263. மருமல்லியார்


ராகம் : ஷண்முகப்ரியாஅங்கதாளம் 1 + 1½ + 1½ + 1 + 3 (8)
மருமல்லி யார்குழலின் மடமாதர்
மருளுள்ளி நாயடியனலையாமல்
இருநல்ல வாகுமுனதடிபேண
இனவல்ல மானமனதருளாயோ
கருநெல்லி மேனியரி மருகோனே
கனவள்ளி யார்கணவமுருகேசா
திருவல்லி தாயமதி லுறைவோனே
திகழ்வல்ல மாதவர்கள்பெருமாளே.

Learn The Song




Raga Shanmukhapriya (56th mela)

Arohanam: S R2 G2 M2 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M2 G2 R2 S


Paraphrase

மரு மல்லியார் குழலின் மடமாதர் (marumalliyAr kuzhalin mada mAdhar) : Young girls with fragrant jasmine flowers in their hair, நறுமணம் வீசும் மல்லிகை மலர்கள் நிறைந்த கூந்தலையுடைய இளம் பெண்கள் மீது ; மரு (maru): fragrant;

மருள் உள்ளி நாய் அடியன் அலையாமல் (maruL uLLi nAy adiyan alaiyAmal) : I carry lustful thoughts about them and ramble behind them like a dog. (To get rid of that thought,)

இரு நல்லவாகும் உனது அடிபேண (iru nallavAgum unadh adi pENa) : I need to worship Your two feet, which confer prosperity, (அபரஞானம், பரஞானம் என்னும் இரண்டையும் அருளும்) உனது திருவடிகளை விரும்பி வழிபட,

இன வல்லமான மனது அருளாயோ (ina vallamAna manadh aruLAyO) : For this, will You not grant me a strong and loving mind that is held in highby Your devotees? அடியார்கள் போற்றுகின்ற அன்புள்ள மனத்தை அடியேனுக்கு அருள்வாயாக. இனம் = அடியார் திருக்கூட்டம்; மானம் = அன்பு, பற்று, வலிமை;

கருநெல்லி மேனி அரி மருகோனே (karu nelli mEni ari marugOnE) : You are the nephew of Vishnu who has the complexion similar to the black and green NellikkAi! கருநெல்லிக்காய் போலப் பச்சையும் கருப்பும் கலந்த திருமேனி நிறத்தோடு கூடிய திருமாலின் திருமருகரே!

கன வள்ளியார் கணவ முருகேசா (gana vaLLiyAr kaNava murugEsA) : You are the Consort of the revered damsel, VaLLi, Oh Lord MurugA,

திருவல்லிதாயம் அதில் உறைவோனே (thiruvallithAym adhil uRaivOnE) : You reside at ThiruvalidhAyam as Your abode! திருவலிதாயம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பவரே!
வலிதாயநாதரும் ஜகதாம்பாள் அம்மையும் அமர்ந்திருக்கும் இத்தலம் சென்னை நகரின் ஒரு பகுதியான பாடி என்ற இடத்தில் அமைந்துள்ளது.

திகழ் வல்ல மாதவர்கள் பெருமாளே.(thigazh valla mAdhavargaL perumALE.) : You are praised by Great prominent Sages, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே