394. பட்டுப் படாத
Learn The Song
Raga Kanada (Janyam of 22nd mela Karaharapriya)
Arohanam: S R2 P G2 M1 D2 N2 S Avarohanam: S N2 P M1 G2 M1 R2 SParaphrase
பட்டுப் படாத மதனாலும் (pattup padAdha madhanAlum) : the Love God Manmatha who attacks me (with arrows of flowers) while remaining invisible; என்னை மலர்ப் பாணங்களினால் தாக்கியும் தாக்காதது போல மறைந்திருக்கும் மன்மதனாலும்,
பக்கத்து மாதர் வசையாலும் (pakkaththu mAdhar vasaiyAlum) : the harrassing taunts of the women in the neighbourhood; அண்டை அயலிலுள்ள பெண்களின் பழிச் சொற்களினாலும்,
சுட்டுச் சுடாத நிலவாலும் (suttuch sudAdha nilavAlum) : the scorching rays from the moon that remains bright and cold – தன் கிரணங்களினால் எரித்தும் எரிக்காதது போல விளங்கும் நிலவினாலும்,
துக்கத்தில் ஆழ்வது இயல்போ தான் (dhukkaththil Azhvadh iyalbO thAn) : is it fair that I be subjected to these pangs caused by my separation from You? நான் விரக வேதனையில் மூழ்கித் தவிப்பது தகுதியாகுமா?
தட்டுப் படாத திறல் வீரா (thattup padAdha thiRal veerA) : Your valour is matchless! குறையொன்றும் இல்லாத பராக்கிரமம் உடைய வீரனே,
தர்க்கித்த சூரர் குல காலா (tharkkiththa sUrar kula kAlA) : You are like the God of Death for the hostile and argumentative SUran and his clan! உன்னுடன் வாதிட்டு எதிர்த்த சூரனின் குலத்துக்கே யமனாக வந்து வாய்ந்தவனே,
மட்டுப் படாத மயிலோனே (mattup padAdha mayilOnE) : Your vehicle Peacock's valour is absolutely uncontrollable! அடக்க முடியாத வீரம் செறிந்த மயிலை வாகனமாகக் கொண்டோனே,
மற்று ஒப்பிலாத பெருமாளே. (matRu oppilAdha perumALE.) : None else can ever be Your equal, Oh Great One! வேறு யாரையும் உனக்கு ஒப்பாகச் சொல்லமுடியாத பெருமாளே.
Another song based on Nayaka-Nayaki bhava, with Murugan as the NAyakA and the poet as the NAyaki. Love God, His flowery arrows, moon's rays and womenfolk's gossip-mongering are some of the aspects that enhance the agony of separation of the NAyaki from the NAyakA. For an explanation of this theme and for other songs based on the same theme, refer the following songs of Saint Arunagirinathar:
- வெற்றி செயவுற்ற (vetri seyavutra)
- கலை மடவார்(kalai madavAr)
- மருக்குலாவிய (marukkulAviya)
- கனைத்து அதிர்க்கும் (kanaiththu athirkkum)
- தெருவினில் (theruvinil)
- விறல் மாரன் (viRal mAran)
- நீலங்கொள் (neelangoL)
- கடல் பரவு (kadal paravu)
- பரிவுறு நாரற்று (parivuRu nARatru)
Comments
Post a Comment