249. இருவினை அஞ்ச


ராகம் : ஹிந்தோளம்தாளம்: மிஸ்ரசாபு 2 + 1½ (3½)
இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச மலமாய
எனதிடர் மங்க வுனதருள் பொங்க
இசைகொடு துங்கபுகழ்கூறித்
திருமுக சந்த்ர முருகக டம்ப
சிவசுத கந்த குகவேல
சிவசிவ என்று தெளி வுறு நெஞ்சு
திகழந டஞ்செய் கழல்தாராய்
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
மகிழரி விண்டுமருகோனே
வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன் மயில்வீரா
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
மமலனு கந்தமுருகோனே
அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
அமளிந லங்கொள் பெருமாளே

Learn The Song




Raga Hindolam (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S G2 M1 D1 N2 S    Avarohanam: S N2 D1 M1 G2 S

Paraphrase

To witness cosmic dance means to be in total harmony with all the objects in the universe and there is no duality of self and the Universal Self. That's what happens when the Lord's feet come dancing to you: all the 'karmas' — the accumulated karma of the past and the prospective karma of the future — are wiped out and the existential angst disappears.

இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச (iruvinai anja varuvinai kenja) : (In order that) the twin karmas – Prarabtha and Sanchitha Karma become too scared to trail me, the karma in store (future or AgAmya Karma) begs to be excused, சஞ்சிதம் என்னும் எஞ்சு வினை, பிராரப்தம் என்னும் நுகர்வினை ஆகிய இருவினைகளும் அஞ்ச, ஆகாமியம் என்னை வந்து பொருந்தாமல் அகல;
நாம் முருகனிடம் போனால். முதல் இருவகை வினைகளும் நம்மிடம் வர அஞ்சும். மூன்றாம் வகையான ஆகாமியமோ, 'நான் வரவில்லை ' என கெஞ்சி அகலுமாம்.

கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள நல்வினை; தீவினைக் குவியல் ‘சஞ்சித வினை’ என்று அழைக்கப் பெறும். அக்குவியலில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவித்து முடிக்க ஒரு ஆன்மா பிறவி எடுக்கிறது. இது ‘பிராரப்த வினை’. ஆகாமிய கர்மம்: இப்போதைய பிறவியில் செய்யப்படும் புதிய வினைப்பயன்கள் அடுத்த பிறவிக்குக் காரணமாகவிருக்கும் நல்வினை, தீவினைகள் ஆகாமியம் எனப்படும். ஞானம் வந்தால் ஆகாமியம் சஞ்சிதம் நாசம் அடையும். ஜீவன் முக்தர்களின் சஞ்சித வினைகளை அவர்களின் ஞானாக்கினி, பஞ்சை தீ எரிப்பதுபோல எரித்துவிடும். ஆகாமியம் அவர்களின் அருகிலேயே நெருங்காது. பிராரப்தம் மட்டும் அனுபவத்தால் தான் நசிக்கும்.

ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் மாயவும், இடர் மங்கவும் அருள் பொங்கவும். இசையுடன் முருகன் புகழ் பாடவேண்டும் அதற்கு அவன் அருள் வேண்டும்.

இருள் பிணி துஞ்ச மலம் மாய (iruL piNi thunja malam mAya) : the dark diseases evade me and die away, the three malams (haughtiness, karma and illusion — ஆணவம், கன்மம், மாயை ) are destroyed, துன்பத்தைத் தருகின்ற நோய்கள் வலியிழந்து போக, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அழிந்து ஒழிய,

எனது இடர் மங்க உனது அருள் பொங்க (enathu idar manga unadhu aruL ponga ) : my sufferings fade away and Your Grace overflows,

இசை கொடு துங்க புகழ் கூறி (isai kodu thunga pugazh kURi) : when I praise Your pure Glory in music,

திரு முக சந்த்ர முருக கடம்ப (thiru muga chandhra muruga kadamba ) : chanting "Oh Lord with a moon-like face, MurugA, KadambA,

சிவசுத கந்த குக வேல சிவசிவ என்று (sivasutha kandha guha vEla siva siva endru:) : son of SivA, KandhA, GuhA, VElA, Sivasiva,"

தெளிவு உறு நெஞ்சு திகழ நடம் செய் கழல் தாராய் (theLivuRu nenju thigazha natanjsey kazhal thArAy) : so that my heart clears up and brightens. In order that all these happen (as described above), You give me the grace of Your dancing feet.

மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு(marudhodu kanja nuyir bali kondu ) : (In Krishnavathara) Marutha tree and Kamsa were destroyed by மருது (maruthu) : மருத மரம்; கஞ்சன் (kanjan) : Kamsa;

மகிழ் அரி விண்டு மருகோனே (magizh ari viNdu marugOnE ) : Hari (Vishnu) happily; You are His nephew!

வதை புரிகின்ற நிசிசரர் குன்ற (vadhai purigindra nisicharar kundra) : Torturing Asuras were destroyed by You,

வலம் வரு செம் பொன் மயில் வீரா (valam varu sem pon mayil veerA ) : and You flew around celebrating victory on Your golden red Peacock.

அருகு உறு மங்கையொடு விடை உந்தும் (arugu uRu mangaiyodu vidai undhum ) : SivA, who has shared His side with PArvathi, and who mounted the Rishabha (Bull) with her, அருகு உறு மங்கை (arugu uRu mangai) : the woman by the side, Parvati;

அமலன் உகந்த முருகோனே (amalan ugandha murugOnE) : that purest form of God loves You, Oh MurugA!

அருள் செறி பந்தணையில் (aruL seRi pandhaNaiyil ) : In the grace-filled town of ThirupanthaNainallUr,

இரு மங்கை அமளி நலம் கொள் பெருமாளே (iru mangai amaLi nalangkoL perumALE.) : You rejoice in the flowery bed with Your two consorts, VaLLi and DEvayAnai, Oh Great One! அமளி (amaLi) : bed;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே