261. அவசியமுன்


ராகம் : துர்காதாளம்: சதுச்ர ஜம்பை (7)
அவசியமுன் வேண்டிப்பலகாலும்
அறிவினுணர்ந் தாண்டுக்கொருநாளில்
தவசெபமுந் தீண்டிக்கனிவாகிச்
சரணமதும் பூண்டற்கருள்வாயே
சவதமொடுந் தாண்டித்தகரூர்வாய்
சடுசமயங் காண்டற்கரியானே
சிவகுமரன் பீண்டிற் பெயரானே
திருமுருகன் பூண்டிப் பெருமாளே.

Learn The Song




Paraphrase

அவசிய முன் வேண்டிப் பலகாலும் (avasiya mun vENdip pala kAlum) : Realizing the importance of praying to You, I have prayed to You for a long time; உன்னை வழிபடுவதன் அவசியத்தைப் பலகாலமாக (அறிந்து), உன்னைப் பிரார்த்தித்து,

அறிவின் உணர்ந்து ஆண்டுக்கு ஒரு நாளில் (aRivin uNarndhu ANdukku oru nALil) : I should perceive through my mind and intellect; at least once a year,

தவ செபமுந் தீண்டிக் கனிவாகி (thava jebamum theeNdik kanivAgi) : refined by my regular penances and meditation, my mind should mellow, தவநெறியையும் ஜெபமுறையும் மேற்கொண்டு உள்ளம் கசிந்துருகி,

சரணமதும் பூண்டற்கு அருள்வாயே (charaNam adhum pUNdaRk aruLvAyE) : and receive Your Grace to keep Your feet in my mind. உன்னுடைய திருவடிகளை என்னுடைய மனத்தில் பூண்டு தரிப்பதற்கு நீ அருள வேண்டும்.
என்னுடைய அறிவில் உன்னை யுணர்ந்து, வருஷத்திற்கு ஒரு தினமாவது தவ ஒழுக்கத்தையும் ஜெப ஒழுக்கத்தையும் மேற்கொண்டு உள்ளங் கனிந்து உன்னுடைய திருவடியையும் (மனத்தே) தரிப்பதற்கு நீ அருள்புரிவாயாக.

சவதமொடுந் தாண்டித் தகர் ஊர்வாய் (savathamodun thANdith thagar UrvAy) : You fulfilled Your vow of taming the Wild Goat and mounted on it as a vehicle! 'இதை அடக்குவேன்' என்னும் ப்ரதிக்ஞையொடு குதித்து ஆட்டின்மீது ஏறி ஆடு வடிவில் வந்த அசுரனை சபதமெடுத்து அடக்கியவனே! ; தகர் (thagar) : goat;
முருகனுடைய பால லீலைகளுள் ஒன்று. நாரதர் செய்த வேள்வியில் ஒரு முரட்டு ஆடு தோன்றியது. அதை அடக்க முடியவில்லை. வீரபாகுவை அனுப்பி அதைப் பற்றிக்கொண்டு வரச் செய்த கந்தன், அதை அடக்கினான். பின்னர் அதையே வாகனமாகக் கொண்டான். இது கந்த புராணம், உற்பத்திக் காண்டம், தகரேறு படலத்தில் சொல்லப்படுகிறது.

சடுசமயங் காண்டற்கு அரியானே (sadu samayang kANdaRkku ariyAnE) : People following the six religions can hardly realize You; காண்டற்கு (kaNdarkku) : to see, காணுதற்கு;

சிவகுமர அன்பு ஈண்டிற் பெயரானே (sivakumara anbu eeNdiR peyarAnE) : Oh Son of SivA, If anyone approaches You with love, You never part from that person! சிவகுமரனே! அன்பு கொண்டு நெருங்கில், அங்ஙனம் நெருங்கினவரை விட்டுப் பிரியாதவனே!

திருமுருகன் பூண்டிப் பெருமாளே.(thiru murugan pUNdip perumALE.) : You have Your abode at ThirumuruganpUNdi, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே