133. தாக்கமருக்கொரு


ராகம்: கானடாதாளம்: ஆதி (எடுப்பு 1/2 இடம்)
தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு
சாக்ஷிய றப்பசி யாறியை நீறிடு
சாஸ்த்ர வழிக்கதி தூரனை வேர்விழு தவமூழ்குந்
தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர்
போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல்
சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை தடுமாறிப்
போக்கிட மற்றவ்ரு தாவனை ஞானிகள்
போற்றுத லற்றது ரோகியை மாமருள்
பூத்தம லத்ரய பூரியை நேரியபுலையேனை
போக்கவி டக்கட னோஅடி யாரொடு
போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது
போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள்புரிவாயே
மூக்கறை மட்டைம காபல காரணி
சூர்ப்பந கைப்படு மூளியு தாசனி
மூர்க்க குலத்திவி பீஷணர் சோதரிமுழுமோடி
மூத்தவ ரக்கனி ராவண னோடியல்
பேற்றிவி டக்கம லாலய சீதையை
மோட்டன் வளைத்தொரு தேர்மிசை யேகொடுமுகிலேபோய்
மாக்கன சித்திர கோபுர நீள்படை
வீட்டிலி ருத்திய நாளவன் வேரற
மார்க்கமு டித்தவி லாளிகள் நாயகன்மருகோனே
வாச்சிய மத்தள பேரிகை போல்மறை
வாழ்த்தம லர்க்கழு நீர்தரு நீள்சுனை
வாய்த்தி ருத்தணி மாமலை மேவிய பெருமாளே.

Learn The Song


Raga Kanada (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 P G2 M1 D2 N2 S    Avarohanam: S N2 P M1 G2 M1 R2 S

Paraphrase

தாக்கு அமருக்கு ஒரு சாரையை (thAkkama rukkoru sAraiyai) : Like a rattle snake that faces a fierce battle (and hides like a coward from the enemy);தாக்குதலோடு கூடிய போருக்கு சாரைப் பாம்புபோல் ஓடி ஒளிபவனும், (சமய நிந்தை தெய்வ நிந்தை செய்யும் இடங்களில் உயிரைத் துரும்பாக எண்ணி எதிர்க்காமல் ஓடியொளியும் பேடித் தன்மையுடையவன் என்பது கருத்து.)

வேறு ஒரு சாக்ஷி அற பசி ஆறியை (vER oru sAkshi aRappasi ARiyai) : like someone who eats a lonely meal without a witness (without offering food to anyone else);

நீறு இடு சாஸ்த்ர வழிக்கு அதி தூரனை (neeR idu sAsthra vazhikku athi dhUranai) : someone far away from the ritual of wearing SivA's holy ash;

வேர் விழு(ம்) தவ(ம்) மூழ்கும் தாற் பர்ய(ம்) அற்று உழல் பாவியை (vErvizha thavamUzhgum thARparya matruzhal pAviyai) : a sinner, roaming around without any thought of doing deep-rooted meditation which sustains life like the root sustaining the tree; மரத்தைத் தாங்கும் வேர்போல் ஆருயிரைத் தாங்கி அருள்கின்ற மெய்த் தவத்தில் முழுகும் நற்பயனை கருத்தில் கொள்ளாமல் வீணில் உழன்று திரிகின்ற பாவியை, தாற்பர்ய(ம்)( thaRparyam) : idea/thought/consideration; சிந்தனை;

நா வ(ல்)லர் போல் பரிவுற்று உனையே கருதாது இகல் சாற்று(ம்) தமிழ் குரை ஞாளியை (nAvalar pORpari vutru unayE karu dhAdhigal sAtru thamizhkkurai nyALiyai) : I pose like an eloquent person, and, without thinking about You, argue with others barking abusive language ("dog"); அன்புடன் இறைவனை நினையாமல், சண்டை செய்து, தமிழ் மொழிகளால் வேறு ஒருவருடன் வாதிட்டு குரைக்கின்ற நாயினை, நாவலர் போல் = புலவர்களைப் போல் நடித்துக் கொண்டு, இகல் சாற்று = சண்டை செய்து, நாவ(ல்)லர் (naaval(l)ar ) : eloquent; one who has gift of the gab; இகல் (igal) : hostility; ஞாளி (nyALi) : dog; சிறிது தமிழ் புலமை பெற்றதும் தற்செருக்குற்று மற்றவர்களிடம் தர்க்கிப்பவரை அருணகிரியார் சாடுகிறார்.

நாள் வரை தடுமாறி போக்கிடம் அற்ற வ்ருதாவனை (nALvarai thadumARi pOkkidam atra vridhAvanai) : Until today, I have faltered wastefully, I am a useless person without any goal or destination; விருதாவன் (viruthaavan) : wastrel, good-for-nothing;

ஞானிகள் போற்றுதல் அற்ற துரோகியை (nyAnigaL pOtrudhal atra dhurOgiyai ) : I am a treacherous person without any respect for the enlightened people;

மா மருள் பூத்த மல த்ரய பூரியை நேரிய புலையேனை (mA maruL pUththa malathraya pUriyai nEriya pulaiyEnai) : Due to acute ignorance, I am possessed by the three evil characteristics (haughtiness, illusion and karmA), and I am baser than the basest; மல த்ரய (mala thraya) : the three evil passions or inherent principles of the soul. பூரியர் = கீழ்மக்கள்; கொடியவர்.

போக்கி விட கடனோ (pOkkividak kadanO) : Should You decide to get rid of such a hopeless person?

அடியாரோடு போய் பெறுகைக்கு இலையோ கதி ஆனது (adiyArodu pOy perugaik kilaiyO gathi yAnadhu) : Am I not eligible to go to heaven along with Your devotees and get salvation?

போர் சுடர் வஜ்ர வை வேல் மயிலா அருள் புரிவாயே (pOr sudar vajra vai vEl mayilA aruL purivAyE) : You have the golden spear, sharp and sparkling like a diamond, and the peacock! Shower Your grace on me. போர் செய்வதும் ஒளிவிடுவதும், வைரம் போன்றதும் கூர்மை பொருந்தியதுமாகிய வேலையும் மயிலையும் உடையவரே! வை வேல் = கூர்மையான வேல்;

The next lines describe scenes from Ramyana and describe Muruga as the nephew of Rama.

மூக்கு அறை மட்டை மகா பல காரணி (mUkkaRai mattai mahA bala kAraNi) : She got her nose cut off; she was stupid but with immense strength; she was the root cause (for the downfall of RavaNA's dynasty); மூக்கறை = மூக்கறுக்கப் பட்டவளும்,

சூர்ப்பநகை படு மூளி உதாசனி (sUrppanagai padu mULi udhAsani) : her name was SUrpanagai and she was cruel; she deserves to be disrespected;

மூர்க்க குலத்தி விபீஷணர் சோதரி முழு மோடி (mUrkka kulaththi vibeeshaNar sOdhari muzhumOdi) : she comes from a imbecile family, although she was the sister of good VibheeshanA, she was totally haughty; விபீஷணர் சோதரி = முன் ஜென்மத்தில் விபீஷணர் சங்கசூடணனாக இருந்து குருவிடம் பயிலும் போது குருவின் மகளான சுமுகி தன் காதலுக்கு இணங்காததால் தன் தந்தையிடம் பொய் உரைத்தாள். இதனால் அரசனால் அங்கங்கள் பங்கப் படுத்தப்பட்ட சங்கசூடன் தரும தேவதையிடம் முறையிட்டான். இதைக் கேட்ட ஆதிசேஷனும் இதற்கு அடுத்த பிறவியில் பழி வாங்குவதாக கூறி சங்கசூடணனை சமாதானப் படுத்தினான். ஆதிசேஷனே லக்ஷ்மணனாகப் பிறந்து சுமுகியின் மறு பிறப்பான சூர்பனகையை மூக்கறுத்து வாக்கை நிறைவேற்றினான்.

மூத்த அரக்கன் இராவணனோடு இயல்பு ஏற்றி விட கமலாலய சீதையை (mUththa arakkan irAvaNanOdu iyalpEtrividak kamalAlaya seethaiyai) : and that SUrpanagai went to her elder brother and Rakshasa King, RAvaNA, and described Sita's beauty in such a tempting way that Sita, who is none other than Lakshmi residing in the lotus temple,

மோட்டன் வளைத்து ஒரு தேர் மிசையே கொ(ண்)டு முகிலே போய் (mOttan vaLaiththu oru thErmisaiyE kodu mugilE pOy) : was kidnapped in a cunning manner by that Rakshasa; and he took her in his chariot which flew off towards the clouds to, முகில் : மேகம்; மோட்டன்: மூர்க்கன்;

மா கன சித்திர கோபுர நீள்படை வீட்டில் இருத்திய (mA gana chiththira gOpura neeL padai veettil iruththiya) : LankA, which has tall and picturesque buildings, armies and towers and imprisoned her.

நாள் அவன் வேர் அற மார்க்கம் முடித்த (nAL avan vEr aRa mArga mudiththa ) : that day, the path to the destruction of his dynasty was fixed and carried out மார்க்கம் முடித்த = அதற்குரிய வழியை நிறைவேற்றிய,

வில்லாளிகள் நாயகன் மருகோனே (vilALigaL nAyagan SitAmarugOnE ) : by expert archers whose leader was Rama, and You are his nephew!

வாச்சிய மத்தள பேரிகை போல் மறை வாழ்த்த (vAchchiya maththaLa bErigai pOl maRai vAzhththa) : The chanting of VEdAs (scriptures) at Your shrine sound like maththaLam and pErikai (trumpet)

மலர் கழு நீர் தரு நீள் சுனை வாய்த்த திருத்தணி மா மலை மேவிய பெருமாளே.(malark kazhuneer tharu neeL sunai vAyththa thiruththaNi mA malai mEviya perumALE) : at ThiruththaNi which has perennial springs teeming with kazhuneer flowers (red water lilies) and You reside on its hill, Oh Great One!

The Three Malas

Mala means taint or impurity, a limiting condition that hampers the free expansion of spirit. It is of three forms, anava mala, mayiya mala, and karma mala.

Anava mala is the root mala, the primal limiting condition which reduces the universal Consciousness to a small, limited entity. It is a cosmic limiting condition over which the individual has no control. It is owing to this that the jiva (individual soul) considers himself a separate entity, cut off from the universal Consciousness. Mayiya mala springs from Anava mala.It is that binding condition that causes you to see yourself as separate from others and causes you to perceive people, places and things as being different from each other and different from yourself. Karma mala evolves out of Mayiya mala. It is the limiting conditions created by samskaras/vasanas of your past and present lives. It is the condition in which you believe yourself to be the body and you attribute all your actions to the limited "I" consciousness of your own ego.

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே