226. ஞாலமெங்கும்


ராகம் : ஹம்சானந்திதாளம்: அங்கதாளம்
3½ + 3½ + 3 (10)
ஞால மெங்கும் வளைத்த ரற்று கடலாலே
நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் வசையாலே
ஆலமுந்து மதித்த ழற்கும் அழியாதே
ஆறி ரண்டு புயத்த ணைக்க வருவாயே
கோல மொன்று குறத்தி யைத்த ழுவுமார்பா
கோடை யம்பதி யுற்று நிற்கு மயில்வீரா
கால னஞ்ச வரைத்தொ ளைத்த முதல்வானோர்
கால்வி லங்கு களைத்த றித்தபெருமாளே.

Learn The Song



Raga Hamsanandi (Janyam of 53rd mela Gamanashrama)

Arohanam: S R1 G3 M2 D2 N3 S    Avarohanam: S N3 D2 M2 G3 R1 S


Paraphrase

In the Tamil literary tradition called ‘agaththuRai’, it is customary to consider oneself as a woman longing for her lord. In one of the practice in these poetry called ‘dhUthu’, the nayika sends various creatures such as parrot, swan, etc. to be her messenger and tell her lord about her state. The songs also describe the pangs of separation the nayika feels when separated from her Lord, and how various events around her– the roar of the sea, the cool moonlit night, etc., exacerbate the pain.

ஞாலமெங்கும் வளைத்து அரற்று கடலாலே (nyAlamengum vaLaiththu aratru kadalAlE) : The continuous pounding by the waves of the seas surrounding the entire world;

நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே (nALum vanjiyar utru raikkum vasaiyAlE) : the profanities uttered daily by gangs of gossip-mongering women;

ஆலம் உந்து மதித் தழற்கும் அழியாதே (Ala mundhu madhith thazhaRkum azhiyAdhE) : and the poisonous-rays emitting moon – all these are all killing her. To protect her,

ஆறிரண்டு புயத்தணைக்க வருவாயே (ARu irandu buyaththu aNaikka varuvAyE ) : come and hug her with Your twelve shoulders.

கோலம் ஒன்று குறத்தியைத் தழுவு மார்பா (kOla mondru kuRaththiyaith thazhuvu mArbA) : With Your chest You did embrace VaLLi, the lovely damsel of KuRavAs

கோடையம்பதி உற்று நிற்கு மயில்வீரா (kOdaiyampadhi utru niRku mayilveerA ) : You chose to preside at KOdai nagar with Your peacock!

காலன் அஞ்ச வரைத் தொளைத்த முதல் (kAlan anja varaith thoLaiththa mudhal) : You are the primeval Lord who pierced the mount of Krouncha and scared the Death-God (YamA)!

வானோர் கால் விலங்குகளைத் தறித்த பெருமாளே. (vAnOr kAl vilangugaLaith thaRiththa perumALE.) : You shattered the chains that bound the DEvAs, Oh Great One! ! :

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே