235. தினமணி சார்ங்க


ராகம் : ஹம்சநாதம்தாளம்: அங்கதாளம் 2 + 1½ + 1½ (5)
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
தினகர னேய்ந்த மாளி கையிலாரஞ்
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாடஇருபாலும்
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசியரசாகி
இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகிவிடலாமோ
வனசர ரேங்க வான முகடுற வோங்கி ஆசை
மயிலொடு பாங்கி மார்க ளருகாக
மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கை யாகி
மலைமிசை தோன்று மாய வடிவோனே
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க நீறு
கருணைகொள் பாண்டி நாடுபெறவேதக்
கவிதரு காந்த பால கழுமல பூந்த ராய
கவுணியர் வேந்த தேவர்பெருமாளே.

Learn The Song




Raga Hamsanadam (Janyam of 60th mela Neethimathi)

Arohanam: S R2 M2 P N3 S    Avarohanam: S N3 P M2 R2 S


Paraphrase

தினமணி சார்ங்க பாணி என (dhinamaNi sArngapANi ena) : Appearing bright like the Sun and like Vishnu who holds the bow SArangam, சூரியன் என்றும், சார்ங்கம் என்னும் வில்லைத் தனது திருக்கையில் தரித்துள்ள திருமால் என்றும், தினமணி = சூரியன்;

மதிள் நீண்டு சால தினகரன் ஏய்ந்த மாளிகையில் (madhiL neendu sAla dhinakaran Eyndha mALigaiyil) : living in a bungalow with long ramparts, where the sun lights up every nook, தினமணி/தினகரன் (dinamaNi/dinakaran) : sun; மதிள்(ல்) (mathil) : rampart, wall;

ஆரம் செழுமணி சேர்ந்த பீடிகையில் இசை வாய்ந்த பாடல் வயிரியர் சேர்ந்து பாட (Aram sezhumaNi sErndha peedigaiyil isai vAyndha pAdal vayiriyar sErndhu pAda) : reclining on a seat adorned with pearls and precious gems to the accompaniment of courtesans singing panegyrics in chorus, பீடிகை (peedigai) : seat; பீடம் ; வயிரியர் (vayiriyar) : hired dancers, stageplayers; hired panegyrists;

இருபாலும் இன வளை பூண் கையார் கவரி இட (iru pAlum ina vaLai pUN kaiyAr kavari ida) : with damsels, wearing similar pairs of bangles, gently fanning on both sides,

வேய்ந்து மாலை புழுககில் சாந்து பூசி அரசாகி (vEyndhu mAlai puzhugagil sAndhu pUsi arasAgi) : leading a royal life, with garlands on the chest smeared with fragrant punugu, sandal paste and incense, புழுகு/புனுகு (puzhugu/punugu) : scent taken from civet cat; அகில் (agil) : sandal tree;

இனிது இறுமாந்து வாழும் இரு வினை நீண்ட காயம் (inidhiRu mAndhu vAzhum iruvinai neenda kAyam) : such a sweet and arrogant life with the body bound, however, by the two karmas – good and bad —

ஒரு பிடி சாம்ப லாகி விடலாமோ (oru pidi sAmbalAgi vidalAmO) : should it end as a fistful of ash?

வனசரர் ஏங்க வான முகடு உற ஓங்கி (vanacharar Enga vAna mugaduRa Ongi) : As the hunters stood awestruck, You grew up hitting the roof of the sky;

ஆசை மயிலொடு பாங்கிமார்கள் அருகாக (Asai mayilodu pAngimArgaL arugAga ) : near the peahen (Valli) the hunters brought up with love, and her friends, பாங்கிமார் (pAngimAr) : friends

மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கையாகி (mayilodu mAngaL sUzha vaLavari vEngai Agi) : You appeared as Vengai tree surrounded by peacocks and deers in the fertile மயில்களும் மான்களும் சூழ்ந்து இருக்க, செழித்து, வரிகளோடு வளர்ந்த வேங்கை மரமாகி

மலை மிசை தோன்று(ம்) மாய வடிவோனே (malai misai thOndru mAya vadivOnE) : mount of Vallimalai, Oh lord with a mystical form!

கன சமண் மூங்கர் கோடி கழு மிசை தூங்க (ganasamaN mUngar kOdi kazhumisai thUnga) : Thousands of dumbfounded samaNa priests (defeated by You in argument) were sent to the gallows, கழு (kazhu) : gallows;

நீறு கருணை கொள் பாண்டி நாடு பெற (neeRu karuNaikoL pAndi nAdu peRa) : and the Kingdom of Pandiyan received the sacred ash that You gave compassionately,

வேதக் கவி தரு காந்த (vEdhakavi tharu kAntha) : Oh, radiant lord! You gave Thevaram which is the essence of vedas; வேதக் கவி (vEdhakavi) : poems that carry the essence of vedas; Thevaram poems sung by Thirugnana Sambanthar who is considered an incarnation of Murugan; காந்த (kAntha) : radiant complexion;

பால கழுமல பூந்த ராய (bAla kazhumala pUndha rAya) : You came as a young boy called Sambantha; You are seated at Seerkazhi, also known as kazhumalam and Poontharaya. கழுமலம் என்றும் பூந்தராய் என்றும் வழங்கப்படும் சீகாழியில் அவதரித்தவரே!

கவுணியர் வேந்த தேவர் பெருமாளே. (kavuNiyar vEndha dhEvar perumALE.) : You are the King of KavuNiyas, Oh Lord, of the Celestials!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே