254. திமிர மாமன


ராகம் : பந்துவராளிஅங்கதாளம் 1½ + 2 + 2 (5½)
திமிர மாமன மாமட மடமை யேனிட ராணவ
திமிர மேயரி சூரியதிரிலோக
தினக ராசிவ காரண பனக பூஷண ஆரண
சிவசு தாவரி நாரணன்மருகோனே
குமரி சாமளை மாதுமை அமலி யாமளை பூரணி
குணக லாநிதி நாரணிதருகோவே
குருகு காகும ரேசுர சரவ ணாசக ளேசுர
குறவர் மாமக ளாசைகொள்மணியேசம்
பமர பாரப்ர பாருண படல தாரக மாசுக
பசுர பாடன பாளிதபகளேச
பசித பாரண வாரண துவச ஏடக மாவயில்
பரவு பாணித பாவலபரயோக
சமப ராமத சாதல சமய மாறிரு தேவத
சமய நாயக மாமயில்முதுவீர
சகல லோகமு மாசறு சகல வேதமு மேதொழு
சமர மாபுரி மேவியபெருமாளே.

Learn The Song



Raga Pantuvarali (51st mela Alias: kamavardhini)

Arohanam: S R1 G3 M2 P D1 N3 S    Avarohanam: S N3 D1 P M2 G3 R1 S


Paraphrase

திமிர மாமன மாமட மடமையேன் இடர் ஆணவ திமிரமே அரி சூரிய (thimira mAmana mAmada madamaiyEn ida rANava thimiramE ari sUriya) : My mind is dark and filled with ignorance, but You are the bright sun of knowledge who can drive away the darkness of ego and arrogance; இருள் கொண்ட மனத்தையும் மிக்க அறியாமையையும் கொண்டவனான என்னுடைய வருத்தம், ஆணவம், என்னும் இருட்டை (அரி) விலக்கும் சூரியனே! திமிரம் (thimiram) : dark;

திரிலோக தினகரா சிவ காரண (thirilOka dhinakarA siva kAraNa) : You are the sun that lights up the three worlds! You are Siva! You are the Primordial Cause of everything!

பனக பூஷண ஆரண சிவசுதா (panaga bUshaNa AraNa siva suthA) : You are the son of Shiva who is adorned by serpents and who is the Head of all vedas; ப(ன்)னகம்(pa(n)nagam) : serpent; நாகாபரணரும் வேத முதல்வருமான சிவபிரானின் குமாரனே,

அரி நாரணன் மருகோனே (ari nAraNan marugOnE) : You are the nephew of Hari Narayana (Vishnu)!

குமரி சாமளை மாது உமை அமலி யாமளை பூரணி குணகலாநிதி நாரணி தருகோவே (kumari sAmaLai mAdhu umai amali YAmaLai PUraNi guNa kalAnidhi nAraNi tharu kOvE:) : She is a young virgin; She has a blackish green complexion; She is the Mother Divine; She is UmA; She is without any blemish; Her colour is emerald green; She is complete in all respects; she is the Treasure of all virtues and arts; and She is NArAyaNi. You are Her son, Oh Lord!

குருகுகா குமரேசுர சரவணா சகளேசுர (guruguhA kumarEsura saravaNA sakaLEsura) : Oh Master, Oh GuhA, Oh Lord KumarA, Oh SaravaNA; You are the Lord who manifests in a form for us to worship! சகளேசுர (sakaLeswara) : உருவத் திருமேனி கொண்ட ஈசனே

குறவர் மாமகள் ஆசைகொள் மணியே (kuRavar mA magaL AsaikoL maNiyE) : You are the Gem that loves VaLLi, the great daughter of the KuRavAs!

சம் பமர பார ப்ரபா அருண படல (sam b(r)amara pAra praba aruNa padala) : You wear radiant bands of reddish Vetchi garlands around which the beetles hum! மிகுதியான வண்டுகள் மொய்க்கும் ஒளிவீசும் சிவந்த கூட்டமான வெட்சி மாலைகளை அணிந்தவரே! சம் = நன்றாக; பமரம் = வண்டுகள்; பார ப்ரபா = மகிமை ஒளியை உடையவனே; அருண = சிவந்த; படலம் = கூட்டம்; படல = கூட்டமான (வெட்சி மாலைகளை) அணிந்தவனே;

தாரக மாசுக (thAraka mA suga) : You are the substance of PraNava ManthrA! You are the object of eternal bliss!

பசுர பாடன (pasura pAtana) : You composed the hymns (ThEvAram) and taught their morals to the world! பாசுரங்களைப் (தேவாரத்தைப்) பாடி உலகுக்கு பாடம் கற்பித்தவரே! ப(பா)சுர(ம்) (pasuram) : poetic composition: here refers to Sambanthar's compositions, சம்பந்தராக வந்து வாழ்க அந்தணர் என்னும் திருப்பாசுரம் ;

பாளித பகளேச (pALitha pagaLEsa) : You wear garments made of red silk! You are the presiding deity of all mountains! பட்டு அணிந்தவனே! மலைக்கு அதிபனே - குறிஞ்சிவேந்தே! பகளம் = பளகம் ( pal(L)agam ) : mountain; பாளிதம்(paaLitham) : silk-cloth;
OR
The பாளித பகளேச சிவனை குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். பகளா என்பது அம்பிகையின் ஒரு சத்தி. பட்டணிந்தவளும், பகளா என்ற சத்திக்கு நாயகரும் ஆகிய சிவபிரான் என்றும் கூறலாம்.

