220. கறுத்த குஞ்சி


ராகம் : அஸாவேரிஆதி (எடுப்பு 3/4 இடம்)
கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
துருத்த வெண்பலு மடைய விழுந்துட்
கருத்து டன்திகழ் மதியு மருண்டுச் சுருள்நோயாற்
கலக்க முண்டல மலமுற வெண்டிப்
பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்
கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக்கொழுமேனி
அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச்சடமாகி
அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற்றிடுவேனோ
புறத்த லம்பொடி படமிக வுங்கட்
டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்
புகட்ட ரங்கிய விரக துரங்கத் திறல்வீரா
பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்
புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப்பொரும்வேலா
சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக்கிரிமேவிச்
செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
பரிச்சு மந்திடு குமர கடம்பத்
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப் பெருமாளே.

Learn The Song




Raga Asaveri (Janyam of 8th mela Hanumatodi)

Arohanam: S R1 M1 P D1 S    Avarohanam: S N2 S P D1 P M1 G2 R1 S

Paraphrase

கறுத்த குஞ்சியும் வெளிறி ( kaRuththa kunjiyum veLiRi) : My black hair has lost its dark color;

எழும் கொத்து உருத்த வெண் ப(ல்)லும் அடைய விழுந்து (ezhum koththu uruththa veNpalum adaiya vizhundhu ) : my prominent white teeth, neatly aligned, have all fallen;

உள் கருத்துடன் திகழ் மதியும் மருண்டு ( utkaruththudan thigazh madhiyu maruNdu) : my intellect, once filled with insightful thoughts, has become muddled up;

சுருள் நோயால் கலக்கமுண்டு அலம் அலம் உற (suruLnOyAR kalakka muNdala malamuRa) : my body and mind have been distressed by diseases, அலம் (alam): misery; perturbation;

வெண்டி பழுத்து எழும்பிய முதுகு முடங்க (veNdi pazhuth thezhumbiya mudhugu mudanga) : having fully ripened and dried up, my erstwhile erect back has crouched down; வெண்டி (vendi) : to become dried up or desiccated;

கழுத்தில் வந்து இளை இருமல் ஒதுங்க ( kazhuththil vandhiLai irumal odhunga) : phlegm and cough collect in my throat,

கொழு மேனி அறத் திரங்கி ஒர் தடி கை நடுங்கப் பிடித்து (kozhu mEni aRath thirangi Or thadikai nadungap pidiththu) : my plump body has shrunk and has to lean on the cane I hold in my trembling hand; அறத் திரங்கி (aRath thirangi) : highly shrivelled; மிகவும் வற்றிச் சுருங்கி;

இடும்பு உறு மனைவியும் நிந்தித்து (idum puRu manaiviyu nindhithu) : ridiculing me, my arrogant wife treats me with scorn; இடும்பு (idumbu) : haughty, impudent;

அடுத்த மைந்தரும் வசைகள் விளம்ப (aduththa maindharum vasaigaL viLamba): standing next to me, my sons speak abusively;

சடமாகி அழுக்கு அடைந்து இடர்ப் படும் உடல் (jadamAgi azhukka daindhu) : i have become inert; my body is dirty and suffers in misery;

பங்கப் பிறப்பு எனும் கடல் அழியல் ஒழிந்திட்டு (idar padumudal pangap piRappenung kadal azhiyal ozhindhittu) : this miserable body is getting ruined in the dismal sea of birth; to end this wreck,

அடுத்திரும் திருவடி தனை என்று உற்றிடுவேனோ (aduththirun thiruvadi thanai endru triduvEnO ) : when will I attain and remain at Your hallowed feet?

புறத் தலம் பொடி பட மிகவும் கட்டு அற (puRath thalam podi pada migavung kattaRa) : various objects in the outer space were shattered to pieces and became chaotic;

பெரும் கடல் வயிறு குழம்ப (perum kadal vayiRu kuzhamba) : the bowels of the vast sea were disturbed;

புகட்டு அரங்கிய விரக துரங்கத் திறல் வீரா (pugatta rangiya viraga thurangath thiRal veerA) : when You stormed and adroitly destroyed (the demons) when You mounted Your horse-like peacock! புகட்டு = (ஆங்காங்குள்ள அசுரர்கள் மீது) புகவிட்டு; அரங்கிய = (அவர்களை) தேய்த்துச் சிதைத்த; துரங்கம்/துரகம் (turangam/turagam) : horse; விரக (viraga): dexterous;

பொருப்பு உரம் படர் கிழி பட வென்று (poruppu uram padar kizhipada vendru) : You pierced and conquered the sprawling and mighty Mount Krouncha; உரம் (uram): strength, might;

அட்டு அரக்கர் வன் தலை நெரிய நெருங்கி (attu arakkar van thalai neriya nerungi) : You killed the demons by strangling their heads together in a tight squeeze;

புதைக் குறும் தசை குருதிகள் பொங்கப் பொரும் வேலா (pudhai kuRum dhasai kurudhigaL pongap porum vElA): all their inner flesh and blood gushed out when You fiercely battled them, Oh Lord with the spear! புதைக் குறும் தசை (puthaik kuRum thasai): flesh that is buried inside;

சிறுத்த தண்டைய ( siRuththa thaNdaiya): You wear cute little anklets on Your ankles!

மதலையொர் அஞ்ச சினத்து மிஞ்சு அரி திரி தரு குன்ற (madhalai or anja sinaththu minju ari thiri tharu kundra) : You went to the forest in VaLLimalai where ferocious lions roam about scaring away the children; அரி (ari) : lion; சினத்து மிஞ்சு அரி (sinaththu minju ari) : angry lion;

தினைப்புனம் திகழ் குறமகள் கொங்கை கிரி மேவி (thinaip punam thigazh kuRamagaL kongai giri mEvi ) : reaching the millet-field where the damsel of the KuRavAs, VaLLi, lived, and hugged her large bosoms,

செருக்கு நெஞ்சு உடை முருக (serukku nenjudai muruga): and Your mind was filled with delightful pride;

சிகண்டி பரி சுமந்திடு குமர கடம்ப (sikaNdip pari sumandhidu kumara kadamba): You mount the horse-like peacock, Oh Kumara; You wear the garland of kadappa flowers. சிகண்டி (sikaNdi) : Any fowl or peacock; பரி (pari) : horse;

திருக்குடந்தையில் உறை தரு கந்தப் பெருமாளே (thiruk kudandhaiyil uRai tharu kandhap perumALE) : You have Your abode in Thirukkudanthai (KumbakONam), Kandha, Oh Great One!

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே