை மா முடி முநிவோர் சரண் என (oru kOdi sadai mA mudi munivOr saraN ena ): about ten million great sages with tresses were worshipping in complete surrender; ஒரு கோடிக்கணக்கான, சடைமுடி தாங்கிய முநிவர்கள் சரணம் என்று வணங்க,

வேதியர் மறை ஓதுக (vEdhiyar maRai Odhuga): many priests were chanting the sacred VEdAs; வேதியர்கள் வேதங்களை ஓதிட,

சதி நாடகம் அருள் வேணியன் அருள் பாலா (jathi nAtakam aruL vENiyan aruL bAlA ): as Lord SivA with tresses (as NadarAjar) danced His cosmic dance in accordance with the meter; You are the child of that SivA! தாளத்துடன் கூடிய நடனத்தை ஆடிய ஜடாமுடி தாங்கும் (நடராஜராம்) சிவபெருமான் அருளிய குழந்தையே,

விதி ஆனவன் இளையாள் எனது உ(ள்)ளம் மேவிய வ(ள்)ளி நாயகி (vidhiyAnavan iLaiyAL enadhuLa mEviya vaLi nAyaki): She is the younger sister* of BrahmA whose duty is to determine the fate of all lives; She is gloriously seated in my heart; She is Goddess VaLLi; உயிர்களுக்கு எல்லாம் ஆயுளை விதிக்கும் பிரமனின் தங்கை, என் உள்ளத்தில் வீற்றிருக்கும் வள்ளிநாயகி; விதி(vidhi): Brahma; விதி ஆனவன் இளையாள் (vidhiyAnavan iLaiyAL): Brahma's sister Valli@#8211; BrahmA is the son of Vishnu; VaLLi, in her previous birth, was Sundaravalli, the daughter of Vishnu; thus VaLLi is the younger sister of BrahmA.

வெகு மால் உற தனம் மேல் அணை முருகோனே(vegu mAl uRa thanam mEl aNai murugOnE): With immense love You embrace the bosom of that VaLLi, Oh MurugA! மிக்க ஆசைப்படும்படி அவளின் மார்பினை அணைந்த முருகனே,

வெளி ஆசையோடு அடை பூவணர் மருகா (veLi Asaiyod adai pUvaNar marugA ): He pervades the entire sky and the universe; He has the complexion of the blue lily; He is Lord Vishnu, and You are His nephew! பூவ(ண்)ணர் (poovaNNar):- the color of the flower (blue lily) ஆகாயம், திசைகள் எல்லாம் நிறைந்துள்ள, காயாம்பூ போன்ற நீல வண்ணத்து திருமாலின் மருகனே,

மணி முதிர் ஆடகம் வெயில் வீசிய அழகா (maNi mudhir Adaga veyil veesiya azhagA): Oh Handsome One, Your body exudes the combined glow of ruby and reddish gold! ரத்தினம், செம்மை முதிர்ந்த பொன் ஆகியவற்றின் ஒளி கலந்து வீசுகின்ற அழகனே, ஆடகம் (Adagam ): gold;

தமிழ் பெருமாளே. (thamizh perumALE.): You are the Lord of the Tamils, Oh Great One! தமிழர்களின் பெருமாளே.

No comments:

Post a Comment


Transliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.