237. பரிவுறு நாரற்று


ராகம் : கானடாதாளம்: ஆதி
பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற்றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத் தரலாலே
மருவியல் மாதுக் கிருகயல் சோரத்
தனிமிக வாடித் தளராதே
மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு காவுற்றணைவாயே
கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
தொடுகும ராமுத்தமிழோனே
கிளரொளி நாதர்க் கொருமக னாகித்
திருவளர் சேலத்தமர்வோனே
பொருகிரி சூரக் கிளையது மாளத்
தனிமயி லேறித்திரிவோனே
புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி நோதப் பெருமாளே

Learn The Song



Raga Kanada (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 P G2 M1 D2 N2 S    Avarohanam: S N2 P M1 G2 M1 R2 S

Paraphrase

பரிவுறு நார் அற்று அழல் மதி வீச (parivuRunAratru azhal mathi veesa) : As the moon emits fire without any compassion or kindness; நார் (naar) : love, affection;

சிலை பொரு காலுற்று அதனாலே ( silai poru kAluRRu athanAlE) : as the southerly breeze from Mount Pothigai blows hot; பொதிய மலையிலிருந்து பொருந்த வரும் தென்றல் காற்று சூடாக மேலே படுவதானாலும், சிலை (mountain) : mountain (Podhigai);

பனிபடு சோலைக் குயிலது கூவ ( panipadu sOlaik kuyilathu kUva) : as the cuckoo in the cool grove sings sadly;

குழல் தனி ஓசைத் தரலாலே (kuzhal thani Osaith tharalAlE) : as the flute blows an incomparable note of melancholy;

மருவியல் மாதுக்கு இரு கயல் சோர (maruviyal mAthuk kirukayal sOra) : the fish-like eyes of the damsel waiting for your embrace are filled with fatigue.

தனி மிக வாடித் தளராதே (thani miga vAdith thaLarAthE) : In order that she does not wilt in her loneliness,

மனமுற வாழத் திருமணி மார்பத்து அருள் முருகா உற்று அணைவாயே (manamuRa vAzha thirumaNi mArpaththu thirumaNi mArpaththu aruL murugA utru aNaivAyE ) : and to help her heart settle in peace, oh merciful Lord Muruga, come to her and embrace her with Your gem-studded chest!

கிரி தனில் வேல் விட்டு இரு தொளையாகத் தொடு குமரா முத்தமிழோனே (giri thanil vEl vittu iru thoLaiyAga thodu kumarA muththamizhOnE) : Oh Kumara, You wielded the Spear at Mount Krouncha and split it into two! You are the Lord of Tamil language, with its three branches, namely, literature, music and drama.

கிளரொளி நாதர்க்கு ஒரு மகனாகி ( kiLaroLi nAtharkku oru maganAgi) : You are the unique son of the effulgent Lord SivA,

திருவளர் சேலத்து அமர்வோனே (thiru vaLar sElaththu amarvOnE) : and You reside in this prosperous place, Selam.

பொரு கிரி சூரக் கிளையது மாள (poru giri sUrak kiLaiyathu mALa) : The hostile mounts of SUran and he himself, with his entire clan, perished in the war,

தனி மயிலேறித் திரிவோனே (thanimayi lERith thirivOnE) : when You mounted Your matchless peacock and flew around the world!

புகர் முக வேழக் கணபதியாருக்கு இளைய (pugar muga vEzha gaNapathiyArukku iLaiya) : Oh, the younger brother of Lord Ganapathi, with the spotted face of an elephant!

விநோதப் பெருமாளே.(vinOthap perumALE.) : You are full of wonders, Oh Great One!

Additional Explanation

This poem is based on the 'Agam' style (agaththurai) of poetry. Many Thiruppugazh songs have been examined so far. For additional explanations on this form, please go through the following poems:

kalai madavar

viral maran

Gnyalamengum

vetri jeyavutra

theruvinil

kanaiththu athirkkum

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே