273. மருக்குலாவிய


ராகம் : காபிதாளம்: சதுச்ர ரூபகம் (9)
மருக்கு லாவிய மலரணைகொதியாதே
வளர்த்த தாய்தமர் வசையது மொழியாதே
கருக்கு லாவிய அயலவர் பழியாதே
கடப்ப மாலையை யினிவர விடவேணும்
தருக்கு லாவிய கொடியிடைமணவாளா
சமர்த்த நேமணி மரகதமயில்வீரா
திருக்கு ராவடி நிழல்தனி லுறைவோனே
திருக்கை வேல்வடி வழகியபெருமாளே

Learn The Song



Raga Kapi (Janyam of 22nd mela Karaharapriya)

Arohanam: S R2 M1 P N3 S    Avarohanam: S N2 D2 N2 P M1 G2 R2 S


Paraphrase

This song is Agam poetry based on Nayaka-nayaki bhava.

மரு குலாவிய மலர் அணை கொதியாதே (maru kulAviya malar aNai) : Lest my bed, filled up with fragrant flowers, scorch me; நறுமணம் கமழும் மலர்ப் படுக்கை விரகத்தின் காரணமாக கொதித்துச் சூடு தராமலும்,

வளர்த்த தாய் தமர் வசை அது மொழியாதே (vaLarththa thaythamar vasaiyadhu mozhiyAdahE) : lest my mother and relatives slander me, and தமர் (thamar) : relatives;

கரு குலாவிய அயலவர் பழியாதே (karu kulAviya ayalavar pazhiyAdhE) : lest strangers, who became friendly based on my family by birth, hurl accusations at me, OR intelligent and righteous people in the neighbourhood treat me scornfully, (கரு)பிறப்பின் அடிப்படையை கொண்டு நட்பாடிய சுற்றத்தார் பழிச் சொல் கூறாமலும்; கரு (karu) : embryo, foetus, birth; கரு குலாவிய(karukkulaviya) : friendship based on birth, OR
அறிவும் நேர்மையும் உடைய அயலவர்கள் பழிச்சொல் கூறாமலும்; கருக்கு (karukku : the edge of a knife, sword etc., keenness, கூர்மை, அறிவுக்கூர்மை, நேர்மை;

கடப்ப மாலையை இனி வர விடவேணும் (kadappa mAlaiyai inivara vidavENum) : You must now send me Your kadappa garland as a token of Your love.

தரு குலாவிய கொடி இடை மணவாளா(tharuk kulAviya kodiyidai maNavALA ) : You are the consort of DEvayAnai, reared up under the KaRpaga Tree and has a waist like a creeper. தரு (tharu) : (karpaga) tree;

சமர்த்தனே மணி மரகத மயில் வீரா (samarththanE maNi marakatha mayil veerA ) : You are the accomplished One! You ride the emerald-green peacock!

திரு குரா அடி நிழல் தனில் உறைவோனே (thirukkurA adi nizhal thanil uRaivOnE) : You reside under the shade of the ThirukkurA tree in Thiruvidaikkazhi.

திரு கை வேல் வடிவு அழகிய பெருமாளே(thirukkai vEl vadivazhagiya perumALE.) : You hold the beautiful Spear in Your hand and have a lovely form, Oh Great One!

திருவிடைக்கழி ஸ்தல சிறப்பு

சிவாலய அமைப்பில் அமைந்த திருவிடைக்கழி திருமுருகன் ஆலயத்தில் அனைத்து சிவமூர்த்தங்களும் வலக்கரத்தில் வஜ்ர வேலுடன் சுப்ரமண்ய சொரூபமாக விளங்குகின்றன. இந்தத் திருக்கோயிலில் மூலவர் பாலசுப்ரமணியருடைய கருவறைக்குள் மற்றொரு கருவறையில் முருகனும் தம்முள் ஒருவரே என்பதை காட்டும் விதமாக பாபநாசப்பெருமான் எனும் சிவலிங்கத்திருமேனியாக அருள்வதை காணலாம். இக்கோயிலில் சிவபிரானுக்குரிய தல விருட்சம் மகிழமரம் மற்றும் முருகனுக்குரிய விருட்சம் குராமரம் இரண்டையும் பார்க்கலாம். சோமாஸ்கந்தர் ஸ்தானத்தில் வள்ளிதெய்வானை சமேதராக முருகனும் தனி அம்மனாக தெய்வானையும் காட்சி அளிக்கிறார்கள்

Comments

Popular posts from this blog

வேல்மாறல் பாராயணம்

3. வேல் வகுப்பு

59. அவனிதனிலே