244. வேதத்திற் கேள்வி


ராகம் : ஸ்ரீரஞ்சனி தாளம்: திஸ்ர த்ரிபுடை
வேதத்திற் கேள்வி யிலாதது
போதத்திற் காண வொணாதது
வீசத்திற் றூர மிலாததுகதியாளர்
வீதித்துத் தேடரி தானது
ஆதித்தற் காய வொணாதது
வேகத்துத் தீயில் வெகாததுசுடர்கானம்
வாதத்துக் கேயவி யாதது
காதத்திற் பூவிய லானது
வாசத்திற் பேரொளி யானதுமதமூறு
மாயத்திற் காய மதாசல
தீதர்க்குத் தூரம தாகிய
வாழ்வைச்சற் காரம தாஇனியருள்வாயே
காதத்திற் காயம தாகும
தீதித்தித் தீதிது தீதென
காதற்பட் டோதியு மேவிடு கதிகாணார்
காணப்பட் டேகொடு நோய்கொடு
வாதைப்பட் டேமதி தீதக
லாமற்கெட் டேதடு மாறிடஅடுவோனே
கோதைப்பித் தாயொரு வேடுவ
ரூபைப்பெற் றேவன வேடுவர்
கூடத்துக் கேகுடி யாய்வருமுருகோனே
கோதிற்பத் தாரொடு மாதவ
சீலச்சித் தாதியர் சூழ்தரு
கோலக்குற் றாலமு லாவியபெருமாளே.

Learn The Song




Raga Sriranjani (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P D2 S    Avarohanam: S N3 D2 N2 D2 P M1 G3 R2 S


Paraphrase

வேதத்தில் கேள்வி இலாதது (vEthaththiR kELvi ilAthathu) : It has not been investigated by the vedas;

போதத்திற் காண ஒணாதது (pOthaththiR kANa oNAthathu) : it cannot be seen through intellect;

வீசத்தில் தூரம் இலாதது (veesaththil thUram ilAthathu) : it is not even 1/16th of an inch away from us; வீசம்(veesam) : 1/16th of a measure, மாகாணி;

கதியாளர் வீதித்துத் தேட அரிதானது (kathiyALar veethiththu thEda arithAnathu ) : it is beyond the reach of those seekers of salvation who search it through intellect/rationalisation; கதியாளர் (gathiyALar) : those who seek liberation or நற்கதி;

ஆதித்தற் காய ஒணாதது (AthiththaR kAya oNAthathu) : It cannot be scorched by the sun;

வேகத்துத் தீயில் வெகாதது சுடர்கானம் (vEgaththu theeyil vegAthathu sudar kAnam: ) : it does not get cooked by severe forest fire;

வாதத்துக்கே அவியாதது (vAthaththukkE aviyAthathu) : Its lustre can never be diminished even by fierce wind;

காதத்திற் பூ இயலானது வாசத்தில் (kAthaththiR pU iyalAnathu vAsaththil) : its fragrance is seen even upto ten miles; காதம் (katham ) : about 10 miles; பூ இயலானது = மலரின் தன்மை வாய்ந்தது;

பேரொளியானது (pEroLiyAnathu) : it exists as a huge dazzling light;

மதமூறு மாயத்திற் காய மதாசல தீதர்க்குத் தூரமது (mathamURu mAyaththiR kAya mathAsala theetharkku thUram athu) : it is beyond the grasp of those evil people whose illusion-filled body exudes the intoxicating musth/rutting-water of arrogance.

ஆகிய வாழ்வை (Agiya vAzhvai) : with such majestic state of salvation (having the attributes described above)

சற்காரம் அதா இனி அருள்வாயே (chaRkAram athA ini aruLvAyE) : Kindly be considerate to me and bless me with that life! சற்காரம் (chaRkAram ) : Kindness, beneficence, hospitality, virtuous deeds, civility, சற்காரியம், உபசாரம்;

காதத்தில் காயம் அதாகும் மதி தித்தி (kAthaththil kAyama thAku mathee thiththi) : Correcting the minds of those (demons) who were bent upon killing others, காதம் (katham) : killing others, கொலைத் தொழில்; தித்தி / திருத்தி(thiththi / thiruththi) : correcting;

தீது இது தீது என காதல் பட்டு ஓதியும் (theethu ithu theethu ena kAtha pattu Othiyum ) : and lovingly pointing out to them, again and again, that their act was evil; despite this,

மேவிடு கதி காணார் காணப்பட்டே கொடு நோய் கொ(ண்)டு வாதை பட்டே ( mEvidu gathi kANAr kANappattE kodu nOy kodu vAthai pattE) : those people unconcerned about salvation, would not give up their act, resulting in visible signs of serious diseases from which they suffered; கதி காணார் (gathi kANAr) : those who do not seek salvation;

மதி தீது அகலாமல் கெட்டே தடுமாறிட அடுவோனே (mathi theethakalAmaR kettE thadumARida aduvOnE) : and since their mind never got rid of the bad thinking, and got worse, You killed all those demons!

கோதை பித்தாய் ஒரு வேடுவர் ரூபை பெற்றே (kOthai piththAy oru vEduva rUpai petRE) : Because You were madly in love with VaLLi, You took the form of a hunter, கோதை பித்தாய் (kOthai piththAy) : infatuated with the girl;

வன வேடுவர் கூ(ட்)டத்துக்கே குடியாய் வரும் முருகோனே (vana vEduvar kUdaththuk kEkudi yAyvaru murugOnE) : and set about living in the dwelling place of those hunters in the forest, Oh MurugA!

கோது இல் பத்தாரோடு மாதவ சீல சித்தர் ஆதியர் சூழ் தரு (kOthu il paththArodu mAdhava seela siththAthiyar sUzh tharu ) : Around here are several unblemished devotees and virtuous saints, well-known for their penance, கோது இல் (kothu il) : blemishless;

கோல குற்றாலம் உலாவிய பெருமாளே (kOla kutrAlam ulAviya perumALE.) : and You live in this lovely town, KutRAlam, which is Your abode, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே