ta The Nectar of Thiruppugazh: 401. புவிக்குன் பாதம்

Monday, 14 November 2016

401. புவிக்குன் பாதம்

ராகம் : ஷண்முகப்ரியா தாளம்: சதுச்ர ரூபகம் (6)
புவிக்குன் பாத மதைநினை பவர்க்குங் கால தரிசனை
புலக்கண் கூடு மதுதனைஅறியாதே
புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை
புழுக்கண் பாவ மதுகொளல் பிழையாதே
கவிக்கொண் டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி
களைக்கும் பாவ சுழல்படுமடிநாயேன்
கலக்குண் டாகு புவிதனி லெனக்குண் டாகு பணிவிடை
கணக்குண் டாதல் திருவுளமறியாதோ
சிவத்தின் சாமி மயில்மிசை நடிக்குஞ் சாமி யெமதுளெ
சிறக்குஞ் சாமி சொருபமிதொளிகாணச்
செழிக்குஞ் சாமி பிறவியை யொழிக்குஞ் சாமி பவமதை
தெறிக்குஞ் சாமி முனிவர்களிடமேவுந்
தவத்தின் சாமி புரிபிழை பொறுக்குஞ் சாமி குடிநிலை
தரிக்குஞ் சாமி யசுரர்கள்பொடியாகச்
சதைக்குஞ் சாமி யெமைபணி விதிக்குஞ் சாமி சரவண
தகப்பன் சாமி யெனவருபெருமாளே.

Learn The Song

Free Music - Free Audio -

Paraphrase

புவிக்கு உன் பாதம் அதை நினைபவர்க்கும் (buvikkun pAdham adhai ninaibavarkkum): In this world, those contemplating upon Your two feet, இந்தப் பூமியில் உன் திருவடிகளை நினைத்துத் தியானிப்பவர்களுக்கும்,

கால தரிசனை புலக்கண் கூடும் (kAla dharisanai pulakkaN kUdum): are capable of seeing the past, the present and the future! இறப்பு, நிகழ்வு, எதிர் என்ற முக்கால நிகழ்ச்சிகள் அவர்களின் அறிவுக் கண்ணில் புலப்படும.

இதுதனை அறியாதே (adhu thanai aRiyAdhE): Without knowing this, இந்த உண்மையை அறியாமலே,

புரட்டும் பாத சமயிகள் நெறிக்கண் பூது படிறரை ( purattum pAdha samayigaL neRikkaN pUdhu padiRarai): some people tread the improper/(im)moral religious paths of certain fanatics; புரட்டிப் பேசும் பாபநெறிச் சமயவாதிகளின் வழியிலே நடக்கின்ற வஞ்சகப் பொய்யர்களை பாவத்திற்கு என்று ஏற்பட்ட, பாத சமயிகள்(pAdha samayigaL): பாதக சமயிகள் — பாப நெறி சமயவாதிகள்; பூது படிறர்( pUdhu padiRar): புகுந்து நடப்பவர்;

புழுக்கண் பாவம் அதுகொளல் பிழையாதே(puzhukkaN pAvam adhu koLal pizhaiyAdhE): and they will all go, without fail, to the worst hell full of worms! புழுக்கள் நிறைந்த, நரகம் ஏற்றுக்கொள்ளுதல் ஒருநாளும் தவறாது.

கவிக் கொண்டாடு புகழினை படிக்கும் பாடு திறமிலி (kavik koNdAdu pugazhinai padikkum pAdu thiRamili): I do not have the capability of singing Your glory in poetry. பெரியோர்களின் பாடல்களில் போற்றப் பெறும் உனது புகழினை படிக்கும் திறமும், பாடும் திறமும் இல்லாதவன்,

களைக்கும் பாவ சுழல்படும் அடிநாயேன் (kaLaikkum pAva suzhal padum adi nAyEn): I am caught in a whirlpool of sins which has tired me out. இளைப்பை உண்டாக்கும் பாவச் சுழற்சியில் சிக்குண்டு சுழலும் நாயினும் கீழ்மகனான எனக்கு,

கலக்குண்டாகு புவிதனில் எனக்கு உண்டாகு பணிவிடை(kalakkuNdAgu buvidhanil enak kuNdAgu paNividai): In this troublesome world, I must be given certain duties மனக் கலக்கத்தைத் தரும் இப்புவியில் உள்ள எனக்கு, யான் செய்யுமாறு விதிக்கப்பட்ட தொண்டு

கணக்குண் டாதல் திருவுளம் அறியாதோ (kaNakkuNdAdhal thiRuvuLam aRiyAdhO): of which there should be an account; and how can You not know that? இவ்வளவு என்று உள்ளதான ஒரு கணக்கு இருப்பது உன் உள்ளத்திற்கு தெரியாமலா போகும்?

சிவத்தின் சாமி (sivaththin sAmi): You are the Lord of SivA; சிவபிரானிடத்தில் தோன்றிய சுவாமி,

மயில்மிசை நடிக்குஞ் சாமி ( mayil misai nadikkun sAmi): You are the Lord dancing on the Peacock; மயிலின் மீது நடனம் செய்யும் சுவாமி,

எமதுளெ சிறக்குஞ் சாமி (emadhuLe siRakkun sAmi): You are the Lord grandly etched inside our hearts; எம்முடைய உள்ளத்திலே சிறப்பாக விளங்கும் சுவாமி,

சொருபமிது ஒளி காணச் செழிக்குஞ் சாமி ( sorupamidhu oLikANach sezhikkun sAmi): You are the luminous Lord whose form is visible only to Your devotees; தனது திருவுருவத்தின் பேரொளியை அடியார்கள் காணுமாறு விளக்கமாகத் தோன்றும் சுவாமி,

பிறவியை ஒழிக்குஞ் சாமி (piRaviyai ozhikkun sAmi): You are the Lord that destroys birth; பிறவியை அடியோடு தொலைத்தருளும் சுவாமி,

பவமதை தெறிக்குஞ் சாமி (bavamadhai theRikkun sAmi): You are the Lord that shatters all sins; பாவங்களைப் போக்கி ஒழிக்கும் சுவாமி,

முனிவர்கள் இடமேவும் தவத்தின் சாமி (munivargaL ida mEvum thavaththin sAmi): You are the Lord that manifests in the penance of the sages; முநிவர்கள் செய்யும் தவப்பொருளாக விளங்கும் சுவாமி,

புரி பிழை பொறுக்குஞ் சாமி (puripizhai poRukkun sAmi): You are the Lord that forgives all our mistakes; அடியார்கள் செய்யும் பிழைகளை எல்லாம் பொறுத்தருளும் சுவாமி,

குடிநிலை தரிக்குஞ் சாமி (kudinilai tharikkun sAmi): You are the Lord who redeemed the land of the DEvAs and re-established them; தேவர்களை விண்ணில் குடிபுகச் செய்து அங்கு நிலைபெற வைத்த சுவாமி,

அசுரர்கள் பொடியாகச் சதைக்குஞ் சாமி ( asurargaL podiyAga sadhaikkun sAmi): You are the Lord who destroyed and reduced the asuras (demons) into powder; அசுரர்களைப் பொடியாகும்படி நெரித்து அழித்த சுவாமி,

எமை பணி விதிக்குஞ் சாமி சரவண ( emai paNi vidhikkum sAmi): You are the Lord determining what services we must do in this world; யாம் செய்ய வேண்டிய தொண்டு இன்னதென்று நிர்ணயிக்கும் சுவாமி,

சரவண தகப்பன் சாமி எனவரு பெருமாளே. (saravaNa thagappan sAmi enavaru perumALE.): You are Saravanabhava (the Lord who emerged from a pond of reeds); and You are the Lord who preached to His own father, Oh Great One! சரவணபவனே, தந்தைக்கு குருஸ்வாமியாக வந்த பெருமாளே.

No comments:

Post a Comment


Transliteration in Tamil available. தமிழில் டைப் செய்யவும், மொழி மாற்றத்திற்க்கும் CTRL+g உபயோகிக்கவும்.