256. அறமிலா
Learn The Song
Raga Poorvikalyani (Janyam of 53rd mela Gamanashrama)
Arohanam: S R1 G3 M2 P D2 P S Avarohanam: S N3 D2 P M2 G3 R1 SParaphrase
அறம், பொருள், இன்பம் மூன்றும் வாழ்க்கைக்கு முக்கியமானவை. அறம் என்பது தனிமனிதனின் வாழ்வும் பொது வாழ்வும் சீராக இயங்க கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கத்தின் அடிபடையிலான நெறிமுறைகள் அல்லது கடமைகள். அற வழியில் பொருள் ஈட்டி இன்பம் காணுவதே முறையாகும். அறம் அல்லாத வழிகளில் சென்று, பாதகமான செயல்களையே செய்து, அதனால் பின்னர் மனம் வருந்தி, உடல் வருந்தி, இளைத்துப் போகாமல் வாழ்க்கை நடந்திட வேண்டுமானால், பார்க்கும் இடம் எங்கும் நீக்கம் அற நிறைந்துள்ள பரம்பொருளை வழிபட வேண்டும்.
அறம் இலா அதி பாதக வஞ்ச தொழிலாலே (aRamilA athi pAthaga vanjath thozhilAlE) : I undertake unrighteous, treacherous, and deceitful jobs,
அடியனேன் மெலிவாகி மனம் சற்று இளையாதே (adiyanEn melivAgi manam satru iLaiyAdhE) : and became wearied. Lest my mind becomes depressed,
திறல் குலாவிய சேவடி வந்தித்து (thiRal kulAviya sEvadi vandhiththu) : I should worship of Your victorious lotus feet, திறல் (thiRal) : victory;
அருள் கூட தினமுமே மிக வாழ்வு உறும் இன்பை தருவாயே (aruL kUda dhinamumE miga vAzhvuRum inbaith tharuvAyE) : and experience Your grace everyday. Please bless me that I enjoy such a blissful and happy life everyday.
விறல் நிசாசரர் சேனைகள் அஞ்ச பொரும் வேலா (viRal nisAcharar sEnaigaL anjap porum vElA) : You fight and scare the mighty asuras (demons) in the battlefield with Your spear, Oh VElA. விறல் (viRal) : valorous, strong, calibered;
விமல மாது அபிராமி தரும் செய் புதல்வோனே (vimala mAdh abirAmi tharum seyp pudhalvOnE) : Oh, the Purest One, You are the fair son of Mother AbhirAmi (PArvathi)!
மறவர் வாள் நுதல் வேடை கொளும் பொன் புய வீரா (maRavar vANudhal vEdai koLum por buya veerA) : You are the great warrior with elegant shoulders who desired the hunter lass Valli with bright forehead. மறவர் (maRavar) : hunters; வாள் (vAL) : radiant, dazzling; நுதல்(nuthal) : forehead;
மயிலை மா நகர் மேவிய கந்த பெருமாளே. (mayilai mA nagar mEviya kandhap perumALE.) : You chose as Your abode, Thirumayilai, Oh KanthA, the Great One!
Comments
Post a Comment