252. பக்குவ ஆசார


ராகம் : தேஷ்ஸங்கீர்ணசாபு 2 + 2½ (4½)
பக்குவ வாசார லட்சண சாகாதி
பட்சண மாமோனசிவயோகர்
பத்தியி லாறாறு தத்துவ மேல்வீடு
பற்றுநி ராதாரநிலையாக
அக்கண மேமாய துர்க்குணம் வேறாக
அப்படை யேஞானவுபதேசம்
அக்கற வாய்பேசு சற்குரு நாதாவு
னற்புத சீர்பாதமறவேனே
உக்கிர வீராறு மெய்ப்புய னேநீல
வுற்பல வீராசி மணநாற
ஒத்தநி லாவீசு நித்தில நீராவி
யுற்பல ராசீவ வயலூரா
பொக்கமி லாவீர விக்ரம மாமேனி
பொற்ப்ரபை யாகாரஅவிநாசிப்
பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
புக்கொளி யூர்மேவு பெருமாளே.

Learn The Song




Raga Desh (Janyam of 28th mela Hari Kambhoji)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

சுவாமிகள் இந்த திருப்புகழ் பாடலில் பரம்பொருளான எம்பிரானே நேரில் வந்து தனக்கு மேன்மை மிக்க சிவ ஞான உபதேசம் அருளியதாக பதிவு செய்கிறார்.

பக்குவ ஆசார லட்சண சாக ஆதி பட்சணமாம் மோன சிவ யோகர் (pakkuva AchAralakshaNa sAkAdhi bakshaNa mA mOna sivayOgar) : The Siva Yogis who mediate in silence and eat only vegetables and herbal food that is apt/fit (for the body) and prepared in prescribed clean ways (aachaara), சாகாதி (sakathhi) : leaves/plant-based;

பத்தியில் ஆறாறு தத்துவ(ம்) மேல் வீடு (baththiyil ARAru thaththuva mEl veedu ) : seek blissful liberation that is beyond the comprehension of the thirty-six tenets, (முப்பத்தாறு தத்துவங்கள் ).

பற்று நிராதார நிலையாக (patru nirAdhAra nilaiyAga) : and is devoid of any attachments. I would like to attain that very state of Liberation.

அக்கணமே மாய துர்க்குணம் வேறு ஆக (akkaNamE mAya dhurguNam vERAga) : As soon as I reach that goal, the baneful qualities possessed by me, caused by delusion, will leave me completely.

அ படையே ஞான உபதேசம் (appadaiyE nyAna upadhEsam ) : The true knowledge that You imparted to me will be the only weapon in my armoury; ஞான உபதேசம் அஞ்ஞானத்தை அறுக்கின்ற வாள்.

அக்கு அற வாய் பேசு(ம்) சற்குரு நாதா (akkaRa vAy pEsu sathguru nAthA) : Oh, my master! When You preach to me with Your mouth, my attachments are severed; அக்கு அற (akku aRa) : drive away attachments, பாசத்தின் உரிமை எல்லாம் அற்றுப் போகும்படி; அக்கு = உரிமை; ;
பற்று நிராதா....சற்குரு நாதா — என்னைப் பற்றியுள்ள துர்க்குணங்கள் யாவும் என்னை விட்டுப் பிரியவும், அந்த ஞானஉபதேசமே என்னை மிகவும் காக்கும் மேன்மை மிக்க மேலான ஆயுதமாக மாறி, போலியான பந்த பாசங்கள் யாவும் மிகவும் அற்றுப்போகும்படி உபதேச மந்திரத்தை வாய் விட்டுக் கூறிய சற் குரு நாதனே!

உன் அற்புத சீர் பாதம் மறவேனே (un aRputha seerppaDam maRavEnE ) : I shall never forget Your wonderful and hallowed feet.

உக்கிர ஈறாறு மெய் புயனே (uggira veerARu mey buyanE) : You possess twelve powerful shoulders that symbolize truth.

நீல உற்பல வீராசி மண(ம்) நாற (neela uRpala veerAsi maNa nARa) : Fragrant bunches of blue lilies blossom in this place; விராசி = நறுமணம்;

ஒத்த நிலா வீசு(ம்) நித்தல நீர் வாவி (oththa nilA veesu niththila neerAvi) : soothing moonlight falls on the ponds whose water is crystal-clear like pearl; பொருந்திய நிலவொளி வீசுவதும், முத்துப்போல் தெளிவானதுமான நீர்நிலை; வயலூரிலுள்ள சக்தி தீர்த்தம் முருகப்பெருமான் வேலை செலுத்தி உண்டாக்கிய தீர்த்தம் என்று கருதப்படுகிறது. பளிங்கு போன்று விளங்கும் இத்தீர்த்தத்தை அருணகிரியார் 'கண்ணாடியில் தடம் கண்டதாக' அதாவது கண்ணாடி போல் தெளிவாக இருப்பதாக 'என்னால் பிறக்கவும்' என்ற பாட்டில் குறிப்பிடுகிறார். நித்திலம் (niththilam) : pearl, முத்து; This refers to the Shakti teertham that Murugan created at Vayalur by wielding His spear and carving a pond that had crystal clear water. Saint Arunagirinathar refers to this pond in the song ennal pirakkavum as நித்தில நீராவி (nittila neeraavi).

