219. வேழமுண்ட


ராகம் : சாரங்காஅங்கதாளம் (8½)
1½ + 2 + 2 + 2 + 1
வேழ முண்ட விளாகனியதுபோல
மேனி கொண்டு வியாபகமயலூறி
நாளு மிண்டர்கள் போல்மிகஅயர்வாகி
நானு நைந்து விடாதருள்புரிவாயே
மாள அன்றம ணீசர்கள் கழுவேற
வாதில் வென்ற சிகாமணிமயில்வீரா
காள கண்ட னுமாபதிதருபாலா
காசி கங்கையில் மேவிய பெருமாளே.

Learn The Song




Raga Saranga (Janyam of 65th mela Kalyani)

Arohanam: S P M2 P D2 N3 S    Avarohanam: S D2 P M2 R2 G3 M1 R2 S


The Song in Kurinji ragam


Paraphrase

யானைகள் தான் மிகவும் விரும்பும் விளாம்பழத்தை ஓட்டுடன் அப்படியே விழுங்கிவிடுமாம்! உள்ளே உள்ள எல்லாவற்றையும் சாப்பிட்டுவிடும்; ஆனால் வெளியே கழிவாகத் தள்ளும்போதும் அது அப்படியே பழம்போலக் காட்சி தரும். இலக்கியங்களில் இதை கஜபுக்த கபித்த நியாயம் ( गजभुक्त कपित्थ न्यायः) — யானை சாப்பிட்ட விளாம்பழம் — என்பார்கள். கஜம் – யானை; கபித்தம் = விளாம்பழம்;

உண்மையில் இத்தகைய கோதற்ற விளா என்பது தன் முட்டைகளை விளா பூவில் இடும் ஒரு வகை பூச்சியால் ஏற்படுவது. அந்த பூசசி விளா பிஞ்சாகும் போது முட்டையிலிருந்து வெளி வந்து பிஞ்சின் உள் இருக்கும் சதையை சாப்பிட்டு வளர்ந்து, பிறகு நுண்ணிய துவாரமொன்றின் வழியாக வெளி வந்து பறந்து விடும். விளாப்பழம் உள்ளே கோது இல்லாமல் அளவில் பெரிதாகி வளர்ந்து முற்றியவுடன் கீழே விழும். இதை நாம் யானை உண்ட விளாம்பழம் என சொல்வோம்.

அதே போல் நமக்கும் மயல்/மயக்கம்/ஆசை உள்ளே ஊறி விட்டால், நாமும் வெளிப்புறத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் உள்ளே வெறும் சாரமில்லாத மனிதர்கள் ஆவோம்.

வேழம் உண்ட விளாகனி அதுபோல (vEzham uNda viLA kani adhupOla) : Like the viLAm fruit that has been consumed by the disease called vEzham (destroying the insides and leaving behind only the hard shell),

மேனி கொண்டு வியாபக மயலூறி (mEni koNdu viyApaka mayalURi) : my body has become a mere shell, since lust has spread throughout the body.

நாளு மிண்டர்கள் போல் மிக அயர்வாகி ( nALu mindargaL pOl miga ayarvAgi) : Like a stupid fool, my ignorance has grown stronger and I have become tired.மிண்டன் = திண்ணியோன்; அறிவில்லாதவன்; முரட்டுத்தனமாக, அறிவீனத்தோடே பேசுபவன்;

நானு நைந்து விடாதருள் புரிவாயே (nAnu naindhu vidAdh aruL purivAyE) : Please do not let me deteriorate any further and bestow Your grace on me.

மாள அன்று அமணீசர்கள் கழுவேற (mALa andru amaNeesargaL kazhu ERa) : Once, the samaNa saints ascended the gallows to die,

வாதில் வென்ற சிகாமணி மயில்வீரா (vAdhil vendra sikAmaNi mayil veerA) : when they were defeated in a debate by You, the distinguished warrior on the peacock! சிகாமணி ( sikhamaNi) : chief gem in a crown as worn on the head, distinguished;

காள கண்டன் உமாபதி தருபாலா ( kALa kaNtan umApathi tharu bAlA) : You are the son of SivA, the consort of UmAdEvi, and who has a black patch of poison in His throat காள கண்டன் (kALa kandan) : person with poison in the throat; ஆலகால விடத்தை உண்ட கரிய கண்டத்தை உடையவரும், உமையம்மையாரது கணவரும் ஆகிய சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரரே!

காசி கங்கையில் மேவிய பெருமாளே.(kAsi gangaiyil mEviya perumALE.) : You preside at KAsi, on the banks of the Ganga river, Oh Great One!

Comments

Post a Comment

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

55. விறல் மாரன்

59. அவனிதனிலே