பசித பாரண (pasitha pAraNa) : You feel fulfilled by adorning Yourself with the holy ash (VibUthi)! OR You are pleased when smeared with the holy ash of Shiva. OR you are pleased when Shiva worships you. பசிதம் (pasitham) : திருநீறு; ; viboothi, holy ash; பசித = பஜித. பஜித்தல் = துதித்தல். பாரண (pAraNa) : approve, be satisfied; திருப்தி உள்ளவனே;

வாரண துவச (vAraNa dhuvacha) : You hold the Rooster in Your staff!

ஏடக மா அயில் பரவு பாணித (Edaga mA ayil paravu pANitha) : You hold in Your venerable hand the great and powerful Spear! மேன்மை மிகுந்த, எல்லோராலும் புகழப்படுகின்ற, பெரிய வேலாயுதத்தைக் ஏந்திய துதிக்கத் தக்க திருக்கரத்தினரே! ஏடக = மேன்மை கொண்ட; மா = சிறந்த; அயில் = கூர்மை, வேலாயுதம்; பரவுதல் = புகழ்தல். பாணித = கரங்களை உடையவர்.;

பாவல பரயோக (pAvala parayOga) : You are the great poet! You are the Supreme Master of yOgAs!

சம(ர்) பராமத சாதல (sama parAmadha sAdhala) : You are responsible for the decline of other warring religions; தர்க்கித்துப் போரிடும் புற மதங்களான புத்தம், சமணம் இவற்றின் நசிவுக்குக் காரணரே! பராமத (parAmatha) : other religions; சாதல (saathala) : cause for decline;

சமயம் ஆறிரு தேவத (samaya mARiru dhEvatha) : You are the underlying deity of all the twelve religions! (6 inner ones and 6 outer – The six inner religions are: Vairavam, VAmam, KaLAmukam, MAviratham, PAsupatham and Pingalam. The six outer religions are: Saivam, VaishNavam, SAktham, Sauram, GaNApathyam and KaumAram). ஐக்கியவாத சைவம் என்பது சைவ சித்தாந்தம் விளக்கும் அகப்புற சமயங்களுள் ஒன்றாகும். பாசுபதம், மாவிரதம், காபாலம், வாமம், காளாமுகம், வைரவம் ஆகியவையும் அகப்புற சமயங்களைச் சார்ந்தவையாகும். இந்த ஐக்கியவாத சைவம் சிவபெருமானை முழுமுதற் கடவுளாக போற்றுகிறது. காளாமுகம் என்பது சிவனை முழுமுதற்கடவுளாக வணங்கும் சைவநெறியின் ஒரு பிரிவாகும். மாவிரதம் என்பது பாதகங்கள் யாவும் விலகக் கொள்ளும் உறுதிமொழி.

சமய நாயக ( samaya nAyaka) : You are the Leader who protects Your devotees at the opportune time! தக்க சமயத்தில் உதவும் தலைவரே!/span>

மாமயில் முது வீர (mAmayil mudhu veerA) : You mount Your great Peacock, and You are the most knowledgeable warrior!

சகல லோகமும் ஆசறு சகல வேதமுமே தொழு (sakala lOkamum AsaRu sakala vEdhamumE thozhu ) : All the worlds and the unblemished VEdAs worship

சமர மாபுரி மேவிய பெருமாளே(samara mApuri mEviya perumALE.) : Your abode, SamaramApuri (ThiruppOrUr), Oh Great One!

திருப்போரூர் ஸ்தல விசேஷம்

கந்த புராணக் கூற்றுப்படி முருகப்பெருமான் மூன்று இடங்களில் அசுரர்களை எதிர்த்துப் போரிட்டார். அவை முறையே திருச்செந்தூர், திருப்பரங்குன்றம்,திருப்போரூர் ஆகும். திருச்செந்தூரில் கடல் மார்கமாகவும், திருப்பரங்குன்றத்தில் நில மார்கமாகவும், திருப்போரூரில் ஆகாய வழியிலும் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. திருப்போரூரில் முருகப்பெருமான் தாரகாசுரனை வென்றதாக கூறப்படுகிறது.

இந்தக் கந்தன் கரங்களிலே உடம்பிடி, குலிசை முதலிய ஆயுதங்கள் இல்லை. தூக்கிய திருக்கரங்களிலே ஜபமாலையும் கமண்டலமுமே காணப்படுகின்றன. இங்குள்ள முருகன், பிரணவப் பொருள் அறியாத பிரமனைச் சிறையில் அடைத்த பின், தானே சிருஷ்டித் தொழிலை மேற்கொண்டிருக்கிறான்.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே