230. அண்டர்பதி


ராகம் : சிந்துபைரவிதாளம்: கண்டசாபு (2½)
அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற வருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளுமகிழ்வாக
மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு
மஞ்சினனு மயனாருமெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடிவரவேணும்
புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாளவுயர்தோளா
பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேயமுருகேசா
சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தணில்மேவுபெருமாளே.

Learn The Song



Raga Sindhu Bhairavi (Janyam of 20th mela Natabhairavi)

Arohanam: S R1 G2 M1 P D1 N2 S    Avarohanam: S N2 D1 P M1 G2 R1 S

Learn The Talam



Paraphrase

அண்டர் பதி குடி ஏற மண்டு அசுரர் உரு மாற அண்டர் மன(ம்) மகிழ் மீற ( aNdarpadhi kudi ERa maNdasurar urumaaRa aNdar mana magizh meeRa) : The celestials get back to their land, the form-changing demons are destroyed and the celestials are overjoyed, அண்டர் பதி(aNdar pathi) : Chief of celestials Indra; மண்டசுரர் உருமாற = நெருங்கி வந்த அசுரர்களின் உருமாறி அவர்களை மடியச்செய்து, மண்டு = நெருங்கி வரும்;

அருளாலே அந்தரி ஒடு உடன் ஆடு சங்கரனும் மகிழ் கூர (aruLaalE anthariyodu udan aadu sankaranu magizh koora) : With such blessings, both Kali and Shankara who dances with her, rejoice;

ஐங்கரனும் உமையாளும் மகிழ்வாக(aingkaranum umaiaaLu magizhvaaga) : (seeing this) Ganesha, with five arms, and Mother Parvati are delighted,

மண்டலமும் முநிவோரும் எண் திசையில் உள பேரும் மஞ்சினனும் அயனாரும் எதிர் காண (maNdalamu munivOrum eNdhisaiyil uLa pEru manjinanum ayanaarum edhir kaaNa) : Inhabitants of the earth, sages, security guards (ashta dhik palakas) in all the eight directions, Indra and Brahma watch the spectacle, மஞ்சினன் (manjinan) : Indra;

மங்கை உடன் அரி தானும் இன்பம் உற மகிழ் கூற (mangai udan arithaanum inbamuRa magizh kooRa) : Lakshmi and Vishnu are rapturous with happiness, (திரு)மங்கை ((thiru)mangai) : Lakshmi;

மைந்து மயிலுடன் ஆடி வரவேணும் ( maindhu mayiludan aadi varavENum ) : (In order that all this happens,) come dancing on the strong peacock.

புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள (puNdarika vizhiyaaLa aNdar magaL maNavaaLa) : You have lotus-like eyes! consort of the Indra's daughter Deivayanai!

புந்தி நிறை அறிவாள உயர் தோளா (pundhi niRai aRivaaLa uyar thOLaa ) : Oh, wise one filled with knowledge! புந்தி நிறை (punthi niRai) : filled with knowledge; You have shoulders high as a mountain!

பொங்கு கடல் உடன் நாகம் விண்டு வரை இகல் சாடு பொன் பரவு கதிர் வீசு வடிவேலா (pongu kadaluda naagam viNdu varai igal saadu pon paravu kadhir veesu vadivElaa) : You hold the radiant 'vel' that disperses golden light and dries up the sea with swelling waves, breaks the seven hills and pulverizes the mountain; நாகம்/நகம் (naagam) : has several meanings. Here, it means mountain (Krauncha); இகல் (igal) : strength; விண்டு (vindu) : break;

தண் தரளம் அணி மார்ப (thaN tharaLam aNi maarba ) : You wear a cool pearl necklace on our chest! தரள(ம்) (tharaLam) : pearl;

செம் பொன் எழில் செறி ரூப (sempon ezhil seRi roopa ) : Your beautiful complexion has the rich hue of reddish gold;

தண் தமிழின் மிகு நேய முருகேசா (thaN thamizhin migu nEya murugEsaa) : You love very dearly the cool Tamil language, Oh Murugesa!

சந்ததமும் அடியார்கள் சிந்தை அது குடியான தண் சிறுவை தனில் மேவு பெருமாளே. (santhathamum adiyaargaL chinthaiyadhu kudiyaana thaN siRuvai thanil mEvu perumaaLE.) : You always reside in the minds of true devotees and also in the cool Siruvapuri. சந்ததம்( santhatham) : always;

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே