251. இருவினைப் பிறவி


ராகம் : மாண்டு தாளம்: மிஸ்ரசாபு 2 + 1½
இருவினைப் பிறவிக் கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப் புகுதாதே
திருவருட் கருணைப் ப்ரபையாலே
திரமெனக் கதியைப்பெறுவேனோ
அரியயற் கறிதற் கரியானே
அடியவர்க் கெளி யற்புதநேயா
குருவெனச் சிவனுக் கருள்போதா
கொடுமுடிக் குமரப்பெருமாளே.

Learn The Song




Raga Maand (Janyam of 29th mela Shankarabaranam)

Arohanam: S G3 M1 D2 N3 S    Avarohanam: S N3 D2 P M1 G3 R2 S

Paraphrase

இரு வினை பிறவி கடல் மூழ்கி (iru vinai piRavik kadal mUzhgi) : I am immersed in the deep sea of samsara, which is a result of my good deeds and bad karma,

இடர்கள் பட்டு அலைய புகுதாதே (idargaL pattu alaiyap pugudhAdhE) : and wander around in the midst of sufferings and obstacles.

திரு அருள் கருணை ப்ரபையாலே (thiru aruL karuNaip prabaiyAlE) : With the light of compassion radiating from You,

திரம் என கதியை பெறுவேனோ (thiram ena gathiyaip peRuvEnO) : would I ever reach the eternally blissful stage of salvation? திரம் / ஸ்திரம் = உறுதி, வலிமை; கதி = புகலிடம், பற்றுக்கோடு;

அரி அயற்கு அறிதற்கு அரியானே (ari ayaRk aRidhaRkku ariyAnE) : You were beyond the comprehension of BrahmA and Vishnu!

அடியவர்க்கு எளி அற்புத நேயா (adiyavarkku eLi aRbutha nEyA) : But You are easily accessible to Your devotees and You are their wonderful friend!

குரு என சிவனுக்கு அருள் போதா (guru ena sivanukku aruL bOdhA) : As the Master, You guided Lord SivA kindly, Oh Wise One!

கொடுமுடி குமர பெருமாளே.(kodumudik kumarap perumALE.) : KumarA, You chose Kodumudi as Your abode, Oh Great One!

தல வரலாறு

கொடுமுடி ரயில் நிலையம், திருச்சி - ஈரோடு ரயில் பாதையில் கரூரில் இருந்து வடமேற்கே சுமார் 26 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

ஒருமுறை, ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் தங்களில் யார் பெரியவர் என்பதில் தகராறு ஏற்பட்டது. இந்திரன் விதித்த போட்டி விதிமுறைகளின்படி, மேருமலையை ஆதிசேஷன் தனது ஆயிரம் மகுடங்களால் பற்றிக்கொள்ள வேண்டும் என்றும், வாயுதேவன் அதை மீறி மேருவை வீசித் தள்ள வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, வாயுதேவன் தன் பலம் அனைத்தையும் சேர்த்து காற்றடிக்க, மேரு மலையின் ஐந்து சிகரங்கள் அங்கிருந்து பிய்த்துக்கொண்டு தென்திசையின் பல பாகங்களில் வந்து வீழ்ந்தன. ஐந்தும் ஐந்து மணிகளாக மாறி ஒவ்வொரு இடத்தில் விழ, ஒவ்வொன்றும் ஒரு தலமானது. சிவப்பு மணி வீழ்ந்த இடம் திருவண்ணாமலையாகவும், மாணிக்க மணி வீழ்ந்த இடம் ரத்தினகிரியாகவும் (திருவாட்போக்கி), மரகத மணி வீழ்ந்த இடம் ஈங்கோய் மலையாகவும், நீலமணி வீழ்ந்த இடம் பொதிகை மலையாகவும், வைரம் வீழ்ந்த இடம் கொடுமுடியாகவும் மாறின. மேருவில் இருந்து பிய்ந்துவந்தவற்றில் மற்ற நான்கும் இன்றும் மலைகளாகவே காட்சி தர, வைரமணிமுடி மட்டும் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருவது கொடுமுடி தலத்தின் சிறப்பாகும். மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்றும், தமிழில் கொடுமுடிநாதர் என்றும் இத்தல இறைவன் திருநாமம் கொண்டுள்ளார்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே