243. அலங்கார முடிக்கிரண


ராகம் : பாகேஸ்வரிதாளம்: திச்ர ஏகம்
அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
கசைந்தாடு குழைக்கவசத் திரடோளும்
அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத்
தணிந்தாழி வனைக்கடகச் சுடர்வேலுஞ்
சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்
சிவந்தேறி மணத்தமலர்ப்புனைபாதந்
திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
தினந்தோறு நடிப்பதுமற்புகல்வேனோ
இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்
டிளந்தாது மலர்த்திருவைச் சிறைமீளும்
இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
திருங்கான நடக்குமவற் கினியோனே
குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
கொடுந்தாரை வெயிற்கயிலைத்தொடும்வீரா
கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
குரங்காடு துறைக்குமரப்பெருமாளே.

Learn The Song



Raga Bageshri Janyam of 22nd mela Karaharapriya

Arohanam: S G2 M1 D2 N2 S    Avarohanam: S N2 D2 M1 P G2 M1 R2 S

Paraphrase

This hymn describes Lord's appearance when He comes dancing on the peacock. The poet wishes to sing everyday the incomparable beauty of the Lord's dance, which is symbolic of the entire creation of the universe and its dynamics. முருகன் திருவடிகளில் அணிந்துள்ள சிலம்பும் சதங்கையும் ஒலிக்க ஆடும் ஆனந்தத் திருத் தாண்டவ திருநடனமே உலகங்கள் முழுவதும் இயங்குவதற்குக் காரணமாகும்.

அலங்கார முடிக் கிரணத் திரண்டாறு முகத்தழகிற்கு அசைந்தாடு குழை (alankAra mudi kiraNa thiraNdARu mugath azhagil asaindhAdu kuzhai) : Your ornamental crowns, Your six radiant hallowed faces on which the ear studs swing and sway beautifully, அழகு மிக்க மணிமுடியினின்று வெளிப்படும் ஒளியானது திரண்டு வீசும் ஆறு திருமுகத்தின் அழகிற்கு ஏற்றவாறு அழகாக அசைந்து ஆடுகின்ற குண்டலங்கள் தொங்க, கிரணத் திரண்டு (kiraNa thirandu) : rays gathered into a bright mass; ஒளி திரண்டுள்ள; குழை (kuzhai) : ear studs;

கவசத் திரள் தோளும் அலந்தாம (kavachath thiraL thOLum alandhAma ) : the shield covering Your chest, Your sinewy shoulders wearing plenty of peace-giving garlands, கவசமும், திரண்ட தோள்களும், அவற்றின் மீது போதுமான அளவுக்குச் (முழுமையாகச்) சூடியிருக்கும் மலர்மாலைகளும்; தாமம் (thamam ) : garland;

மணித்திரளை புரண்டாட (maNith thiraLaip puraNdAda) : the chains made of precious gems and stones swinging together, புரண்டு ஆடுகின்ற வரிசையான ரத்தின மாலைகளும்;

நிரைத்த கரத்து அணிந்த ஆழி (niraiththa karaththu aNindha Azhi) : the beautiful rings looking neatly aligned on the hands, திருக்கரங்களிலே அணிந்துள்ள மோதிரங்களும்; நிரைத்த ( niraiththa) : appearing in a row, வரிசையாக அமைந்த; ஆழி (aazhi) : ring;

வனைக்கடகச் சுடர்வேலும் (vanaik kataga sudar vElum) : the victory anklets around Your ankles, Your sparkling Spear, அணிந்ததிருக்கும் வீர கங்கணமும்; ஒளிபடைத்த வேலும்; வனைக்கடகம் (vanaikkadagam) : bangle-like ornament worn over the wrist that indicates valour, புனைந்துள்ள வீர கங்கணம்;

சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கு ஓசை மிகுத்து அதிர (silambOdu maNich churudhi salangOsai miguth adhira) : the anklet with the beads inside sounding like the chanting of the VEdAs, (பாதங்களிலே) சிலம்பையும் இரத்தினங்களால் செய்யப்பட்டு இனிய ஒலியை அல்லது வேதகோஷத்தை எழுப்பும் சதங்கையானது மிகுதியான நாதத்துடன் ஒலிக்க;

சிவந்தேறி மணத்த மலர்ப் புனை பாதம் (sivandhERi maNaththa malarp punai pAdham) : and Your lotus feet, reddened by the red fragrant flowers,

திமிந்தோதி திமித்திமிதித் ..... தனந்தான தனத்தனன(dhimin thOdhi .... thanath anana) : dancing to the meter of "dhimin thOdhi dhimith dhimidhi thanan thAna thanath anana" - (all these come to my mind);

தினந்தோறு நடிப்பது மற் புகல்வேனோ (dhinanthORu nadip padhumaR pugalvEnO) : will I sing everyday about (all the above : the enchanting beauty of the crowns, the garlands, the radiant spear, the jingling anklets, etc) and the glory of Your dance and redeem myself? மன் (man) : very much; நிரம்ப;

இலங்கேசர் வனத்துள் வனக் குரங்கேவி அழற் புகையிட்டு (ilankEsar vanaththuL vana kurangEvi azhal pugaiyittu) : He sent the monkey Hanuman to the forest (AshOkavanam) belonging to Ravana, the lord of Lanka, and the city went up in flames and smoke;

இளந்தாது மலர்த்திருவைச் சிறை மீளும் (iLandhAthu malarth thiruvai siRai meeLum) : Lakshmi, sitting on the lotus of soft and fresh petals, came as SitA who was rescued by Him from captivity; இளம் தாது மலர்(iLandhAthu malar ) : flower (lotus) having soft pollen; மென்மை வாய்ந்த மகரந்தப் பொடியைக் கொண்ட செந்தாமரை; திரு (thiru) : Lakshmi who incarnated as Sita;

இளங்காள முகில் (iLam kALa mugil) : He is youthful, with the complexion of black cloud; காளம் (kaaLam) : dark; இளமை வாய்ந்த கரிய மேக நிறம் கொண்டவரும்;

கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்து (kadumai sarangOdu karaththil eduththu) : He held in His hands the curved bow (KOthaNdam) and several powerful arrows; கடுமையாகப் பொழிகின்ற பாணங்களுடன் கூடிய வில்லைக் கையில் எடுத்துக் கொண்டு; கோடுதல் என்றால் வளைதல்; கோடு = வளைந்த வில்; சரங்கோடு = பாணங்களுடன் கூடிய வில்; சரம் = அம்பு; : arrow,

இருங்கான நடக்கும் அவற்கு இனியோனே (irungAna nadakkum avaRkku iniyOnE) : and He walked through the dark forests. You are that Rama's favourite (nephew)! இருங் கானம் = இருண்ட காடு;

குலங்கோடு படைத்த அசுரப் பெருஞ்சேனை அழிக்க (kulam kOdu padaith asura perum sEnai azhikka) : To destroy the asuras backed by their tribes and fierce armies, குலத்தின் தன்மையால் வஞ்சனையைக் கொண்ட அரக்கர்களது பெரிய படைய அழிக்குமாறு,

முனைக் கொடுந்தாரை வெயிற்கு அயிலைத் தொடும் வீரா (munai kodum thArai veyiR kayilaith thodum veerA) : in the battlefield, You sent Your sharp, powerful and sparkling Spear, Oh Great Warrior! போர்ப் படையின் கொடுமை நீங்க கூர்மையும் பேரொளியும் பொருந்திய வேலாயுதத்தை விடுத்தருளிய வீரரே! முனை (munai) : battle-field; கொடும் தாரை (kodum thArai) : severe and sharp; கொடியதும், கூர்மையானதும்; வெயிற்கு (veyiRku) : வெயில் போன்ற ஒளி பொருந்திய;

கொழும் காவின் மலர்ப் பொழிலில் (kozhum kAvin malarp pozhilil) : In this place, there are very fertile groves and many flower gardens;

கரும்பாலை புணர்க்கும் இசை (karumbAlai puNarkkum isai) : in their midst, are sugarcane crushers making their humming musical sound; பேரொலியைச் செய்யும் கரும்பு ஆலைகள் நிறைந்த, கரும்பாலை/கரும்பு ஆலை (karumbaalai/karumbu aalai) : sugarcane factory;

குரங்காடு துறைக் குமரப் பெருமாளே.(kurangAdu thuRaik kumarap perumALE.) : and this town is KurangkAduthuRai, which is Your abode, KumarA. You are the Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே