240. உரைத்த சம்ப்ரம


ராகம் : சங்கரானந்தப்ரியாதாளம்: ஆதி
உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கிக்
கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சொத்
தொலித்தி டுஞ்செவி செவிடுற வொண்கட் குருடாகி
உரத்த வெண்பலு நழுவிம தங்கெட்
டிரைத்து கிண்கிணெ னிருமலெ ழுந்திட்
டுளைப்பு டன்தலை கிறுகிறெ னும்பித்தமுமேல்கொண்
டரத்த மின்றிய புழுவினும் விஞ்சிப்
பழுத்து ளஞ்செயல் வசனம் வரம்பற்
றடுத்த பெண்டிரு மெதிர்வர நிந்தித்தனைவோரும்
அசுத்த னென்றிட வுணர்வது குன்றித்
துடிப்ப துஞ்சிறி துளதில தென்கைக்
கவத்தை வந்துயி ரலமரு மன்றைக் கருள்வாயே
திரித்தி ரிந்திரி ரிரிரிரி ரின்றிட்
டுடுட்டு டுண்டுடு டுடுடுடு டுண்டுட்
டிகுட்டி குண்டிகு டிகுடிகு டிண்டிட்டிகுதீதோ
திமித்தி மிந்திமி திமிதிமி யென்றிட்
டிடக்கை துந்துமி முரசு முழங்கச்
செருக்க ளந்தனில் நிருதர் தயங்கச் சிலபேய்கள்
தரித்து மண்டையி லுதிர மருந்தத்
திரட்ப ருந்துகள் குடர்கள் பிடுங்கத்
தருக்கு சம்புகள் நிணமது சிந்தப்பொரும்வேலா
தடச்சி கண்டியில் வயலியி லன்பைப்
படைத்த நெஞ்சினி லியல்செறி கொங்கிற்
றனிச்ச யந்தனி லினிதுறை கந்தப்பெருமாளே

Learn The Song




Paraphrase

உரைத்த சம்ப்ரம வடிவு திரங்கி (uraiththa sambrama vadivu thirangi) : My robust body, praised by all, has shrunk; திரங்கி (thirangi) : to wither; shrivel; dry up

கறுத்த குஞ்சியும் வெளிறிய பஞ்சு ஒத்து (kaRuththa kunjiyum veLiRiya panju oththu) : the black hair has become grey and looks like cotton; குஞ்சி (kunji) : hair;

ஒலித்திடும் செவி செவிடு உற ஒள் கண் குருடாகி (oliththidum cevi ceviduRa voNkat kurudAgi) : my ears that could clearly hear all sounds have become deaf; my hitherto bright eyes have become blind; ஒள் கண்(oL kaN) : bright eyes; eyes that radiate light, ஒளி விடும் கண்கள்;

உரத்த வெண் ப(ல்)லும் நழுவி (uraththa veNpalu nazhuvi) : my strong white teeth have slipped and fallen;

மதம் கெட்டு இரைத்து கிண் கிண் என இருமல் எழுந்திட்டு (matham kettu iraiththu kiNkiN ena irumal ezhunthittu) : my arrogant ego has got lost; I am out of breath, and I cough with unremitting metallic sound;

உளைப்புடன் தலை கிறு கிறு எனும் பித்தமும் மேல் கொண்டு (uLaippudan thalai kiRu kiRu enum piththamu mElkoNdu) : the bile has risen up causing headache and dizziness;

அரத்தம் இன்றிய புழுவினும் விஞ்சி பழுத்து (araththa minRiya puzhuvinum vinji pazhuththu) : due to anaemia, my skin is paler than that of a bloodless worm;

உளம் செயல் வசனம் வரம்பு அற்று (uLam ceyal vasanam varambu atRu) : my mind, speech and action have all strayed from their boundary;

அடுத்த பெண்டிரும் எதிர் வர நிந்தித்து (aduththa peNdirum ethir vara ninthiththu) : the women folk by my side ridicule and taunt me;

அனைவோரும் அசுத்தன் என்றிட உணர்வு அது குன்றி (anaivOrum asuththan enRida uNarvathu kunRith) : all the people have declared me as an unclean guy, and my sensitivity has gone down;

துடிப்பதும் சிறிது உளது இலது என்கைக்கு (thudippathum siRithu uLathu ilathu engaikku ) : my pulse rate is hardly perceptible – now there, now not there;

அவத்தை வந்து உயிர் அலமரும் அன்றைக்கு அருள்வாயே (avaththai vanthu uyir alamarum anRaikku aruLvAyE) : on that day when my life is in distressing state, kindly bestow Your grace upon me! அவத்(ஸ்)தை(avasthai) : agony;

திரித்தி ரிந்திரி ரிரிரிரி ...... திமித்தி மிந்திமி திமிதிமி என்றிட்டு (thiriththi rinthiri .... thimi thimithimi enRittu: (To this meter)) : To the rhythm of the beat thirith thiri...thimithimi,

இடக்கை துந்துமி முரசு முழங்க (idakkai thunthumi murasu muzhangka ) : drums that are beaten with the left hand, trumpets and similar percussion instruments boomed;

செருக்களந்தனில் நிருதர் தயங்க (serukkaLanthanil niruthar thayanga) : in the battlefield, the demons became hesitant;

சில பேய்கள் தரித்து மண்டையில் உதிரம் அருந்த (sila pEygaL thariththu maNdaiyil uthiram aruntha) : some devils began drinking blood using the empty skulls as a bowl;

திரள் பருந்துகள் குடர்கள் பிடுங்க (thiraL parunthukaL kudarkaL pidunga) : hordes of hawks began to pull the intestines from the corpses;

தருக்கு சம்புகள் நிணம் அது சிந்த பொரும் வேலா (tharukku sambukaL niNamathu sintha porum vElA) : and arrogant jackals scattered pieces of flesh all over when You battled with Your spear, Oh Lord! சம்புகம்(sambugam) : a jackal;

Where does Lord Muruga reside?

தடம் சிகண்டியில் வயலியில் (thada sikaNdiyil vayaliyil ) : Mounted on Your majestic peacock, You are present at VayalUr,

அன்பைப் படைத்த நெஞ்சினில் (anbai padaiththa nenjinil) : in the hearts of Your beloved devotees,

இயல் செறி கொங்கில் தனிச்சயம் தனில் (iyal seRi kongil thanichchayam thanil ) : and in Thanichchayam, situated in the prosperous region of Kongku nAdu

இனிது உறை கந்தப் பெருமாளே.(inithu uRai kanthap perumALE.) : You are seated pleasantly, Oh KandhA, the Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே