223. நீல முகிலான
Learn The Song
Raga Kedara Gowlai (Janyam of 28th mela Hari Kambhoji)
Arohanam: S R2 M1 P N2 S Avarohanam: S N2 D2 P M1 G3 R2 SParaphrase
நீல முகில் ஆன குழல் ஆன மடவார்கள் தன நேயம் அதிலே தினமும் உழலாமல் (neela mukil Ana kuzhal Ana madavArkaL thana nEyam athilE thinamum uzhalAmal) : hankering everyday after the bosoms of women with dark blue, cloud-like, hair; முகில் (mugil) : cloud; குழல் (kuzhal) : hair;
நீடு புவி ஆசை பொருள் ஆசை மருள் ஆகி அலை நீரில் உழல் மீன் அது என முயலாமல் (needu puvi Asai poruL Asai maruL Aki alai neeril uzhal meen athu ena muyalAmal) : not exerting myself, like the fish that wanders in the wavy sea, under the illusory desire for acquiring large land and material things; நீண்ட மண், பொன் மீதானவற்றின் மேல் மிகுந்த ஆசை மயக்கம் கொண்டு அதன் காரணமாக அலை வீசும் கடல் நீரில் அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து உழலுகின்ற மீனைப் போல இரையையே தேடி உழலாமல், மருள் (maruL) : delusion;
சதா நீரிலேயே இரையையே தேடி சுழலும் மீனானது, தனக்கு வைப்பட்ட தூண்டிலில் உள்ள பொருளையும் தனக்குக் கிடைத்த இரை என்று கருதிச் சென்று, உண்ண முயன்று மாண்டு விடும். அதே போல் மனிதனும் உலகியலில் உழன்று, இன்பங்களையே தேடி அலைந்து, அந்த உலக இன்பங்களாலேயே துன்பத்தை அடைந்து, கிடைத்தற்கு அரிய உடலையும், வாழ்நாளையும் வீணாக்கி, மடிகிறான்.
காலனது நா அரவ வாயில் இடு தேரை என காயம் மருவு ஆவி விழ அணுகா முன் (kAlanathu nA arava vAyil idu thErai ena kAyam maruvu Avi vizha aNukA mun) : and before my life falls into the inexorable hands of the approaching Yama, the god of death with terrifying speech, and I feel like a frog under the tight grip of a cobra, காலன் என்னை அணுகும் போது அவனுடைய (என்னை) விரட்டும் பேச்சால் பாம்பின் வாயில் அகப்பட்ட தவளை போல் கத்திக்கொண்டு, உடலில் பொருந்தியுள்ள உயிர் அவன் கையில் அகப்படாதபடி அரவம் (aravam) : snake; தேரை (therai) : frog;
காதலுடன் ஓதும் அடியார்களுடன் நாடி ஒரு கால் முருக வேள் எனவும் அருள் தாராய் (kAthaludan Othum adiyArkaLudan nAdi oru kAl muruka vEL enavum aruL thArAy) : kindly bless me to join the company of Your devotees who praise Your glory with love and say along with them, at least once, "Oh Lord MurugA!"
சோலை பரண் மீது நிழலாக தினை காவல் புரி தோகை குற மாதினுடன் உறவாடி ( sOlai paraN meethu nizhalAga thinai kAval puri thOgai kuRa mAthinudan uRavAdi) : You befriended the peacock-like hunter lass Valli who stood under the shadow of the raised bamboo platform built in the millet-field at VaLLimalai to guard the crop;
சோரன் என நாடி வருவார்கள் வன வேடர் விழ சோதி கதிர் வேல் உருவு(ம்) மயில் வீரா (sOran ena nAdi varuvArkaL vana vEdar vizha sOthi kathir vEl uruvu(m) mayil veerA) : You wielded Your dazzling spear and knocked the hunters from the forest who chased you believing you were a thief, Oh valorous lord mounted on the peacock!
கோல அழல் நீறு புனை ஆதி சருவேசரொடு கூடி விளையாடும் உமை தரு சேயே (kOla azhal neeRu punai Athi saruvEsarodu kUdi viLaiyAdum umai tharu sEyE) : You are the child of Parvati who plays around with Shiva, the primordial lord wearing the beautiful holy ash (VibUthi) that is powerful as fire in scorching all the karmas; அழகு பொருந்தியதும், வினைகளை அழிக்கும் நெருப்புப் போன்றதுமான நிருநீற்றைப் புனைந்துள்ளவரும் முதற்பொருளானவரும், எங்கும் நிறைந்துள்ளவரும் ஆன சிவபெருமானோடு கூடி விளையாடுகின்ற உமாதேவியார் பெற்றருளிய குழந்தையே! சருவேசர் (saruvesar/sarveshwar) : super lord, the overlord; அழல் (azhal) : fire; கோல (kOla) : beautiful;
கோடு முக ஆனை பிறகான துணைவா குழகர் கோடி நகர் மேவி வளர் பெருமாளே.(kOdu muga Anai piRakAna thuNaivA kuzhakar kOdi nakar mEvi vaLar perumALE.) : You are the younger brother of GaNapathi, with an elephant face and a prominent tusk! You have chosen KOdi town as Your abode where Lord SivA resides with the name Kuzhagar, Oh Great One! தந்தத்தை முகத்தில் கொண்ட யானையாகிய கணபதிக்குப் பின் அவதரித்த தம்பியே, குழகர் என்னும் திருநாமத்துடன் (சிவபெருமான்) வீற்றிருக்கும் கோடி என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கும் பெருமாளே. கோடு (kOdu) : tusk;
https://youtu.be/gQXoTrp-Gx0 this link has video explanation of the song
ReplyDelete