உற்பலம் ராசீவ(ம்) வயலூரா (uRpala rAjeeva vayalUrA) : this is VayalUr, Your favourite abode, where kuvaLai and lotus flowers abound. ராசீவ(ம்)(raaseevam) : lotus;

பொக்கம் இலா வீர விக்ரம (pokka milA veera vikrama) : Your prowess is without any falsehood and is truly great! பொக்கம் (pokkam) : falsehood;

மா மேனி பொன் ப்ரபை ஆகார (mA mEni poR prabai AkAra) : Your superb body is of a dazzling gold complexion.

அவிநாசி பொய்க்கலி போமாறு மெய்க்கு அருள் சீரான புக்கொளியூர் மேவு பெருமாளே.(avinAsi poykkali pOmARu meyk karuL seerAna pukkoLiyUr mEvu perumALE. ) : In AvinAsi, the myth of the Kaliyuga (the present aeon) was destroyed and the truth of God was established, adding fame to ThiruppukkoLiyUr, where You are seated, Oh Great One! என் பொய்யான நிலை நீங்கி, மெய்யான உன் அற்புதத் திருவடிகளை எனக்குத் தருவாயாக. மிகவும் மேலான மேன்மை மிக்க அழகிய அவிநாசி என்ற தலத்தில் பொல்லாத இந்தக் கலியுகத்தின் பொய்மை நீங்குமாறு உனது மேன்மை மிக்க மேலான திருவருளின் புகழ் சிறக்கும்படிச் செய்த திருப்புக்கொளியூர் தலத்தில் வீற்றிருக்கும் தேவர் பெருமாளே!
வேதத்துக்குப்புறம்பான சமயங்களையே பொய்க்கலி என்று கூறுகிறார் அருணகிரிநாதர். முதலைஉண்ட பிள்ளையை (உயிரோடு இருந்திருந்தால் என்ன வளர்ச்சி இருக்குமோ அப்படி) மீட்டு, சைவ நெறி என்கிற மெய்மைக்கு அருளிய பெருமை உடைய புக்கொளியூர் என்கிறார்.

In AvinAsi, an incredible incident happened in Sundaramurthy Nayanar's life. Once, two young boys went to take a dip in the nearby lake at ThiruppukkoLiyur. One of them was eaten alive by a crocodile. A few years later, the parents of the other boy, who lived opposite the house of the dead boy, decided to conduct the thread ceremony for the boy. Witnessing the festivities, the parents of the dead boy were grief-stricken. Sundaramoorthy NayanAr who happened to go via that route, came to know about the reason for their distraught condition. He sang AvinAsi Pathikam, whereupon the lake was filled with water. The crocodile came to the bank of the lake and spat the boy alive. Arunagirinathar considers this a unique incident of divine grace in the Kali Yuga.

கருத்துரை

தகுந்த ஆசார நிலையில் நின்று, சைவ உணவு உண்டு, மவுன நிலையில் நிற்கும் சிவ யோகிகள் தங்களுடைய பத்தி நிலையில் முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்த, வீட்டுப் பேற்றைப் பற்றுவதானதும், எல்லா பற்றுக்களும் அற்றதான நிலையை நான் அடைந்தவுடன், என்னைப் பற்றியுள்ள துர்க்குணம் எல்லாம் என்னை விட்டொழிய, அந்த ஞான உபதேசமே எனக்குப் படையாகவும், பாசம் ஒழியவும், உபதேசத்தை வாய் விட்டு உரைத்த சற்குரு நாதரே, உன் அழகிய திருவடிகளை நான் என்றும் மறவேன்.

ஊக்கம் மிக்கனவும், உண்மை நெறியைக் காட்டுவனவும் ஆகிய பன்னிரு புயங்களை உடையவனே, நீலோற்பலம், தாமரை ஆகிய மலர்களின் நறு மணம் வீசுவதும், நிலவொளி வீசுவதும், முத்துப் போல் தெளிவு உள்ளதுமான வயலூர்ப் பெருமானே, வீரக் கழல்கள் அணிந்தவனே, பொன்னொளி வீசும் உடல் அழகனே, திருப்புக்கொளியூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே, என் பொய்யான நிலை நீங்கி, மெய்யான உன் அற்புதத் திருவடிகளை எனக்குத் தருவாயாக.

Comments

  1. What a dedicated thiruppugazh sevai... U are catering to anbargal who are non tamizh reading....
    Namaskaram.....

    ReplyDelete
  2. Superb English. Meaning explained so well.

    ReplyDelete
  3. For simple explanation of this song, see https://youtu.be/Rq4wppc4diw&t=150s

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே