227. தோழமை கொண்டு
Learn The Song
Raga Brindavana Saranga (Janyam of 22nd mela Karaharapriya)
Arohanam: S R2 M1 P N3 S Avarohanam: S N2 P M1 R2 G2 SParaphrase
தோழமை கொண்டு சலம் செய் குண்டர்கள் (thOzhamai koNdu chalam sey guNdargaL) : Those despicable people who do inappropriate things despite professing friendship;
ஓதிய நன்றி மறந்த குண்டர்கள் (Odhiya nandri maRandha guNdargaL) : those ungrateful people who don't have gratitude for their teachers; ஓதுவித்த ஆசிரியருடைய உபகாரத்தை மறுப்பவர்கள்
சூழ் விரதங்கள் கடிந்த குண்டர்கள் (sUzh viradhangaL kadindha guNdargaL) : those ignoble people who forsake all vows and religious rites;
பெரியோரைத் தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள் (periyOrai dhUshaNa nindhai pagarndha guNdargaL) : those scums who insult the elders;
ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் (eevadhu kaNdu thagaindha guNdargaL) : and stop people from giving alms; தகைதல் = தடுத்தல், அடக்குதல்;
சூளுறவு என்பது ஒழிந்த குண்டர்கள் (sULuRavu enbadho zhindha guNdargaL) : those lowly people who have given up speaking the truth; சூளுறவு = ஆணையிடுதல். தான் வழிபடும் தெய்வத்தின் மீதும், தாய் தந்தை இருவர் மீதும் ஆணையிட்டு, அதனை பின்னால் துறப்பவர்கள்; சூள் (sUL) : truth, oath, vow;
தொலையாமல் வாழ நினைந்து வருந்து குண்டர்கள் (tholaiyAmal vAzha ninaindhu varundhu guNdargaL) : those selfish people who want undiminishing prosperity and toil only for their own survival;
நீதி அறங்கள் சிதைந்த குண்டர்கள் (needhi aRangaL sidhaindha guNdargaL) : those immoral people who destroy all codes of justice and righteousness; நீதி = ஒரு சமுதாயத்திற்கு, ஒரு குலத்திற்கு, ஒரு பகுதியினருக்கு என்று ஏற்பட்டது, community laws; அறம் = எல்லோருக்கும் பொதுவானது, ethical rules;
மான அகந்தை மிகுந்த குண்டர்கள் (mAna agandhai migundha guNdargaL) : those vile people who are full of blemishes and arrogance; மானம் = பெருமை. இங்கு தற்பெருமையைக் குறிக்கின்றது. தற்பெருமை கொண்டு செருக்குற்று அடக்கமின்றி அலைபவர்கள்.
வலையாலே மாயையில் நின்று வருந்து குண்டர்கள் (valaiyAlE mAyaiyil nindru varundhu guNdargaL) : those mean people who fall victim to attachment, live and suffer in delusion; ஆசையாகிய வலையில் சிக்குண்டு மாயையில் மயங்கி அவமே அழிபவர்கள்
தேவர்கள் சொங்கள் கவர்ந்த குண்டர்கள் (dhEvargaL songaL kavarndha guNdargaL) : and those depraved people who steal the property belonging to celestials (temples); சொம் = சொத்து.
வாதை நமன் தன் வருந்திடும் குழி விழுவாரே (vAdhai namandran varundhidung kuzhi vizhuvArE) : all of them will fall into the pit of hell, controlled by the God of Death, and suffer. மேற்கூறிய பாவங்களைச் செய்தவர்கள் இயமனுடைய நரகக் குழியில் வீழ்ந்து அநேக காலம் துன்புறுவார்கள்.
ஏழு மரங்களும் வன்குரங்கு எனும் வாலியும் (Ezhu marangaLum van kurangu enum vAliyum) : The seven marAmarA trees and the strong monkey called VAli,
அம்பரமும் பரம்பரை ராவணனும் சதுரங்க லங்கையும் (ambaramum parambarai rAvaNanum chathuranga lankaiyum) : the ocean, King RAvaNA belonging to the dynasty of asuras, his country LankA noted for its four divisions of armies (elephants, chariots, horses and foot soldiers), அம்பரம் (ambaram) : infinite space, cloth/apparel, sea, ஆடை, வானம், கடல்;
அடைவே முன் ஈடழியும்படி (adaivE mun eedazhiyum padi) : were all rendered powerless and destroyed;
சந்த்ரனும் சிவசூரியனும் சுரரும் பதம் பெற (chandhranum siva sUriyanum surarum padham peRa) : the Moon, the Sun, SivA, and all the celestials were all reinstated in Heaven;
ராம சரம் தொடு புங்கவன் திரு மருகோனே (rAma saram thodu pungavan thiru marugOnE) : when Rama sent out His arrow with His name inscribed on it. You are the beloved nephew of that great Rama! புங்கவன் (pungavan): supreme deity;
ஏழு மரங்களும்.....மருகோனே : மராமரங்கள் ஏழும், வலிமை மிக்க குரங்காகிய வாலியும், கடலும், அசுர பரம்பரையில் வந்த இராவணனும், அவனது நால்வகைப் படையும் (யானை, தேர், குதிரை, காலாட்படை) இருந்த இலங்கையும், மற்ற எல்லாவகைச் செல்வமும் குன்றி அழியும்படியும், சந்திரனும், சிவசூரியனும், தேவர்களும் தமது பதவியிலே நிலைபெறவும், ராமபாணத்தைத் தொடுத்து விடுத்த இராமச்சந்திர மூர்த்தியின் திருமருகரே!
கோழி சிலம்ப நலம் பயின்ற கலாப நடம் செய (kOzhi silamba nalam payindra kalAba natam seya) : The rooster crows (from Your staff); the peacock dances gracefully; சிலம்புதல் = ஒலி எழுப்புதல்;
மஞ்சு தங்கிய கோபுரம் எங்கும் விளங்கு மங்கல வயலூரா (manju thangiya gOpuram engum viLangu mangala vayalUrA) : and the clouds settle on the tall towers of the temples in the sacred town VayalUr, Your favourite abode!
சேவல் இனிது கூவ, அழகிய தோகையை உடைய மயில் நடனம் செய்ய, மேகங்கள் தங்கும் உயரமான கோபுரங்கள் எங்கும் விளங்கும் மங்களகரமான வயலூரில் மேவிய வள்ளலே!
கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் (kOmaLa andargaL thoNdar maNdalar) : The handsome celestials, Your devotees, several kings and emperors
வேலன் எனும் பெயர் அன்புடன் புகழ் (vElan enum peyar anbudan pugazh) : have all been praising Your name VElan (the God with the 'vel')
கோடை எனும் பதி வந்த இந்திரர் பெருமாளே. (kOdai enum padhi vandha indhirar perumALE.) : at KOdainagar, where You reside and are worshipped by Indra, the king of the celestials, Oh Great One!
Comments
Post a Comment